Advertisement
ஆன்மிகம்

ஆன்மீகவாதிகள் தியானம் செய்வதற்கு முக்கியமான காரணங்களும் , பலன்களும்!

Advertisement

நம்முடைய மனதை அலைபாய விடாமல் தடுத்து ஒரு நிலை படுத்த பயன்படுவது தான் தியானம். தியானம் செய்வது நம்முடைய மனதை ஒருநிலைப்படுத்துவது மட்டுமில்லாமல் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கும் நினைவாற்றல் அதிகரிப்பதற்கும் சமநிலையை இழக்காமல் இருக்கவும் இந்த தியானம் உதவி செய்யும். அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் தியானம் செய்வதால் பலவிதமான நன்மைகள் நடக்கும். அந்த காலத்தில் இருந்த முனிவர்கள் சித்தர்கள் ரிஷிகள் எல்லோரும் பல ஆண்டுகள் தவமிருந்துதாக கேள்விப்பட்டிருப்போம் இப்பொழுதும் கூட தங்களை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பலர் வீட்டிலும் தியானம் செய்வதை வழக்கமாக தான் வைத்துள்ளார்கள். மன அழுத்தத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையில் இருப்பவர்களையும் ஆன்மீகவாதிகளும் மருத்துவர்களும் தியானம் செய்ய சொல்லி தான் சொல்கிறார்கள். இந்த தியானம் செய்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கட்டுப்பாடு

தியானம் செய்வதால் மனம் உடல் எண்ணம் போன்ற அனைத்தும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அதனால் உடல் ஆரோக்கியத்தையும் மன ஆரோக்கியத்தையும் பெற முடியும்ஆன்மீக வளர்ச்சிதியானம் செய்வது ஆன்மீக வளர்ச்சிக்கு மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. தங்களுக்குள் இருக்கும் உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்துவதற்கும் உயர்ந்த நிலையை அடைவதற்கும் தியானம் மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது.

Advertisement

சமநிலை ஏற்படுதல்

தியானம் செய்வதால் ஆன்மா உடல் மனம் மூன்றும் சமநிலைப்படுத்தப்படும். முழுமையான வாழ்க்கையை அடைய முடியும் வாழ்க்கையின் அனைத்து செயல்களும் உயர்ந்த தெய்வீக சக்தியுடன் தொடர்புடையது எனவே தியானம் செய்வது மிகவும் நல்லது.புரிதல் ஏற்படும்கவனச் சிதறல்கள் தியானம் செய்வதால் கட்டுப்படும். இதனால் ஒருவருடைய நிலை சீரமைக்கப்பட்டு அவர்களுடைய வாழ்க்கை நோக்கம் மற்றும்

Advertisement
வாழ்க்கையில் நடக்கின்ற செயல்களுக்கான நோக்கம் அனைத்தும் புரியும். இது நம்மை முழுமையான ஆன்மீக பாதையில் அழைத்துச் செல்லும்.

தெய்வீக உறவு

தியானம் செய்வது தெய்வீகத்துடனும் பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்ந்த உறவை ஏற்படுத்தும். இந்த தெய்வீக சக்தி நம்மை வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல உதவும்.மனத்தூய்மை ஏற்படுதல்மனதில்

Advertisement
உள்ள தீய எண்ணங்கள் எதிர்மறை எண்ணங்கள் அனைத்தையும் நீக்கி மனதை தெளிவுபடுத்த தேவையற்ற எண்ணங்களை நீக்க தியானம் மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

விழிப்புணர்வு

தியானம் தொடர்ந்து செய்து வந்தால் ஒருவருடைய எண்ணங்கள் அனைத்தும் தெளிவு பெற்று உள்ளார்ந்த உணர்வுகள் எண்ணங்கள் அனைத்தையும் நாம் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். ஆன்மீகத்தில் நாம் யார் என்று உணர்வை நமக்கு உணர்த்தவும் உதவும்.

மன அமைதி

இவை அனைத்திற்கும் மேலாக தியானம் செய்வது நம் மனதிற்கு அமைதியை தருகிறது. நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் சவால்களுக்கு இடையே தியானம் செய்து வந்தால் நம்முடைய மனம் அமைதியாகவும் தெளிவாகவும் இருக்கும். இதுதான் நமக்கு மிகவும் தேவையான ஒன்று.

இதனையும் படியுங்கள் : காகம் உங்கள் வீட்டு முன் இப்படி செய்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 22 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். சில நாட்களாக இருந்த தடைகள் நீங்கும். லாபம் அதிகரிப்பதற்கான சாத்தியம் உண்டு.…

2 மணி நேரங்கள் ago

ருசியான ஆந்திரா ஸ்டைல் கோங்குரா சாதம் இப்படி ஒரு முறை வீட்டிலயே செய்து பாருங்க!

சிலர் பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை…

15 மணி நேரங்கள் ago

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

18 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

2 நாட்கள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

2 நாட்கள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago