Advertisement
சட்னி

வேர்கடலை தக்காளி சட்னி ரோட்டு கடை ஸ்டைலில் இந்த சட்னிக்கு 2 சட்டி இட்லி அவித்தால் கூட பத்தாது!

Advertisement

இட்லி , தோசை , சப்பாத்தி இதெல்லாம் சுவையா இருப்பதற்கு காரணம் நாம தொட்டுக்கொள்ளும் சட்னி, சாம்பார் உடைய சுவைய பொருத்து தான் இருக்கும். அப்படி சுவையாக ரோட்டு கடைகளில் சாப்பிடும் போது இருக்கும் சுவை நமக்கு பல ஹோட்டல்களில் கிடைப்பதில்லை.விதவிதமா நிறைய சட்னிகள் இருந்தாலும் வேர்க்கடலை சட்னி  பிடத்தவர்கள் அதிகம் இந்த வேர்க்கடலை சட்னி தேங்காய் சேர்த்து செய்து நாம சாப்பிட்டு இருப்போம். இப்போ வேர்க்கடலை கூட தக்காளி சேர்த்து ரோட்டு கடைகளில் இருக்கும் சுவையில் செய்யலாம். 

வேர்க்கடலை புரதச்சத்து நிறைந்த ஒரு உணவு. போலிக் ஆசிட் இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்குரொம்ப நல்லது. அது  மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் இதை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது.  

Advertisement

வேர்க்கடலையில் உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால்  முடிந்த அளவுக்கு உணவில் வேர்க்கடலை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.இன்று நாம் செய்ய போகும் சட்னி அதீத சுவையோட நாக்கில் சாப்பிட்டு முடித்த பிறகும் ஒட்டிட்டு இருக்க போகுது இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட்  இது கூட எல்லாம் சேர்த்து சாப்பிடலாம்.   அருமையான சுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும். சரி இப்போ வேர்க்கடலை தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

வேர்க்கடலை தக்காளி சட்னி | Peanut Tomato Chutney In Tamil

Advertisement
5454,0.0005 C18.2904,0.0005 18.9004,0.6105 18.9004,1.3565 L18.9004,1.3565 L18.9004,4.9445 L21.9904,4.9445 C23.0954,4.9445 24.0004,5.8485 24.0004,6.9535 L24.0004,6.9535 L24.0004,17.2415 C24.0004,18.3465 23.0954,19.2505 21.9904,19.2505 L21.9904,19.2505 L19.8414,19.2505 L19.8414,22.2795 C19.8414,23.1725 19.1104,23.9035 18.2174,23.9035 L18.2174,23.9035 L5.7834,23.9035 C4.8894,23.9035 4.1594,23.1725 4.1594,22.2795 L4.1594,22.2795 L4.1594,19.2505 L2.0104,19.2505 C0.9044,19.2505 0.0004,18.3465 0.0004,17.2415 L0.0004,17.2415 L0.0004,6.9535 C0.0004,5.8485 0.9044,4.9445 2.0104,4.9445 L2.0104,4.9445 L5.0984,4.9445 L5.0984,1.3565 C5.0984,0.6105 5.7094,0.0005 6.4554,0.0005 L6.4554,0.0005 Z M17.8414,15.5975 L6.1594,15.5975 L6.1594,21.9035 L17.8414,21.9035 L17.8414,15.5975 Z M21.9904,6.9445 L2.0104,6.9445 L2.0004,17.2415 L4.1594,17.2425 L4.1594,15.2215 C4.1594,14.3285 4.8894,13.5975 5.7834,13.5975 L5.7834,13.5975 L18.2174,13.5975 C19.1104,13.5975 19.8414,14.3285 19.8414,15.2215 L19.8414,15.2215 L19.8414,17.2495 L21.9904,17.2505 L22.0004,6.9535 L21.9904,6.9445 Z M6.1632,9.1318 C6.7902,9.1318 7.2992,9.6408 7.2992,10.2678 C7.2992,10.8948 6.7902,11.4028 6.1632,11.4028 L6.1632,11.4028 L5.0992,11.4028 C4.4722,11.4028 3.9632,10.8948 3.9632,10.2678 C3.9632,9.6408 4.4722,9.1318 5.0992,9.1318 L5.0992,9.1318 Z M16.6304,2.2715 L7.3704,2.2715 L7.3704,4.6845 L16.6304,4.6845 L16.6304,2.2715 Z"> Print Recipe
வேர்க்கடலையில்உள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்புமற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆகையால்  முடிந்தஅளவுக்கு உணவில் வேர்க்கடலை சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று நாம் செய்ய போகும் சட்னி அதீத சுவையோட நாக்கில் சாப்பிட்டு முடித்த பிறகும் ஒட்டிட்டு இருக்க
Advertisement
போகுது இந்த வேர்க்கடலை தக்காளி சட்னி. இந்த சட்னியை இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட்  இதுகூட எல்லாம் சேர்த்து சாப்பிடலாம்.   அருமையானசுவையில் வயிறு நிறைய சாப்பிட்ட நிறைவு வரும். சரி இப்போ வேர்க்கடலை தக்காளி சட்னி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.
Course chutney
Cuisine tamil nadu
Keyword Peanut Tomato Chutney
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 54

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்

Ingredients

  • 2 ஸ்பூன்  வேர்க்கடலை
  • 2 ஸ்பூன்  கடலைப்பருப்பு
  • 1 பெரிய வெங்காயம்
  • 3 பூண்டு
  • 2 தக்காளி
  • 8 காய்ந்த மிளகாய்
  • 3 காஷ்மீரி மிளகாய்
  • புளி சிறிதளவு
  • 3/4 ஸ்பூன் சீரகம்
  • 3/4 ஸ்பூன் உப்பு
  • 1/4 ஸ்பூன் பெருங்காயம்
  • 3 தேக்கரண்டி எண்ணெய்

தாளிக்க

  • 2 தேக்கரண்டி எண்ணெய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 காய்ந்த மிளகாய்
  • கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  • அடுப்பை ஆன் செய்து அதில் ஒரு வானெலியை வைத்து வானெலி சூடானதும்  எண்ணெய்சேர்த்து அதில் கடலைப்பருப்பு , வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும் அதனுடன் காய்ந்த மிளகாய் நிறத்திற்காக காஷ்மீரி மிளகாய் சேர்த்து வறுத்து தனியாக எடுத்து  ஆறவைத்துகொள்ள வேண்டும்.
  • பின் அதே வானெலியில்  பூண்டு, வெங்காயம்  சேர்த்துகண்ணாடி போல் வதக்கவும் . பிறகு கறிவேப்பிலை , புளி , சீரகம் ,தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். பின் உப்பு , பெருங்காயம் சேர்த்து தக்காளி நன்றாக குழைந்து போகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்றாக குழைந்ததும் இவற்றை தனியாக எடுத்து ஆற வைத்து கொள்ளவேண்டும். 
  • முதலில் மிக்ஸியில் கடலைப்பருப்பு , வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், காஷ்மீரி மிளகாய் இவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பின் வதக்கி வைத்துள்ள தக்காளி , பூண்டு , வெங்காயம், புளி கலவையையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும்.
  •  ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் கலந்து விட்டால் இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் , பிரட் ஏற்ற சுவையான வேர்க்கடலை தக்காளி சட்னி தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 54kcal | Carbohydrates: 12g | Cholesterol: 36mg | Sodium: 546mg | Potassium: 488mg | Calcium: 78mg
Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

13 நிமிடங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

3 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

13 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

23 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

1 நாள் ago