பங்குனி மாதத்தில் வரக்கூடிய விரதங்கள், விசேஷங்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் முழு விபரங்கள் இதோ!

- Advertisement -

மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்க போகிறது. இந்த பங்குனி மாதத்தில் பலவிதமான சுப காரியங்களும் கோவில் திருவிழாக்களும் நடைபெறும். குறிப்பாக திருமணங்கள் வளைகாப்பு காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏதுவான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. இந்த பங்குனி மாதத்தில் சில விரத நாட்களும் வருகிறது. குரு பகவானுக்கு உரிய இந்த பங்குனி மாதம் மிகவும் சிறப்பு பெற்ற தமிழ் மாதங்களில் மங்கள மாதம் என போற்றக்கூடியது. தமிழ் மாதங்களிலேயே கடைசி மாதம் என்பதால் பங்குனி மாதத்திற்கு எப்பொழுதும் ஒரு தனியான சிறப்பு உண்டு. கோடை காலத்தின் துவக்கமான மாதமாக கருதப்படும் பங்குனி மாதத்தின் முதல் நாளிலிருந்து பல்வேறு விதமான நல்ல நாட்கள் தொடங்குகிறது. மார்ச் 14 ஆம் தேதி துவங்குகின்ற பங்குனி மாதத்தில் வரக்கூடிய விசேஷங்கள் விரதங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பங்குனி மாதத்தில் வரக்கூடிய விரதங்கள்

*சஷ்டி விரதம் -பங்குனி 2(மார்ச் 15)(வெள்ளிக்கிழமை) மற்றும் பங்குனி 18 (மார்ச் 31) (ஞாயிற்றுக்கிழமை)

- Advertisement -

*கிருத்திகை – பங்குனி 2 (மார்ச் 15)(வெள்ளிக்கிழமை) மற்றும் பங்குனி 29 (ஏப்ரல் 11) (வியாழக்கிழமை)

*ஏகாதசி விரதம்-பங்குனி 7 (மார்ச் 20) (புதன்கிழமை) மற்றும் பங்குனி 23 (ஏப்ரல் 5) (வெள்ளிக்கிழமை)

*பிரதோஷம்-பங்குனி 9 (மார்ச் 22)(வெள்ளிக்கிழமை) மற்றும் பங்குனி 24(ஏப்ரல் 6) (சனிக்கிழமை)

-விளம்பரம்-

*பௌர்ணமி-பங்குனி 11 (மார்ச் 24)(ஞாயிற்றுக்கிழமை)

*சங்கடஹர சதுர்த்தி-பங்குனி 15 (மார்ச் 28) (வியாழக்கிழமை)

*திருவோணம்-பங்குனி 21 (ஏப்ரல் 3)(புதன்கிழமை)

-விளம்பரம்-

*சிவராத்திரி-பங்குனி 25 (ஏப்ரல் 7) (ஞாயிற்றுக்கிழமை)

*அமாவாசை- பங்குனி 26 (ஏப்ரல் 8) (திங்கள்கிழமை)

*சதுர்த்தி-பங்குனி 30 (ஏப்ரல் 12) (வெள்ளிக்கிழமை)

பங்குனியில் வரக்கூடிய முக்கியமான விசேஷங்கள்

*காரடையான் நோன்பு-பங்குனி 1(மார்ச் 14) (வியாழக்கிழமை)

*ஹோலி பண்டிகை-பங்குனி 11 (மார்ச் 24) (ஞாயிற்றுக்கிழமை)

*பங்குனி உத்திரம்-பங்குனி 12 (மார்ச் 25) (திங்கள் கிழமை)

*பெரிய வியாழன்-பங்குனி 15 (மார்ச் 28) (வியாழக்கிழமை)

*புனித வெள்ளி-பங்குனி 16 (மார்ச் 29) (வெள்ளிக்கிழமை)

*ஈஸ்டர் டே-பங்குனி 18 (மார்ச் 31) (ஞாயிற்றுக்கிழமை)

*தெலுங்கு வருடப்பிறப்பு-பங்குனி 27 (ஏப்ரல் 9) (செவ்வாய்க்கிழமை)ரம்ஜான்-பங்குனி 29 (ஏப்ரல் 11) (வியாழக்கிழமை)

பங்குனியில் வரக்கூடிய சுப முகூர்த்த நாட்கள்

*வளர்பிறை முகூர்த்தம்-பங்குனி 7 (மார்ச் 20) (புதன்கிழமை) மற்றும் பங்குனி 11 (மார்ச் 24) (ஞாயிற்றுக்கிழமை)

*தேய்பிறை முகூர்த்தம்-பங்குனி 14 (மார்ச் 27) (புதன்கிழமை) மற்றும் பங்குனி 22 (ஏப்ரல் 4)(வியாழக்கிழமை) மற்றும் பங்குனி 23 (ஏப்ரல் 5)(வெள்ளிக்கிழமை)

பங்குனியில் வரக்கூடிய அஷ்டமி நவமி மற்றும் கரி நாட்கள்

*அஷ்டமி-பங்குனி 4 (மார்ச் 17) (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் பங்குனி 20 (ஏப்ரல் 2)(செவ்வாய்க்கிழமை)

*நவமி-பங்குனி 5(மார்ச் 18) (திங்கள் கிழமை) மற்றும் பங்குனி 21 (ஏப்ரல் 3)(புதன்கிழமை)

*கரிநாள்-பங்குனி 6(மார்ச் 19) (செவ்வாய்க்கிழமை) மற்றும் பங்குனி 15(மார்ச் 28) (வியாழக்கிழமை) மற்றும் பங்குனி 19 (ஏப்ரல் 1) (திங்கள் கிழமை)

2024 வது வருட பங்குனி மாதத்தில் வாஸ்து நாட்கள் எதுவும் கிடையாது.

இதனையும் படியுங்கள் : உங்கள் கஷ்டம், துன்பங்கள் மொத்தமாக தீர வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு மட்டும் போதும்!