Advertisement
சைவம்

சப்பாத்தியுடன் சாப்பிட ருசியான பாலக் பன்னீர் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!

Advertisement

என்னதான் நம்ம தென்னிந்தியால இருந்தாலும் வட இந்தியால இருக்குற எல்லா உணவுகளையும் நம் டேஸ்ட் பண்ணி இருப்போம் .அதையே நம்ம வீட்லயும் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். அதுல நம்ம அடிக்கடி செய்யக்கூடியது தான் சப்பாத்தி சப்பாத்தியும் வட இந்தியாவுலதான் இருந்து வந்தது இல்லையா. ஆனா இப்போ சப்பாத்திக்கு சைடிஷ் ஆனா பன்னீர் பட்டர் மசாலா பாலர் பன்னீர் எல்லாமே வட இந்தியாவுல இருந்த தான் வந்தது. ஆனா டேஸ்ட் பாத்தீங்கன்னா செம ரிச்சா சூப்பராவே இருக்கும்.

அந்த வகையில எல்லார் வீட்டிலும் அடிக்கடி பன்னீர் பட்டர் மசாலா செய்வோம் ஆனா ஒரு சிலர் மட்டுமே பாலக் பன்னீர் செய்வாங்க. ஆனா ரொம்பவே ஆரோக்கியமான பாலக்கீரையில் இருந்து செய்யக்கூடிய இந்த பாலக் பன்னீர் நம்ம எல்லாரும் செஞ்சு சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானது என்று சொல்லலாம். பஞ்சாப்ல ஃபேமஸா இருக்க கூடிய இந்த பாலக் பன்னீர் சப்பாத்தி கூட வச்சு சாப்பிட ஒரு சூப்பரான காமினேஷனா இருக்கும்.

Advertisement

குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சப்பாத்திக்கு எப்பவுமே ஒரே மாதிரியான சைடிஷ் குருமா வச்சு கொடுத்தா குழந்தைகளுக்கு போர் அடிச்சிடும் அதனால சாப்பிட மறுப்பாங்க. அதோட குழந்தைகளுக்கு நம்ம கீரையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். அந்த வகையில ரொம்ப டேஸ்டியான சத்தான சப்பாத்திக்கு வச்சு சாப்பிட ரொம்பவே அருமையான காம்பினேஷனான இந்த பாலக் பன்னீர் செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுங்க ரொம்பவே விரும்பியும் சாப்பிடுவாங்க அதே நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும்.

இந்தப் பாலக் பன்னீர் செய்வது ரொம்பவே ஈஸி தாங்க. கடையில கிடைக்கிற மாதிரியே நம்ம சூப்பரான டேஸ்ட்ல வீட்டிலேயே சீக்கிரத்திலேயே செஞ்சு முடிச்சிடலாம். இந்த பாலக் பன்னீர் செய்வதற்கு ரொம்ப எல்லாம் கஷ்டப்படத் தேவையில்லை ரொம்பவே ஈஸியான முறையில் நம்ம செய்யலாம். வாங்க இப்போ இந்த சூப்பரான பாலக் பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

பாலக் பன்னீர் | Palak Paneer Recipe In Tamil

Print Recipe
குழந்தைகள் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. சப்பாத்திக்கு எப்பவுமே ஒரே மாதிரியான சைடிஷ்
Advertisement
குருமாவச்சு கொடுத்தா குழந்தைகளுக்கு போர் அடிச்சிடும் அதனால சாப்பிட மறுப்பாங்க. அதோட குழந்தைகளுக்குநம்ம கீரையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கணும். அந்த வகையில ரொம்ப டேஸ்டியான சத்தான சப்பாத்திக்கு வச்சு சாப்பிட ரொம்பவே அருமையான காம்பினேஷனான இந்த பாலக் பன்னீர் செஞ்சுஉங்க குழந்தைகளுக்கு கொடுங்க ரொம்பவே விரும்பியும் சாப்பிடுவாங்க அதே நேரத்தில் உங்களுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். வாங்க இப்போ இந்த சூப்பரான பாலக் பன்னீர் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Course Breakfast, dinner
Cuisine punjabi
Keyword Palak Paneer
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 19

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கட்டு பாலக் கீரை
  • 1 கப் பச்சை பட்டாணி
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 100 கிராம் பன்னீர்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 6 முந்திரி பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • வெண்ணெய் தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் பட்டாணியை நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். முந்திரிக்கையறை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்றாக வதக்கி ஆற வைத்த மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பாலக் கீரை நன்றாக கழுவி சுத்தம் செய்த பத்து நிமிடங்கள் சுடு தண்ணீரில் போட்டு பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் வெண்ணை மற்றும் எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
     
  • பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்த நன்றாக வதக்கவும். பிறகு அதில் சீரகத் தொழில் மிளகாய் தூள் கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  • பிறகு வேக வைத்துள்ள பட்டாணி அரைத்து வைத்துள்ள பாலக்கீரை அனைத்தும் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் நன்றாக வேக வைக்கவும். அதன் பிறகு அரைத்து வைத்துள்ள முந்திரிக் கலவை சேர்த்த பிறகு, பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி சேர்த்துக் கொள்ளவும்.
     
  • பன்னீர் நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்தால் சுவையான பாலக் பன்னீர் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin C: 14.8mg | Calcium: 21mg
Advertisement
Ramya

Recent Posts

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

6 மணி நேரங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

14 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

18 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

22 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

1 நாள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago