Advertisement
அசைவம்

பெப்பர் சில்லி சிக்கன் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகிவிடும்!

Advertisement

சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைடு ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றாலே அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல.

இதையும் படியுங்கள் : புதிய வகையில் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

அந்த வகையில் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அப்போ இந்த பெப்பர் சில்லி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா வாங்க, அது எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம் அதை படித்து பார்த்து நீங்களும் இது போல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.

பெப்பர் சில்லி சிக்கன் | Pepper Chili Chicken Recipe In Tamil

Print Recipe
சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைட்ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் சேர்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றாலே அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல. இந்த வகையில் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அப்போ இந்த பெப்பர் சில்லி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா வாங்க.
Advertisement
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword pepper chili chicken, பெப்பர் சில்லி சிக்கன்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 people
Calories 230

Equipment

  • 2 கடாய்
  • 1 பவுள்

Ingredients

  • ¼ கிலோ போன்லெஸ் சிக்கன்
  • 1 முட்டை
  • 1 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர்
  • ¼ கப் தயிர்
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள்
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
  • ரெட் கலர் சிறிது
  • உப்பு தேவைக்கேற்ப

வதக்குவதற்கு:

  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் தட்டியது
  • 1 வெங்காயம் நீளமாக அறிந்தது
  • பச்சை மிளகாய் நறுக்கியது
  • கொத்தமல்லி சிறிது
  • எண்ணெய் பொறிக

Instructions

  • ஒரு பவ்ளில் போன்லெஸ் சிக்கன், போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள், ரெட் கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வாய்த்த சிக்கனை நன்றாக பொரித்து தனியாக எடுத்துவைக்கவும்.
  • பொறித்த எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தையும் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
  • பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்த சிக்கனை சேர்த்து அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
  • வதங்கியதும் அதன் மேல் பொறித்த வெங்காயத்தை போட்டு கிளறி இறக்கவும்.

Nutrition

Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

35 நிமிடங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

1 மணி நேரம் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

2 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

3 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

7 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

7 மணி நேரங்கள் ago