Advertisement
சைவம்

சூடான சாதம், இட்லியுடன் சாப்பிட பூண்டு மிளகாய் பொடி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் சூடான இட்லி மற்றும் சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அற்புதமான சுவையில் இருக்கும் பூண்டு மிளகாய் பொடி பற்றிதான் பார்க்க இருக்கிறோம். என்னதான் சோறு இட்லி போன்றவற்றிற்கு குழம்பு கிரேவி சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு

இதையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான கருவேப்பிலை இட்லி பொடி செய்வது எப்படி ?

Advertisement

இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் வேறு குழம்பு, கிரேவி என எதுவுமே தேவைப்படாது வெறும் அப்பளத்தை பெரித்து சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விடலாம். ஆகையால் இன்று இந்த பூண்டு மிளகாய் பொடி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பூண்டு மிளகாய் பொடி | Poondu Milagai Podi Recipe in Tamil

Print Recipe
என்னதான் சோறு இட்லி போன்றவற்றிற்கு குழம்பு கிரேவி சட்னி வைத்து சாப்பிட்டாலும் பலருக்கு பொடி வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடிக்கும். இது போன்று நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த பூண்டு மிளகாய் பொடி செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் வேறு குழம்பு, கிரேவி என எதுவுமே தேவைப்படாது வெறும் அப்பளத்தை பெரித்து சாப்பாட்டை சாப்பிட்டு முடித்து விடலாம்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Poondu Milagai Podi, பூண்டு மிளகாய் பொடி
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 6 people
Calories 73

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 20 பல் பூண்டு
  • 2 மேசை கரண்டி காஷ்மீர் மிளகாய் தூள்
  • 2 tbsp மல்லி
  • ½ tbsp சீரகம்
  • 3 மேசை கரண்டி வெள்ளை எள்ளு
  • 2 மேசை கரண்டி நல்லெண்ணெய்

தாளிக்க

  • 1 மேரை கரண்டி நல்லெண்ணெய்
  • 1 tbsp கடுகு உளுந்த பருப்பு
  • 2 கொத்து கருவேப்பிலை

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அளவில் மல்லி சீரகம் மற்றும் வெள்ளை எள்ளு போன்ற பொருட்களை சேர்த்து
    Advertisement
    மிதமான தீயில் வறுக்கவும் பின் எள்ளு பொரிந்து மணம் வரும் வரை நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு வறுத்த பொருட்களை நன்கு குளிர வைத்துவிட்டு. அதன் பின் தேவையான அளவு பூண்டு பற்களை நசுக்கி எடுத்துக் கொள்ளுங்கள். பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நாம் நசுக்கிய பூண்டு பொருட்களை சேர்த்து பூண்டு பொன்னிறமாக வதங்கி வரும் வரை வறுக்கவும்.
  • பின் வதக்கிய பூண்டையும் நன்கு குளிர வைத்துக் கொள்ளுங்கள். நாம் வதக்கிய அனைத்து பொருட்களையும் நன்கு குளிர்ந்தவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் முதலில் வறுத்த மல்லி சீரகம் எள்ளு இந்த பொருள்களை மட்டும் சேர்த்து கொர கொரவன அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மிக்ஸியில் வதக்கிய பூண்டு மற்றும் காஷ்மீர் மிளகாய் பொடியை சேர்த்து கொர கொரவன என அரைத்துக் கொள்ளுங்கள். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • பின் அதில் கடுகு உளுத்தம் பருப்பு மற்றும் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்கு தாளித்து அந்த தாளிப்பை அரைத்த பூண்டு மிளகாய் பொடியுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் பூண்டு மிளகாய் பொடி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 250gram | Calories: 73kcal | Carbohydrates: 37g | Protein: 9g | Saturated Fat: 0.2g | Cholesterol: 3mg | Sodium: 2mg | Potassium: 472mg | Fiber: 1g | Sugar: 0.5g
Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு சாக்லேட் வாழைப்பழ ஐஸ்கிரீம், வீட்டிலேயும் சுலபமாக இப்படி செய்ய அசத்துங்க!

வாழைப்பழம் வைட்டமின் மற்றும் மினரல் சத்துக்கள் நிறைந்தது. மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாக்கும் ஆற்றல் கொண்டது. அதேசமயம் ஐஸ்கிரீம் என்பது…

18 நிமிடங்கள் ago

புத-ஆதித்ய யோகம்… ‘இந்த’ ராசிகளுக்கு மகிழ்ச்சியும் செல்வமும் குறையாமல் இருக்கும்!

ஜோதிட உலகில் பிரமாண்டமாக பேசப்படும் யோகத்தில் ஒன்று புத ஆதித்திய யோகம். பல விதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் சூரியன்…

36 நிமிடங்கள் ago

காலை உணவாக இந்த மென்மையான மலபார் முட்டை பரோட்டா செய்து பாருங்கள் சுவை மிகவும் அபாரமாக இருக்கும்!!

வழக்கமாக நாம் சாப்பிடுகின்ற தோசை, சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றை கொஞ்சம் வித்தியாசமான முறையில் செய்து கொடுத்தாலே போதும் நம் வீட்டில்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 மே 2024!

மேஷம் இன்று யாரையும் அதிகம் நம்பாமல் செயல்படுவது நல்லது. எல்லா விஷயத்திற்கும் எதிர் வினை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லை…

5 மணி நேரங்கள் ago

காலை உணவுக்கு ருசியான ஓட்ஸ் பச்சைப்பட்டாணி அடை இப்படி செய்து பாருங்க!

காலை வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தோசை மாவு இல்லையா? கவலை வேண்டாம் ஈஸியாக…

15 மணி நேரங்கள் ago

செவ்வாய் கிழமையில் மறந்தும் கூட இந்த விஷயங்களை செய்து விடாதீர்கள்

வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு சின்ன சின்ன விஷயங்களும் கூட நம்முடைய வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை ஏற்படுத்தும்…

15 மணி நேரங்கள் ago