Advertisement
சைவம்

சுவையான முடகத்தான் கீரை சாதம் வீட்டில் இப்படி செஞ்சி பாருங்கள்! ஒரு பிடி சாதம் கூட மிஞ்சாது!

Advertisement

கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும். கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள்.

இந்த மூன்றைவிட முடக்கத்தான் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, முடக்கத்தான் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது. வாரம் இரண்டு நாள் கீரை சாதம் சாப்பிட்டால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு நல்லதுதான். முடக்கத்தான் கீரையில் இருக்கும் சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்புச்சத்து பெண்களுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை நல்கும்.

Advertisement

மேலும் இதில் இருக்கும் புரத சத்து, நீர் சத்து, கொழுப்பு சத்து, மாவு சத்து போன்ற அனைத்து சத்துக்களும் நம் உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. தினமும் ஒவ்வொரு கீரை வகையை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்களுக்கு குட் பை சொல்லலாம். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கீரைகள் சேர்த்த சாதமாக செய்து கொடுத்தால் சப்பு கொட்டி சாப்பிடுவார்கள். அந்த வகையில் முடக்கத்தான் கீரை சாதம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

முடகத்தான் கீரை சாதம் | Mudakathan keerai Rice recipe in tamil

Print Recipe
கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும்.
Advertisement
கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் கூட. கீரையை கூட்டாகவோ, ரசமாகவோ செய்து பயன்படுத்த முடியும். அதேபோல கீரை சாதமாகவும் செய்து சாப்பிடலாம். கீரை சாதம் அல்லது க்ரீன் ரைஸ் என்றதுமே, பலரும் புதினா சாதம், கறிவேப்பிலை சாதம் அல்லது வெந்தயக்கீரை சாதம் செய்துவிடுவார்கள். இந்த மூன்றைவிட முடக்கத்தான் கீரையின் ருசி, குழந்தைகளின் நாவுக்கு ரொம்ப பிடிக்கும். தவிர, முடக்கத்தான் கீரை குடலுக்கும், இதயத்துக்கும் நல்லது.
Course LUNCH
Cuisine Indian
Keyword keerai Rice
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 3 People
Calories 23

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 1 கப் வேகவைத்த சாதம்
  • 1 கப் முடக்கத்தான் கீரை
  • 1 துண்டு இஞ்சி
  • 4 பச்சை மிளகாய்
  • 2 வர மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • புளி எலுமிச்சை அளவு
  • 2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 டீஸ்பூன் கடுகு

Instructions

  • முதலில் முடக்கத்தான் கீரையை நன்கு அலசி விட்டு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் முடக்கத்தான் கீரை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், புளி, உளுத்தம் பருப்பு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • இவை அனைத்தையும் ஆற வைத்து ஒரு மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் மிளகாய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
  • பின் இந்த அரைத்த விழுதை இதில் சேர்த்து நன்றாக ஒரு பத்து நிமிடம் வதக்கி எடுத்து கொள்ளவும்.
  • பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து பிறகு வடித்த சாதத்தை போட்டுக் கிளறி பரிமாறவும்.
  • அவ்வளவுதான் சுவையான முடக்கத்தான் கீரை சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 23kcal | Carbohydrates: 1.63g | Protein: 2.86g | Sodium: 79mg | Potassium: 558mg | Fiber: 2.2g | Vitamin A: 937IU | Vitamin C: 28.1mg | Calcium: 99mg | Iron: 2.71mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

1 மணி நேரம் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

2 மணி நேரங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

4 மணி நேரங்கள் ago

வீட்ல இட்லி தோசை மாவு இல்லனா இந்த மாதிரி தக்காளி தோசை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பொதுவாக எல்லாரோட வீட்லயும் இட்லி தோசைக்கு மாவு இருந்து கிட்டு தான் இருக்கும். அப்படி மாவு தீர்ந்து போயிட்டா கூட…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 16 மே 2024!

மேஷம் தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் சோம்பேறி மனப்பான்மையால் வேலை…

6 மணி நேரங்கள் ago

மீந்து போன சப்பாத்தியை வீணாக்காமல் அதில், சூப்பரான சப்பாத்தி நூடுல்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

பெரும்பாலானோரின் வீட்டில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். அப்படி உங்கள் வீட்டில் இரவு செய்து சப்பாத்தியானது மீதம்…

16 மணி நேரங்கள் ago