ஆண்களுக்கு போதிய பலம் தரும் மாப்பிள்ளை சம்பா அரிசி!

- Advertisement -

மாப்பிள்ளை சம்பா… இந்த அரிசியில மாப்பிள்ளைங்கிற பெயர் இருக்கு. இது மாப்பிள்ளை ஆகப் போகும் அதாவது திருமணமாகப்போகிற ஆண்களுக்கு நல்ல உடல் பலத்தை தரக்கூடிய ஒரு பாரம்பரிய அரிசி. ஒரு காலத்துல கல்யாணம் பண்ணணுன்னா அந்த ஆணுக்கு திறமை, வீரம், நல்ல உடல் பலம் இருக்கான்னு பார்ப்பாங்க. பெண்களும் அந்தமாதிரி ஆண்மகனைத்தான் விரும்புவாங்க. வீரம் இருக்குங்கிறதை ஊர் பொது இடத்துல உள்ள இளவட்டக்கல்ன்னு ஒரு கல் இருக்கும். உருண்டு திரண்டு அதிக பாரமா இருக்குற அந்தக்கல்லை தரையில இருந்து தோள் மேல தூக்கி வைக்கணும். அதை தோள் மேல வைக்கணுன்னா அந்த ஆணுக்குப் போதுமான உடல் பலம் இருக்கணும். அந்த உடல் பலத்தை தர்றதுக்கு இந்த மாப்பிள்ளைச் சம்பா அரிசி ரொம்ப உதவியா இருக்கும்.

-விளம்பரம்-

நீராகாரத்தில் சத்துகள்

மாப்பிள்ளை சம்பா அரிசியை அப்பிடியே சாப்பிடுறதவிட அதை நீராகாரமாக்கிக் குடிச்சாலே போதும். அதுலயே அந்த அளவுக்கு போதுமான சத்துகள் இருக்கு. அதாவது அரிசியை சோறாக்கி தண்ணி ஊத்தி பழைய சோறாக்கி நீராகாரத்தைக் குடிச்சிட்டு வந்தாலே போதும். நீராகாரத்தை குடிச்சாலே போதுமான பலம் கிடைக்கும். பொதுவா மாப்பிள்ளைச் சம்பா அரிசியை தண்ணி ஊத்தி கழுவினாலே அதுல அதிகமா சத்துகள் இருக்கும். அதை குடிச்சாலே பல பிரச்சினைகள் சரியாயிரும். முக்கியமா வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தக்கூடிய வல்லமை இந்த மாப்பிள்ளை சம்பாவுக்கு உண்டு.

- Advertisement -

சர்க்கரை நோய்க்கு நல்லது

மாப்பிள்ளை சம்பா அரிசி செரிமான சக்தி தரக்கூடியது. நரம்புகளை வலுப்படுத்த ரொம்பவே உதவியா இருக்கும். சர்க்கரை நோயாளிகள் கவுனி அரிசி சாப்பிடுற மாதிரி இந்த மாப்பிள்ளை சம்பா அரிசியையும் சாப்பிட்டு வந்தா நல்ல பலன் கிடைக்கும். மாப்பிள்ளை சம்பா அரிசி அளவுல கொஞ்சம் பெருசா இருக்கிறதால பலபேருக்கு அதை பிடிக்கிறது இல்லை. ஆனா வழக்கமா நாம இட்லி பண்ற மாதிரி இட்லி அரிசியை ஊற வைக்கும்போது மாப்பிள்ளை சம்பா அரிசியையும் சேர்த்து ஊறவச்சி இட்லி, தோசை செஞ்சி சாப்பிடலாம். புட்டு, இடியாப்பம், கஞ்சிகூட செஞ்சி சாப்பிடலாம்.

ஆண்மைக்குறை போக்கும்

கல்யாணமான ஆண்கள்ல சிலபேருக்கு ஆண்மைக்குறைபாடு இருக்கு. அதை சரி பண்றதுக்கும்கூட இந்த மாப்பிள்ளை சம்பா அரிசி ரொம்பவே உதவியா இருக்கும். பொதுவா இதுமாதிரி பாரம்பரிய அரிசிகளை எப்படி சமைக்கிறதுன்னு தெரியாம சிலபேர் ரொம்ப யோசிக்கிறாங்க. மற்ற அரிசிகளை மாதிரியே இதையும் சமைச்சி சாப்பிடலாம். நிறமும், அளவும் வேற மாதிரி இருக்கிறதால பலபேருக்கு இந்த அரிசியை பிடிக்கிறது இல்லை. ஆனா உண்மையிலயே இதுமாதிரி பாரம்பரிய அரிசிகள்லதான் நிறைய சத்துகள் இருக்குங்கிறதை புரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க. நிறைய பலன்கள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here