மோசமான நோய்களைப் பரப்பும் கொசுக்களை இயற்கை முறையில் விரட்டுவது எப்படி ?

- Advertisement -

மழைக்காலம் வந்தாலே பலவிதமான நோய்களும் வரிசைகட்டி வரும். அதே நேரத்துல கொசுக்களோட தொல்லையும் அதிகமா இருக்கும். இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலப்பான்னு சினிமாவுல ஜோக் அடிக்கலாம். ஆனா, உண்மையில கொசுத்தொல்லையை தாங்க முடியாது. கொசுக்கள் நிறைய நோய்கள் வர்றதுக்கு முக்கிய காரணமா இருக்கு. முக்கியமா சொல்லப்போனா டெங்கு மாதிரி காய்ச்சல் வர்றதுக்கும், மலேரியா காய்ச்சல் வர்றதுக்கும் இந்த கொசுக்கள்தான் முக்கியக் காரணம். அதனால கொசுக்களை ஒழிக்கிறதுல நாம கவனம் செலுத்தணும். அதுவும் முக்கியமா மழை காலத்திலயும் பனிக்காலத்திலயும் கொசுக்கள் அதிகமா இருக்கும். அதனால அந்த காலகட்டங்கள்ல கொசு ஒழிப்புல கவனம் செலுத்தணும்.

-விளம்பரம்-

கொசுவை அழிக்கணும்

முதல்ல வீட்டைச் சுத்தி தண்ணி தேங்காம பாத்துக்கிடுறது நல்லது. அப்படியே தண்ணி தேங்கினாலும் அதுல கொசு முட்டையிட்டு வளருதான்னு பார்த்து அதை அழிச்சிடணும். இது ஒரு பக்கம் இருந்தாலும் நம்ம வீடுகள்ல கொசு நுழையாம பாத்துக்கிடுறது நல்லது. வீட்டுல துணிமணிகள், நெரிசலான இடங்கள்ல கொசுக்கள் அடைஞ்சிருக்கும். அந்தமாதிரி இருந்தா உடனே அங்க இருந்து கொசுக்களை விரட்டி விடுறது நல்லது. முக்கியமா சாயங்காலம் நாலு மணியில இருந்து ஏழு மணி வரைக்கும் கொசுக்கள் வீட்டுக்குள்ள நுழையும். அதே மாதிரி அதிகாலை நேரத்துலயும் கொசுக்கள் வீட்டுக்குள்ள நுழையும். அந்த நேரங்கள்ல வீட்டு கதவு, ஜன்னலை திறந்து வைக்காம இருக்கிறது நல்லது.

- Advertisement -

நொச்சி வேப்பிலை புகைமுட்டம்

கொசுக்களை விரட்டுறதுக்கு சாயங்கால நேரம் நல்லது. முக்கியமா சாயங்கால நேரங்கள்ல புகைமூட்டம் போட்டு கொசுக்களை விரட்டணும். அதாவது நொச்சி, வேப்பிலை மாதிரி இலைகளை காயவச்சி அதை எரிக்கிறது மூலமா கொசுக்கள் அந்த இடத்தை விட்டு விலகிப்போயிடும். நொச்சி இலையையும், வேப்ப இலையையும் காய வச்சு பொடியாக்கி அதோட குங்கிலியம், சாம்பிராணி சேர்த்து நாமளே தூபம் காட்டலாம். சிலபேர் வேற சில பொருள்களையும் சேர்த்து புகைமூட்டமோ, தூபமோ காட்டி கொசுவை விரட்டுறாங்க. வீட்டு உள்பகுதியில கூட இந்தமாதிரி தூபம் காட்டுனா வீடும் வாசனையா இருக்கும், கொசுக்களும் விலகிப் போயிரும்.

ஆஸ்துமா மூச்சுத்திணறல்

புகைமூட்டம் போடும்போது மூச்சுத்திணறல் உள்ளவங்க அந்த இடத்துல இருக்காம இருந்தா ரொம்ப நல்லது. ஒருவேளை வயசானவங்களா இருந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏன்னா நாம நல்லது செய்யப்போய் அது அவங்களுக்கு வேற மாதிரி பிரச்சினைகளை உண்டுபண்ணும். பலவீடுகள்ல வயசானவங்களோட பிரச்சினைகளை கண்டுக்கிட மாட்டாங்க. கடைசியில புகைமூட்டத்தால மூச்சுத்திணறல் உண்டாகி அவங்க வேற சில சிக்கல்களை சந்திப்பாங்க. அதனால கவனமா இருக்கிறது நல்லது. ஆஸ்துமா, அலர்ஜி உள்ளவங்களுக்கும் புகை ஆகாதுங்கிறதை புரிஞ்சிக்கிட்டு நடக்கணும்.

புதினா வெள்ளைப்பூண்டு

சூடம்… அதாவது கற்பூரத்தை தண்ணியில கரைச்சு தெளிக்கலாம். இல்லனா ஒரு பாத்திரத்துல கற்பூரத்தை கரைச்சி வச்சாகூட போதும். அது மட்டுமில்லாம புதினாவையும், கிராம்பையும் அரைச்சி தண்ணி சேர்த்து வீட்டுக்குள்ள அங்கங்க தெளிக்கலாம். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி வெள்ளைப்பூண்டை நசுக்கி தலையணைக்கு பக்கத்திலயும், பக்கவாட்டுப் பகுதியிலயும் வச்சா கொசுக்கள் வராது. கொசுக்கள் மட்டுமில்ல விஷப்பூச்சிகளும்கூட பக்கத்துல நெருங்காது. வெள்ளைப்பூண்டு தூக்கமின்மை பிரச்சினையை சரிபண்ண உதவும். வெள்ளைப்பூண்டு தோலையும், வெங்காயத்தோலையும் புகைமூட்டம் போடலாம். அதுவும்கூட கொசுவுக்கு ஆகாது. இந்த மாதிரி பல வழிகள்ல கொசுக்களை விரட்டலாம்.

-விளம்பரம்-

நறுமணம் கொசுவுக்கு ஆகாது

வீட்டு வாசல் முன்னாடி புதினா, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, துளசி செடிகளை வளர்க்கறதுகூட கொசு வராம பார்த்துக்கிடும். கற்பூரவள்ளி இலைகளை நசுக்கி தண்ணி விட்டு கலந்து வீட்டுல அங்கங்க தெளிச்சாலும் கொசுக்கள் வராது. ரோஸ்மேரி, லாவெண்டர் மாதிரி செடிகளை வளர்த்தாலும் கொசுக்கள் விலகிப்போயிரும். இந்த செடிகளை வளர்க்கிறது மட்டுமில்லாம நல்லா நசுக்கி தண்ணியில கலந்து வீடு முழுக்க தெளிக்கலாம். பொதுவா நறுமணம் வீசுனா அந்த இடத்துல கொசுக்கள் இருக்காது. இந்தமாதிரி வேற சில இயற்கையான நறுமணம் உள்ள பொருள்களை வச்சிட்டு வந்தாலும் கொசுக்கள் விலகிப்போயிரும்.

இயற்கை கொசுவிரட்டி

தேங்காய் ஓட்டையும் சில மூலிகைகளையும் சேர்த்து ஒரு இயற்கையான கொசுவிரட்டி செய்யலாம். தேங்காய் ஓட்டை சில பேர் சிரட்டைன்னு சொல்வாங்க. அதை உடைச்சி பொடியாக்கி அதோட லெமன் கிராஸ்னு சொல்லக்கூடிய எலுமிச்சைபுல், தர்ப்பைப்புல், நொச்சி இலை, வேப்பிலை எல்லாத்தையும் காயவச்சி பொடியாக்கி புகைமூட்டம் போட்டாலும் கொசுக்கள் வராது. இந்த கலவையை நல்லா அரைச்சி தண்ணி சேர்த்து வில்லை மாதிரி தயார் பண்ணி வச்சிட்டு அதை கம்ப்யூட்டர் சாம்பிராணி மாதிரி எரிச்சாலும் கொசுக்கள் விலகிப்போயிரும்.

உன்னிச்செடி தேங்காய் எண்ணெய்

இன்னைக்கி சூழல்ல பலபேர் அவங்களுக்கு தெரிஞ்ச மூலிகைகளை பயன்படுத்தி கொசுவத்தி தயாரிக்கிறாங்க. சிலபேர் ரோட்டோரமா களைச்செடியா வளர்ந்து நிக்குற உன்னிச்செடியோட இலையைக்கூட காய வச்சி எரிச்சா கொசுக்கள் வராது. இன்னைக்கு சூழல்ல நுரையீரல் சம்பந்தமான நிறைய நோய்கள் வர்றதுக்கு லிக்யூட், கொசு விரட்டிகளும் காரணமா இருக்கும். அதனால் இயற்கை முறையில கொசுக்களை விரட்டுனா.

-விளம்பரம்-

இதுமாதிரி நோய்கள் வராம பாத்துக்கிடலாம். இன்னும் சில பேர் ராத்திரி தூங்கும்போது உடம்பு முழுக்க தேங்காய் எண்ணெயை தடவிட்டு தூங்குவாங்க. அதுகூட கொசுக்களை விரட்டிரும்.
இயற்கை முறையில கொசுக்களை விரட்டி நோய்கள் வராம பார்த்துக்கிடுங்க. ஏற்கெனவே சொன்னமாதிரி கொசுக்கள் பல நோய்களுக்கு காரணமா இருக்கிறதால அதையெல்லாம் விரட்டுறது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here