Advertisement
சைவம்

மணமணக்கும் மசாலா உப்புமா செய்வது எப்படி ?

Advertisement

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர் உப்புமா என்ற பெயரை கேட்டாலே தெரித்து ஓடி விடுகிறார்கள் அதற்கு காரணம் எளிமையான முறையில் செய்து விடலாம் என்பதால் அடிக்கடி பலர் வீடுகளில் ஒரே மாதிரியான உப்புமா அடிக்கடி செய்து கொடுப்பதுதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் உப்புமா செய்யும்போது வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : தாருமாறான மசாலா பொங்கல் செய்வது எப்படி ?

Advertisement

ஆம், அந்த வகையில் இன்று மணமணக்கும் மசாலா உப்புமா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதில் நாம் காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து தயார் செய்வதால் இது அட்டகாசமான சுவையில் இருக்கும் நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மசாலா உப்புமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

மசாலா உப்புமா | Masala Upma Recipe in Tamil

Print Recipe
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர் உப்புமா என்ற பெயரை கேட்டாலே தெரித்து ஓடி விடுகிறார்கள் அதற்கு காரணம் எளிமையான முறையில் செய்து விடலாம் என்பதால் அடிக்கடி பலர் வீடுகளில் ஒரே மாதிரியான உப்புமா அடிக்கடி செய்து கொடுப்பதுதான் ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறையும் உப்புமா செய்யும்போது வித்தியாசமாக சமைத்துக் கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஆம், அந்த வகையில் இன்று மணமணக்கும் மசாலா உப்புமா பற்றி தான் நாம் பார்க்க இருக்கிறோம். இதில் நாம் காய்கறிகள் மற்றும் மசாலா சேர்த்து தயார் செய்வதால் இது அட்டகாசமான சுவையில் இருக்கும் நீங்கள் இதை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இந்த மசாலா உப்புமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course Breakfast
Cuisine Indian, TAMIL
Keyword upma, உப்புமா
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 120

Equipment

  • 1 கடாய்
  • 1 குழம்பு பாத்திரம்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய தட்டு

Ingredients

காய்கறி வேக வைக்க

  • 1 கேரட் நறுக்கியது
  • 1 கப் பீன்ஸ்
  • ½ கப் பச்சை பட்டாணி
  • ½ tbsp உப்புமா

வறுத்து அரைக்க

  • 3 வர மிளகாய்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 tbsp மல்லி
  • 1 tbsp கடலை பருப்பு
  • 1 tbsp துருவிய தேங்காய்

உப்புமா செய்யா

  • 1 tbsp நெய்
  • 300 கிராம் ரவா
  • 2 tbsp எண்ணெய்
  • 1 tbsp கடுகு
  • 1 tbsp உளுந்த பருப்பு
  • 1 tbsp கடலை பருப்பு
  • 2 tbsp முந்திரி
  • 1 tbsp இஞ்சி பொடியாக நறுக்கியது
  • 2 பச்சை மிளகாய்
  • 1 பெரிய வெங்காயம்
  • கருவேப்பிலை சிறிது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 தக்காளி
  • வேக வைத்த காய்கறி
  • வறுத்து அரைத்த மசாலா
  • 2 ½ tbsp உப்பு
  • 4 கப் தண்ணீர்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு குழம்பு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய கேரட், பீன்ஸ் மற்றும்
    Advertisement
    பட்டாணி போன்ற காய்கறிகளை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் இல்லாமல் வர மிளகாய், பட்டை, கிராம்பு, மல்லி மற்றும் கடலை பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளவும், அனைத்து பொருட்களும் நன்றாக வறுபட்டதும் இதனுடன் சிறிது துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக வறுத்து பின் மிக்ஸியில் சேர்த்து பொடியாக்கி கொள்ளுங்கள்.
  • அதன் பிறகு கடாயில் சிறிது அளவு நெய் ஊற்றி நெய் உருகி காய்ந்ததும் 300 கிராம் அளவிலான ரவையை சேர்த்து நன்றாக வறுத்துக்
    Advertisement
    கொள்ளவும். ரவை நன்றாக வறுபட்டதும். அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போன்ற பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கவும், பின் அனைத்து பொருட்களும் நன்றாக வதக்கிய பின் இதனுடன் பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் இதனுடன் சிறிதளவு கருவேப்பிலையும் சேர்த்து நன்கு வதக்கவும் பின்பு இதனுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் இதனுடன் ஒரு நறுக்கிய தக்காளியும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும், தக்காளி மென்மையாக வந்ததும்.
  • பின் நாம் வேக வைத்த காய்கறிகளையும் இதனோடு சேர்த்து சிறிது மல்லி இலை தேவையான அளவு உப்பு மற்றும் நாம் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக வதக்கிக் கொள்ளவும். அதன் பின்பு காய்கறி வேக வைத்த தண்ணீருடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு மசாலா நன்கு கொதித்து வந்ததும் இதனுடன் ரவையை சேர்த்துக்கொண்டே கிளறி விடுங்கள் ரவையை கட்டி இல்லாமல் கிளறி விட்டு பின்பு ரவை நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும் இதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி விட்டு இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் மணமணக்கும் மசாலா உப்புமா தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 120kcal | Carbohydrates: 60g | Protein: 13g | Fat: 7.27g | Saturated Fat: 1.1g | Cholesterol: 2.7mg | Sodium: 67mg | Potassium: 364mg | Fiber: 2.13g | Sugar: 3.56g | Vitamin A: 22IU

English Overview: masala upma is one of the most important dishes in south india. masala upma recipe or masala upma seivathu eppadi or masala upma recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.

Advertisement
Prem Kumar

Recent Posts

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

41 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

2 மணி நேரங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

2 மணி நேரங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

15 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

15 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

16 மணி நேரங்கள் ago