இந்த வெயிலுக்கு ஏற்ற அன்னாசி பழ ஜூஸ் செஞ்சு குடிங்க!

- Advertisement -

அன்னாசி பழ ஜூஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாக குடித்து இருப்பீங்க. ஆனா இந்த அன்னாசிப்பழ ஜூஸ் காரமா புளிப்பா இனிப்பா செம டேஸ்டா இருக்கும். பொதுவா ஜூஸ்ல நம்ம சர்க்கரை தான் சேர்ப்போம் ஆனால் இந்த அன்னாசி பழ ஜூஸ்ல புளிப்பு இனிப்பு கார ம் இது எல்லாமே வரதுக்கு நம்ம பொருட்கள் சேர்க்கிறோம் இதெல்லாம் சேர்த்து நம்ம அன்னாசி பழம் ஜூஸ் குடிச்சோம் அப்படின்னா செம டேஸ்டா இருக்கும்.

-விளம்பரம்-

கண்டிப்பா இந்த மாதிரியான ஒரு அன்னாசி பழ ஜூஸ் நீங்க குடிச்சிருக்கவே மாட்டீங்க ஒரு தடவை நீங்க இந்த மாதிரி செஞ்சு பார்த்தா அதுக்கப்புறம் எப்பவுமே இந்த மாதிரி தான் அன்னாசி பழ ஜூஸ் செய்வீங்க. அதுமட்டுமில்லாம நம்ம எப்பவுமே அன்னாசி பழம் கடைகளில் வாங்கி சாப்பிட்டா அவங்க உப்பு மிளகாய்த்தூள் போட்டு கொடுப்பாங்க அதை சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் அதே மாதிரி தான் இந்த ஜூஸ் நம்ம செய்ய போறோம் இந்த ஜூஸ்ல உப்பு சர்க்கரை எலுமிச்சை சாறு மிளகாய் தூள் இது எல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.

- Advertisement -

நீங்க இந்த மாதிரியான ஒரு அன்னாசி பழ ஜூஸ் குடிச்சா அதை மத்தவங்களுக்கும் சொல்லி செய்ய சொல்லுவீங்க. அன்னாசிப்பழம் கிடைச்சா இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான ஜூஸ் செஞ்சு குடிச்சு பாருங்க ஐஸ் கட்டி போட்டு ஜில்லுனு குடிச்சாலும் சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான காரசாரமான புளிப்பான இனிப்பான அன்னாசிப்பழ ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

அன்னாசி பழ ஜூஸ் | Pine apple Juice Recipe In Tamil

இந்த மாதிரியான ஒரு அன்னாசி பழ ஜூஸ் நீங்க குடிச்சிருக்கவே மாட்டீங்க ஒரு தடவை நீங்க இந்த மாதிரி செஞ்சு பார்த்தாஅதுக்கப்புறம் எப்பவுமே இந்த மாதிரி தான் அன்னாசி பழ ஜூஸ் செய்வீங்க. அதுமட்டுமில்லாமநம்ம எப்பவுமே அன்னாசி பழம் கடைகளில் வாங்கி சாப்பிட்டா அவங்க உப்பு மிளகாய்த்தூள்போட்டு கொடுப்பாங்க அதை சாப்பிடுவதற்கு ரொம்ப டேஸ்டா இருக்கும் அதே மாதிரி தான் இந்தஜூஸ் நம்ம செய்ய போறோம் இந்த ஜூஸ்ல உப்பு சர்க்கரை எலுமிச்சை சாறு மிளகாய் தூள் இதுஎல்லாமே சேர்த்து செய்றதால டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.
Prep Time15 minutes
Total Time15 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Pine apple Juice
Yield: 2
Calories: 209kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 அன்னாசிப்பழம்
  • 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை
  • 1 சிட்டிகை தனி மிளகாய்தூள்
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 சிட்டிகை உப்பு

செய்முறை

  • அன்னாசி பழத்தின் மேல் தோலை நீக்கி சிறு துண்டுகளாக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
  • அதனை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ளவும்
  • ஒரே பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து 10 நிமிடங்கள் அதனை கொதிக்க வைத்து பாகுபதம் வரும் வரை காய்ச்சிக்கொள்ளவும்
  • காய்ச்சிய சர்க்கரை பாகுடன் வடிகட்டி வைத்துள்ள அன்னாசிப்பழம் சாறை சேர்த்து அதனுடன் சிட்டிகைஉப்பு, மிளகாய் தூள் எலுமிச்சைச்சாறு அனைத்தும் கலந்து பரிமாறினால் சுவையான அன்னாசிபழம் ஜூஸ் தயார்.

Nutrition

Serving: 100ml | Calories: 209kcal | Carbohydrates: 49g | Protein: 2.9g | Sodium: 19mg | Potassium: 132mg

இதையும் படியுங்கள் : குக் வித் கோமாளியில்‌ ஷ்ருத்திகா செய்த குளு குளு முள்ளங்கி ஐஸ்கிரீம் ரெசிபி இதோ!