முடக்கத்தான் கீரை பக்கோடா

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது மு

By Prem Kumar · 11/4/2024

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது முடக்கத்தான் கீரை பக்கோடா. தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது.

மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. பொதுவாக வெங்காயம், முட்டை கோஸ் போன்ற காய்கறிகளை கொண்டு பக்கோடா செய்வது வழக்கம். இதை ஆரோக்கியமானதாக மாற்ற பக்கோடாவுக்கான மாவில் கொஞ்சம் கீரைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான எந்த கீரையையும் பயன்படுத்தலாம். கீரை உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதில் இந்தக் கீரை தான் என்று இல்லை அனைத்து வகை கீரையுமே நல்லது தான். ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு விதமான சத்து இருக்கிறது.

தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. ஆனால் குழந்தைகளை இந்த கீரையை சாப்பிட வைப்பது ஒன்றும் சாதாரண காரியம் இல்லை. அப்படி கீரை சாப்பிடாத குழந்தைகளை அவர்களுக்கு பிடித்த உணவாகவே மாற்றி சமைத்து தந்தால் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். கீரை சாப்பிடாத குழந்தைகளும் இந்த ஸ்நாக்ஸை விரும்பி சாப்பிடுவார்கள். கடையில் வாங்குவதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில், வீட்டிலேயே செய்து கொடுக்கலாம்.

இதனையும் படியுங்கள் : ருசியான கோதுமை கீரை பக்கோடா செய்வது எப்படி? டீ கொதிக்கும் நேரத்தில் மொறு மொறு பக்கோடா தயார்!

Recipes AMP · Quick view
View full