உங்கள் கஷ்டம், துன்பங்கள் மொத்தமாக தீர வேண்டுமா ? இந்த ஒரு விளக்கு மட்டும் போதும்!

- Advertisement -

கஷ்டம் என்பது எல்லோருடைய வாழ்விலும் இருக்கும் மனிதர்களாக பிறக்கும் ஒவ்வொருவருக்கும் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் மட்டும் அவர் கஷ்டம் இல்லாமல் நிம்மதியாய் வாழ்ந்து விடுவார் என்று சொல்ல முடியாது. ஏதாவது ஒரு வகையில் அவர்களுக்கும் கஷ்டம் இருக்கும் அப்படி நமக்கு வரும் கஷ்டங்கள் எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம். குடும்பங்களுக்குள் கஷ்டம் இருக்கும், கணவன் மனைவி உறவுகளுக்குள் கஷ்டம் இருக்கும், பணக்கஷ்டமாக இருக்கலாம், உடல் நல குறைவு கஷ்டங்களாக இருக்கலாம். இப்படி இருக்கும் அனைத்து விதமான கஷ்டங்களையும் தீர்க்கும் ஒரு பரிகாரத்தை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காணப் போகிறோம்.

-விளம்பரம்-

தீப வழிபாடு

இப்படி நமக்கு இருக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களையும் போக்குவதற்கு தீப வழிபாடு ஒன்றுதான் சிறந்ததாக இருக்கும். தீப வாழிபாடு மட்டுமே நமக்கு வரங்களை தந்து நமது கஷ்டங்களை அழிக்கவும் செய்யும். அதனால் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் காண உள்ளோம். கணவன் மனைவிக்குள் எப்போதும் சண்டை சச்சரவுகளாக இருக்கின்றதா ? எலியும், பூனையுமாக அடித்துக் கொண்டு சந்தோஷமாக வாழவில்லையா அவர்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரம். ஐந்து மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அதில் நல்லெண்ணெய் ஊற்றி தாமரை தண்டு திரி போட்டு மாலை 6 மணி அளவில் அவர்களின் படுக்கை அறையில் ஏற்றி விடுங்கள். இந்த தீபம் 2 மணி நேரம் எரிய வேண்டும் அதன் பின் தான் குளிர வைக்க வேண்டும்.

- Advertisement -

கனவன் மனைவி

எப்படி நாம் இந்த தீபத்தை படுக்கை அறையில் ஏற்றுவது குறித்து ஒரு சிலருக்கு சந்தேகம் வரலாம் ? ஆனால் நீங்கள் தாராளமாக இந்த தீபத்தை படுக்கை அறையில் ஏற்றி வைக்கலாம். நாம் படுக்கை அறையில் நம் கண்களுக்கு புலப்படாத வகையில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை இந்த தீபம் அழித்துவிடும். ஆகையால் உங்கள் படுக்கை அறையில் இந்த தீபத்தை ஏற்றும் பொழுது பஞ்ச பூதங்களையும் மனதார நினைத்து வேண்டிக்கொண்டு தொடர்ந்து 48 நாட்கள் படுக்கை அறையில் இந்த தீபம் ஏற்றினால் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஒரு ஒற்றுமை ஏற்படும் அன்யோன்யம் கூடும்.

அண்ணபூரனி

மேலும் நம் வீட்டில் இருப்பவர்களுக்கு உடல் நலக் கோளாறு உடல் நலக் கோளாறு ஏற்பட்டு அவதிப்படுகிறார்கள். வீட்டில் சமைத்து சாப்பாட்டை வீட்டில் உள்ளவர்களை விருப்பமில்லாமல் சாப்பிடுகிறார்கள் இதுபோன்று பிரச்சனைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ? ஒரு மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்கை எடுத்துக் கொண்டு அன்னபூரணி தயாரை மனதார நினைத்து சமையலறையில் பெண்கள் இந்த விளக்கை ஏற்றி 48 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் வீட்டில் ஒரு போதும் உணவுக்கு தட்டுப்பாடு இருக்காது. வீட்டில் இருப்பவர்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள் சாப்பாடு சார்ந்த கஷ்டங்கள் அனைத்தும் விலகி ஓடிப்போகும்.

அத்தி மர நாற்காலி

அடுத்ததாக நமக்கு ஏதாவது தீராத துன்பம் வெகு நாட்களாகவே இருந்து கொண்டிருக்கும் அல்வா ? இது போன்ற தீராத துன்பங்களை நம்மை விட்டு விலகுவதற்காக பூஜை அறையில் இந்த ஒரு விளக்கு ஏற்றி பிரார்த்தனை செய்ய வேண்டும். இப்படி நாம் செய்யும் பிரார்த்தனைகளை கடவுள் கேட்டு நமக்கு செவிசாய்க்க வேண்டும் என்றால் உங்கள் பூஜை அறையில் அத்திமர பலகையில் செய்த சிறிய நாற்காலி வைத்து அதற்கு மேல் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்ற வேண்டும். பொதுவாக சிலர் வீடுகளில் முக்காலி வைத்து காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவது வழக்கமாக வைத்திருப்பார்கள் அந்த முக்காலியை கூட அத்தி மரத்தால் செய்து காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றும்போது தீராத துன்பம் அனைத்தையும் நீக்கி உங்களுக்கு நல்ல விடிவு காலத்தை பெற்று தரும்.

-விளம்பரம்-

மரப்பலகை

இது போன்று உங்கள் வீட்டில் வாராகி அம்மன் சிலை, காமதேனு சிலை, கற்பக விருட்சம் சிலை போன்ற எந்த சிலைகளாக இருந்தாலும். ஒரு மரப்பிலையின் மீது வைத்து வழிபட வேண்டும். அந்த மரப்பலகை அத்தி மரத்தால் செய்யப்பட்ட மரப்பலகையாக இருந்தால் உங்கள் வீட்டில் வைத்திருக்கும் தெய்வ சிலையின் சக்தி இரண்டு மடங்காக அதிகரித்து விடும். இப்படி சிலைகளின் சக்தி அதிகரிக்கும் போது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய நேர்மறை ஆற்றலின் சக்தியும் அதிகமாக இருக்கும். அது உங்கள் வீட்டிற்கு இன்னும் நேர்மறை ஆற்றலின் சக்திகளை ஈர்த்து கொடுக்கும். இப்படி உங்கள் வீடு முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும் பொழுது அங்கு எந்த விதமான கஷ்டமும் துன்பங்களும் வராது இருக்கிற கஷ்டங்களும் விலகி ஓடிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here