பொடுகுத்தொல்லையை அடியோடு விரட்டும் சின்னவெங்காயம் மற்றும் நாட்டுகோழி முட்டை!

- Advertisement -

பொடுகுத் தொல்லை… இன்னைக்கி சூழல்ல பல பேருக்கு இருக்கக்கூடிய பிரச்சினை இது. ஆண், பெண் வித்தியாசம் இல்லாம பலபேருக்கு இருக்கிற இந்த பிரச்சினைக்காக என்னென்னவோ சிகிச்சை எடுத்தும் பலன் கிடைக்காம அவதிப்பட்டுட்டு இருக்காங்க. பொடுகு வர்றதுக்கு தலையில அழுக்கு சேர்றது உள்பட பல காரணங்கள் இருந்தாலும் உடல்சூடு, மலச்சிக்கல்னு பல பிரச்சினைகளும் காரணமா இருக்கிறதால அதையும் சரி பண்ணணும். நாம குளிக்கிற தண்ணி அழுக்கு நிறைஞ்சிருந்தாலும்கூட பொடுகு வரலாம். அதனால பொடுகு வர்றதுக்கு என்னென்ன காரணம்னு தெரிஞ்சி அதை முதல்ல நிறுத்தணும்.

-விளம்பரம்-

சின்ன வெங்காயம்

அதேநேரத்துல பொடுகு பிரச்சினைக்கு ரொம்ப எளிமையான மருத்துவம் இருக்கு. இது பல பேருக்கு தெரிஞ்சாலும் அதை பயன்படுத்துறது இல்லை. வீடுகள்ல சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய சின்ன வெங்காயத்தை நல்லா அரைச்சி எடுத்து அதோட நாட்டுக்கோழி முட்டையோட வெள்ளைக்கருவை சேர்த்துக் கலந்து தலையில தேய்ச்சி அரை மணி நேரம் கழிச்சி வெதுவெதுப்பான தண்ணியில குளிக்கணும். தலைக்கு சீயக்காய்தான் போடணும். ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.

- Advertisement -

வெள்ளை மிளகு

வாரத்துல ஒருநாள் இல்லன்னா ரெண்டு நாள் இதுமாதிரி தேய்ச்சி குளிச்சிட்டு வந்தா காலப்போக்குல பொடுகுத்தொல்லை சரியாயிரும். இதே மாதிரி இன்னும் சில வழிமுறைகள் இருக்கு. நாட்டு மருந்துக் கடையில கேட்டா வெள்ளை மிளகு கிடைக்கும். அதோட பால் விட்டு மையா அரைச்சி தலையில தேய்க்கணும். அரை மணி நேரம் கழிச்சு குளிக்கணும். இதே மாதிரி பசலைக்கீரையை அரைச்சி தலையில தேய்ச்சி குளிக்கலாம். பசலைக்கீரையை மூணு நாள் தொடர்ந்து தேய்ச்சி குளிச்சாலே பொடுகுத்தொல்லை ஓரளவு கட்டுக்குள்ள வந்துரும். ஆனா இந்த மாதிரி தலைக்கி தேய்ச்சி குளிக்கும்போது அதெல்லாம் குளிர்ச்சியை உண்டாக்கும். அதனால சைனஸ், சளித்தொல்லை இருக்கிறவங்க மழை, குளிர் காலத்துல முயற்சி பண்ண வேண்டாம்.

வசம்பு எண்ணெய்

வசம்பை தேங்காய் எண்ணெயில் ஊறப்போட்டு தலைக்கு தேய்க்கலாம். வழக்கமா எண்ணெய் தேய்க்கிற மாதிரியே தேய்ச்சிட்டு வரலாம். வில்வக்காயை காய வச்சி பொடியாக்கி அதோட சம அளவு சீயக்காய் சேர்த்து தேய்ச்சி குளிச்சாலும் பலன் கிடைக்கும். மருதாணி, காபித்தூள், முட்டை வெள்ளை கரு, தயிர் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து தலையில் தேய்ச்சி குளிச்சாலும் பலன் கிடைக்கும். இதெல்லாம் செய்றது ஒருபக்கம் இருந்தாலும் உடம்புல சூட்டை உண்டாக்குற மாதிரி உணவுகளை சாப்பிடாம இருக்கிறது நல்லது. முக்கியமா சிக்கன், மீன் சாப்பிடாம இருந்தா நல்லது. நிறைய தண்ணி குடிக்கணும். உடம்புல வறட்சி ஏற்படாம பாத்துக்கிடணும். இதெல்லாம் செஞ்சிட்டு வந்தா பொடுகுத்தொல்லை ஓடியே போயிரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here