Advertisement
ஆன்மிகம்

வளமான வாழ்வு தரும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Advertisement

பொதுவாக சனி பகவான் நமக்கு கேடு தருவதால் அதை குறைத்து கொள்வதற்கு பக்தர்கள் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து சனி பகவானை வழிபட்டு வருவார்கள் இதனால் சனி பகவான் தரும் கஷ்ட பலன்கள் குறையும் அதே சமயம் மகாவிஷ்னுவின் அருளையும் நாம் பெற்றுக் கொள்ளலாம். இது சாதாரண மாதங்களில் நாம் செய்வோம் ஆனால் புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் நாம் விரதம் இருந்து சனி பகவானையும், பெருமாளையும் வழிபட்டு வந்தால் நமக்கு அதிகப்படியான பலனை தரும் என்பார்கள் ஆகையால் புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் குறித்த ஆன்மீக தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

Advertisement

பாண்டவர்கள் வெற்றி பெற காரணம்

உங்கள் அனைவருக்கும் மகாபாரத போரை பற்றி தெரிந்திருக்கும் இதில் பாண்டவர்கள் வெற்றி பெற்றதற்கு காரணம் என்னவென்று தெரியுமா. அஸ்திணாபுரம் அரண்மனையில் இருந்து வனவாசம் சென்ற பாண்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானை வேண்டி விரதம் இருந்து அவரை வழிவிட்டு வந்ததால் தான் மகாவிஷ்ணுவின் பரிபூரணமான ஆசீர்வாதம் அவர்களுக்கு இருந்ததாகவும். அதனால்தான் பாண்டவர்கள் மகாபாரத போரில் வெற்றி பெற்றதாகவும் இதிகாசங்களும் நம் முன்னோர்களும் காலங்கலமாக கூறி வருகின்றனர்.

விஷ்னு சனி பகாவனை தூக்கி ஏறிந்த கதை

இந்த கலியுகம் காலகட்டம் ஆரம்பிக்கும்போது நாரதர் வழக்கம் போல் அவரது கழகத்தை தொடங்கினார். இந்த முறை அவரிடம் சிக்கியது நமது சனி பகவான். ஆம், சனி பகவான் பூ லோகத்தை நோக்கி பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது நாரதர் பூலோகத்தில் எங்கு வேண்டுமானாலும் போய்கொள் ஆனால் திருமலை பக்கம் மட்டும் நீ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார். ஆனால் சனி பகவானோ நாரதர் எதை வேண்டாம் என்று சொன்னாரோ அதனைக் கேட்டு அங்கு தான் முதலில் போனார். சனி பகவான் திருமலையில் வந்து காலடி எடுத்து வைத்த மறுகணமே சனி பகவான் தூக்கி எறியப்பட்டார் மகாவிஷ்னுவால்.

ஏனென்றால் பூலோகத்தில் வைகுண்டமாக திகழும் திருமலையில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கஷ்டங்களை கொடுக்கக் கூடாது என்பதற்காக மகாவிஷ்ணு

Advertisement
சனி பகவானை இப்படி செய்தார். தன் தவறை உணர்ந்த சனி பகவான் மகாவிஷ்ணுவிடம் மன்னிப்பு கேட்டார். சனி பகவான் மன்னிப்பு கேட்ட பின் கோபம் குறைந்து மகாவிஷ்ணு புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் உன்னை நோக்கி விரதம் இருந்து வழபடுவர்களுக்கு தனது அருள் பரிபூரணமாக இருக்கும் என்று மகாவிஷ்ணு சொன்னார் என்று புராணங்களில் ஒரு கதை உள்ளது. மற்றொரு கதையும் உண்டு சொல்கிறேன்.

மகாவிஷ்னுவிடம் வரம் வாங்கிய சனி பகவான்
Advertisement

நவகிரகங்களில் ஒன்றாக திகழும் சனி பகவானுக்கு தான் ஒரு பாவம் செய்த கிரகமாகவும் தன்னை அனைவரும் வெறுப்பதாகவும் ஒரு மனக்குறை வெகு காலமாக இருந்து கொண்டே இருந்தது. அதைக் கேட்ட நாரதரோ மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் புரிந்தால் மகாவிஷ்ணு இதற்கு ஒரு தீர்வு கொடுப்பார் என நாரதர் கூறியுள்ளார். இதை கேட்ட சனி பகவானும் மகாவிஷ்ணுவை நோக்கி கடும் தவம் செய்தார். சனி பகவானின் கடும் தவத்தை கண்டு மணம் குளிர்ந்த மகாவிஷ்ணு அவரின் முன் தோன்றி வரம் கேட்க கூறினார்.

அதற்கு சனி பகவான் தன்னுடைய மணக்குறையை கூற சனி பகவானின் குறையை கேட்ட மகாவிஷ்ணு சனி பகவானிடம் தனக்குரிய புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் உன்னை விரும்பி என் பக்தர்கள் வழிபட்டு வருவார்கள். அவர்களுக்கு தான் அருள் புரிவேன் என சனி பகவானுக்கு மகாவிஷ்ணு வரம் அளித்ததாக ஒரு கதையும் உண்டு. ஆகையால் இவ்வளவு சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமைகளில் அதிகாலை எழுந்து குளித்து விட்டு ஞ சனி பகவானுக்கு நல்லண்ணெயில் தீபம் ஏற்றி பூஜை செய்து மகாவிஷ்ணு கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வந்தாள் அனைத்து விதமான தோஷங்களும், கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்க்கையை பெறலாம் என முன்னோர்கள் கூறினார்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

6 நிமிடங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

17 நிமிடங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

28 நிமிடங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

2 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு பலாக்கொட்டை கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

சமோசா, பப்ஸ், பஜ்ஜி, போண்டா, மற்றும் வடை இந்த மாலை நேர சிற்றுண்டிகளின் வரிசையில் கட்லெட்க்கும் முக்கிய இடம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

கையில் கயிறை எத்தனை நாட்கள் வரை கட்ட வேண்டும்

பொதுவாகவே நாம் அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகின்றோம். இதனை அடிப்படையாக வைத்தே…

5 மணி நேரங்கள் ago