க்யூட்டான குட்டி குட்டி மினி வடை செய்யலாம் வாங்க!

- Advertisement -

மாலை நேரத்துல டீ யோட ஒரு வடை சாப்பிட்டா அந்த மாலை நேரமே அழகான மாதிரி இருக்கும். வடகல்ல பல வகைகள் இருக்கும் உளுந்து வடை பருப்பு வடை வாழைப்பூ வடை அப்படின்னு ஒரு பெரிய லிஸ்டே போடலாம் இந்த வடகள் எல்லாமே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு சிலர் வீட்ல காலைல எழுந்த உடனே காலையில டீ குடிக்கும் போதே வடையோட தான் அந்த நாளவே ஸ்டார்ட் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு எல்லாருடைய வாழ்க்கையிலும் வடை ஒரு முக்கிய பங்கு வகிக்கும்னே சொல்லலாம்.

-விளம்பரம்-

என்னதான் டீ கடையில பெரிய பெரிய வடைகளா போட்டாலும் மாலை நேரங்கள்ல ரோட்டோரங்கள்ல தள்ளுவண்டியில வச்சு போடற குட்டி குட்டி மினி வடை நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். பத்து ரூபாய்க்கு மூணு அப்படின்னு சொல்லி விப்பாங்க அதை வாங்கிட்டு வந்து வீட்டில் கொடுக்கும்போது குழந்தைங்க ரொம்ப குசியா ஆகிடுவாங்க. அந்த அளவுக்கு அந்த வடை எல்லாமே ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். பெரிய வடை சாப்பிட விருப்பம் இல்லாதவர்களுக்கு குட்டி குட்டி வடை ரொம்பவே பிடிக்கும்.

- Advertisement -

ஆனா கடைகள்ல மட்டும்தான் அது சூப்பரா இருக்கும் வீட்டில் செஞ்சா நல்லா இருக்காது அப்படின்னு சில பேர் நெனச்சிட்டு இருப்போம். ஆனா அப்படி கிடையாது வீட்டிலேயே பெரிய வடையும் நம்ம செய்ய முடியும் குட்டி குட்டி க்யூட்டான மினி வடையும் நம்மளால செய்ய முடியும். அந்த வகையில வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த க்யூட்டான குட்டி குட்டி மினிவடை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இந்த குட்டி குட்டி வாடகை நம்ம தயிர் சாதம் தக்காளி சாதம் லெமன் சாதம் புளி சாதம் சாம்பார் சாதம் எல்லாத்துக்கூடையும் வைத்து சாப்பிடலாம் காம்பினேஷன் ரொம்பவே சூப்பரா இருக்கும். ஒரு வடை சாப்பிடுற இடத்துல மூணு வடை குட்டி குட்டியா சாப்பிடும் போது நிறைய வடை இருக்க மாதிரி நமக்கு பீல் ஆகும் அதனால குழந்தைகளை ரொம்ப ரொம்ப குஷி ஆகி அதை சாப்பிடுவாங்க. இப்ப வாங்க குழந்தைகளுக்கு ரொம்பவே புடிச்ச குட்டி குட்டி மினி வடை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

மினி வடை | Mini Vadai Recipe In Tamil

என்னதான்டீ கடையில பெரிய பெரிய வடைகளா போட்டாலும் மாலை நேரங்கள்ல ரோட்டோரங்கள்ல தள்ளுவண்டியில வச்சு போடற குட்டி குட்டி மினி வடை நிறைய பேருக்கு பேவரட்டா இருக்கும். பத்து ரூபாய்க்கு மூணு அப்படின்னு சொல்லி விப்பாங்க அதை வாங்கிட்டு வந்து வீட்டில் கொடுக்கும்போது குழந்தைங்க ரொம்ப குசியா ஆகிடுவாங்க. அந்த அளவுக்கு அந்த வடை எல்லாமே ரொம்ப டேஸ்ட்டா சூப்பரா இருக்கும். பெரிய வடை சாப்பிட விருப்பம் இல்லாதவர்களுக்கு குட்டி குட்டி வடை ரொம்பவே பிடிக்கும்.
Prep Time5 hours
Active Time15 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: MIni Vadai
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 250 கிராம் கடலை பருப்பு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கடலை பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்
  • கடலைப் பருப்பு நன்றாக ஊறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
  • பெரிய வெங்காயத்தையும் மல்லி இலைகளையும் பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள கடலை பருப்பு பெரிய வெங்காயம் மல்லி இலைகள் பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கலந்து வைத்துள்ள மாவிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டி போட்டு நன்றாக வேக வைத்த பொன்னிறமாக எடுத்தால் சுவையான க்யூட்டான குட்டி குட்டி மினிவடை தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 2g | Iron: 1mg

இதையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வடை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

-விளம்பரம்-