Advertisement
சைவம்

காரசாரமான உருளைக்கிழங்கு பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் உருளைக்கிழங்கை வைத்து மொறு மொறுப்பு தன்மையுடன் மாலை நேரங்களில் டீ காபியுடன் வைத்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் இது போன்று உருளைக்கிழங்கு பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : KFC ஸ்டைலில் காலிஃபிளவர் பக்கோடா செய்வது எப்படி ?

Advertisement

உங்களையும் இந்த உருளைக்கிழங்கு பக்கோடாவை அடிக்கடி செய்து தரச் சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். ஏன் உங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இந்த உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாகவும் மாறி போகும். அதனால் இன்று இந்த சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் சமையல் குறித்த இந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

உருளைக்கிழங்கு பக்கோடா | Potato Pakoda Recipe in Tamil

Print Recipe
மாலை நேரங்களில் டீ காபியுடன் வைத்து சாப்பிடும் வகையில் உருளைக்கிழங்கு பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் இது போன்று உருளைக்கிழங்கு பக்கோடாவை உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து பரிமாறினால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களையும் இந்த உருளைக்கிழங்கு பக்கோடாவை அடிக்கடி செய்து தரச் சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு ஒரு அற்புதமான சுவையில் இருக்கும். ஏன் உங்க வீட்டில் உள்ள பெரியவர்கள் கூட இந்த உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிடித்த ஒரு ரெசிபியாகவும் மாறி போகும்.
Course Pakoda
Cuisine Indian, TAMIL
Keyword POTATO, உருளைக்கிழங்கு
Prep Time 20 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 40 minutes
Servings 5 people
Calories 60

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

மிக்ஸியில் அரைக்க

  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 3 பல் பூண்டு

பக்கோடா செய்ய

  • 4 உருளைக்கிழங்கு நறுக்கியது
  • 1 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 கொத்து கருவேப்பிலை நறுக்கியது
  • 1 கைப்பிடி கொத்தமல்லி நறுக்கியது
  • 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • 1 tbsp மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 6 மேசை கரண்டி கடலை மாவு
  • 3 மேசை கரண்டி அரிசி மாவு

Instructions

  • முதலில் நாம் எடுத்துக் கொண்ட உருளைக்கிழங்கின் மேற்புற தோல் பகுதியை சீவி விட்டு. அதன் பின் தோல் சீவி உருளைக்கிழங்கை மெல்லிதாக மற்றும் நீளமான துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.
    Advertisement
  • பின் நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீரில் சேர்த்து ஒரு முறை நன்கு அலசி எடுத்துக் கொள்ளுங்கள். பின் தண்ணீரை வடிகட்டி உருளைக்கிழங்கை சுத்தமான துணியை வைத்து அதில் உள்ள தண்ணீரை ஒத்தி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • பின்பு ஒரு பெரிய பவுளில் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து அதனுடன் கொத்தமல்லி, வெங்காயம், கருவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா, தேவையான அளவு உப்பு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்ந்த நன்கு பிசைத்து கொள்ளுங்கள்.
  • அதன் பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு போன்ற பொருட்களை சேர்த்து கொர கொரவென அரைத்து உருளைக்கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின்பு கடாயை அடைப்பில் வைத்து அதில் உருளைக்கிழங்கு பறிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.
  • பின் ஒரு கை உருளைக்கிழங்கை எடுத்து எண்ணெயில் சேர்த்து பொரித்து கொள்ளுங்கள். பின் இதை அளவு உருளைக்கிழங்கை எடுத்து மேலும் சேர்த்து இவ்வாறு மீதம் உள்ள அனைத்தையும் பொறித்தெடுங்கள். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு பக்கோடா இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 60kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Fat: 1g | Saturated Fat: 0.6g | Cholesterol: 7mg | Sodium: 2mg | Potassium: 280mg | Fiber: 8g | Sugar: 1.1g
Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

6 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

6 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

6 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

7 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

7 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

11 மணி நேரங்கள் ago