Advertisement
சைவம்

ஓட்ஸ் வைத்து இவ்வளவு மிருதுவான சப்பாத்தியா ? கோதுமை சப்பாத்தி போல ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ருசியாகவும் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்!

Advertisement

ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில் ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயே சாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாக்கணும்.

ஓட்ஸ் உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். டயட்டில் இருப்பவர்கள், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்லது. இன்று ஓட்ஸ், வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Advertisement

ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி | Oats vegetable Chapati Recipe In Tamil

Print Recipe
ஆரோக்கியத்தில் அதிக அக்கறையுடன் இருப்பவர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சுக்கணும். பொதுவாக கோதுமை மாவில்ஆரோக்கியத்திற்காக சப்பாத்தி செய்து சாப்பிடுவோம். ஆனால் ஓட்ஸ் வைத்து நம்முடைய வீட்டிலேயேசாஃப்ட்டான சப்பாத்தி எப்படி செய்வது என்பதை பற்றிய ரெசிபி தான் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.இது கோதுமை மாவு சப்பாத்தியை விட ருசியாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும்.ஆரோக்கியத்தின் மீது
Advertisement
அக்கறை காட்டுபவர்கள் எளிமையான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரைபண்ணி பாக்கணும்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Oats vegetable Chapati
Prep Time 5 minutes
Cook Time 8 minutes
Servings 4
Calories 84

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • 3/4 கப் ஓட்ஸ்
  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கேரட்
  • 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் பேஸ்ட்
    Advertisement
  • 1 வெங்காயம்
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 1/2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகப் பொடி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • 1/4 கப் தயிர்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

Instructions

  • ஓட்சை வெறும் கடாயில் போட்டு சிறிது வறுத்து பொடித்து கொள்ளவும். கேரட்டை துருவிக் கொள்ளவும்.
  • கொத்தமல்லி,வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.      
  • ஒரு பாத்திரத்தில் பொடித்த ஓட்ஸ், கோதுமை மாவு, துருவிய கேரட், கொத்தமல்லி, வெங்காயம், ப.மிளகாய் பேஸ்ட்,மல்லித்தூள, சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
  • பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊற வைக்கவும் . அடுத்து மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி போன்று தேய்த்து, ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்து பரிமாறவும். ஓட்ஸ் வெஜிடபிள் சப்பாத்தி ரெடி

Nutrition

Serving: 2g | Calories: 84kcal | Carbohydrates: 14.45g | Protein: 5.42g | Fat: 0.4g | Fiber: 5.1g | Calcium: 25mg
Advertisement
Prem Kumar

Recent Posts

மதிய சமையலுக்கு ஒரு முறை இந்த ஆந்திரா ஸ்டைல் தக்காளி பப்பு செய்து பாருங்கள், பின் இதன் சுவைக்கு அடிமையாகிவிடுவீர்கள்!!

இன்று மதியம் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்து விட்டதா? உங்கள்…

30 நிமிடங்கள் ago

நாவூறும் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஊறுகாய் இனி வீட்டிலேயே சிம்பிளா சூப்பரா செய்யலாம்!

ஊறுகாய் என்பது ஒரு பழங்கால உணவுப் பொருளாகும். இது தலைமுறைகளாக நடைமுறையில் இருக்கும் இந்திய உணவு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும்.…

47 நிமிடங்கள் ago

நல்லது நடக்க அக்னி நட்சத்திர காலத்தில் வழிபட வேண்டிய தெய்வம்

அக்னி நட்சத்திரம் என்றாலே நமக்கு ஞாபகத்திற்கு வருவது கூடை காலமும் சுட்டெரிக்கும் வெயிலும் தான். மார்ச் மாதம் தொடங்கி விட்டாலே…

54 நிமிடங்கள் ago

சுவையான பன்னீர் நாண் இனி ஹோட்டல் சென்று சாப்பிடாமல் வீட்டிலேயே எளிய‌ முறையில் உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள்!!

நாண் என்பது வேறு ஒன்றும் இல்லை. இதுவும் ஒரு வகையான சப்பாத்தி அல்லது ரொட்டி எனலாம். ஆனால் நாணின் சிறப்பு…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 09 மே 2024!

மேஷம் உங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். இன்று கடந்த சில நாட்களை விட என்று மிகவும்…

4 மணி நேரங்கள் ago

பன்னீர் கேப்ஸிகம் மசாலா

இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சிம்பிளான அதே சமயம் வீட்டில் உள்ளோர் அனைவரும்…

14 மணி நேரங்கள் ago