Advertisement
ஆன்மிகம்

சதுரகிரி மலை ஆனி மாத பௌர்ணமி வழிபாடு,4 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி!

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்திர மலை, ஏம மலை, வருண மலை, குபேர மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது சதுரகிரி மலை. இம்மலையில் ஐந்து கோயில்கள் உள்ளன. மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம். இங்குள்ள மூலஸ்தான சுவாமி சுந்தர மகாலிங்கம் சாய்ந்த நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த மலையின் சிறப்புகள் மற்றும் எந்த தினத்தில் எப்போது வழிபடலாம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.

தல புராணம்

பிருங்கி முனிவர் சிவனை மட்டும் வழிபடும் தீவிர பக்தர். சிவன் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் பெற்ற போதும் பிருங்கி முனிவர் பார்வதியை சேர்த்து வழிபட விரும்பாமல், வண்டு வடிவத்தில் இறைவன் பகுதியைத் துளைத்து தனிப்படுத்தி வழிபட்டாராம். இதனால் கோபமடைந்த பார்வதி அவரை வலுவிழந்து போகும்படி சாபமிட்டார். சாபத்தினால் வலுவிழந்து கொண்டு வந்த போதும் பிருங்கி முனிவர் சிவனை தனித்து வழிபட்டார். சிவன் தன் பக்தனின் நிலை கண்டு அவருக்கு மூன்றாவது காலை அருளினார். தனது இந்த நிலையை மாற்றி சிவனுடன் இணைவதற்காக சதுரகிரி மலையில் கல்லால மரத்தி‎ன் அடியில் அமர்ந்து சிவனைக் குறித்து தியானம் செய்தார். பார்வதி தேவி சந்தனத்தை குழைத்து அத‎ன் மூலம் லிங்கம் ஒ‎ன்றை செய்து, அந்த லிங்கத்தை அனுதினமும் தவறாது பூஜித்து வந்தார். மனமுருகிய சிவ‎ன் த‎ன்னுடைய ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, சக்தியை தன்னுடன் இணைத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி அளித்தார்.

Advertisement

வரலாறு

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவர் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவரது மனைவி சடைமங்கை. இவர் தினமும் மாமனார் வீட்டிற்கு சென்று பாலைக் கொடுத்து விட்டு வருவார். ஒருமுறை, இவர் பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவரிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டு தினமும் அதன்படி செய்தார். ஆனால் வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகனிடம் தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட துறவி அவளுக்கு “சடதாரி’ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். அவனின் இச்செயல் கண்டு சிவபெருமான் அவன் முன் தோன்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன், உன் சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன், என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்‘ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார்.

சதுரகிரி மலையின் சிறப்புகள்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சதுரகிரி என்பது கயிலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், இந்த மகாலிங்க மலையை சித்தர்கள் வாழும் பூமி என்கின்றனர். காய கல்ப

Advertisement
மூலிகைகள் நிறைந்த வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சஞ்சீவி கிரி மலை என்பதே பின்னாளில், ‘சதுரகிரி மலை’ என மாறியது. இங்கு, சுந்தரலிங்கம், சந்தன லிங்கம் என்ற பெயர்களில் இரண்டு பெயர்களில் இறைவன் அருள்பாலிக்கிறார். அகத்தியர் முதல் 18 சித்தர்கள் வாழ்ந்து வழிபட்டதும், காயகற்ப மூலிகை வளம் நிறைந்ததுமாக இருக்கிறது இந்தத் தலம். அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் சுந்தர மகாலிங்கம் சுவாமியை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவதுண்டு. பழனி மலையில் உள்ள நவபாஷாண முருகன் சிலையை, போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்த போதுதான் செய்தார் என்று சொல்கிறார்கள். சதுரகிரி சுந்தர மகாலிங்க மலையில்
Advertisement
‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது. இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களில் இருந்து நீங்கி புண்ணியம் பெறலாம். அதுபோல் இங்கு சென்று வந்தால் மன அழுத்தம், மன பாரம் நீங்கும் என்று பலர் சொல்லுகிறார்கள்.

பௌர்ணமி வழிபாடு

இந்த ஆண்டு ஆனி மாத பௌர்ணமி வெள்ளிக்கிழமை ஆனி 7ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் ஆனி மாத பௌர்ணமி மற்றும் பிரதோசத்தை முன்னிட்டு வரும் 19 ம் தேதி முதல் 22 ம் தேதி வரையிலான 4 நாட்கள் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து வனத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மலையேறலாம். எளிதில் தீப்பற்றி எரியக்கூடிய பொருட்களை வனப்பகுதிக்கு எடுத்து வரக்கூடாது என்றும் கூறியுள்ளது. மேலும் தற்போது கோடை மழை பெய்து வருவதால், அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் அனுமதி ரத்து செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சதுரகிரியில் எழுந்தருளும் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கத்தை அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும் சித்தர்களின் தரிசனம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே வாய்புள்ளவர்கள் பௌர்ணமி தினத்தில் சிவனை சென்று தரிசனம் செய்து வரலாம்.

பக்தர்களுக்கான அறிவிப்பு

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் சென்று வர வேண்டும். இரவில் பக்தர்கள் தங்குவதற்கும், ஆறுகளில் இறங்கி குளிக்கவும் அனுமதி இல்லை. அதுபோல், அனுமதிக்கப்பட்ட நாட்களில் மழை பெய்து ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் தடை விதிக்கப்படும். இந்த ஆனி பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருவதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகமே செய்யும்.

சதுரகிரி மலைக்கு எப்படி செல்வது ?

வெளியூரில் இருந்து வருபவர்கள் மதுரை வந்தடைந்து அங்கிருந்து ஶ்ரீவில்லிபுத்தூர் வந்து வத்திராயிருப்பு தானிப்பாறை வந்தடைந்து அங்கிருந்து மலையேற துவங்கலாம். மாதத்தில் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் என எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். எனவே கோயிலுக்கு வருபவர்கள் இந்த 8 நாட்களை கருத்தில் கொண்டு வந்தால் மலையேற்ற அனுபவத்தையும், ஆன்மிகத்தையும் ஒருங்கே உணரலாம்.

இதனையும் படியுங்கள் : மூன்றாம் பிறை சந்திர வழிபாடு செய்தால் என்ன பலன் கிடைக்கும் என பார்க்கலாம்!!!

Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு பீட்ஸா மிகவும் பிடிக்குமா இதுவரை அதை கடையில் வாங்கி தான் சாப்பிட்டு உள்ளீர்களா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்!!!

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான துரித உணவாக பார்க்கப்படும் பீட்சா, இத்தாலி ஏழை மக்களின் உணவாக முதன் முதலில் தோன்றியது.…

56 நிமிடங்கள் ago

இதுவரை எத்தனையோ தோசை ரெசிபிக்களை செய்திருப்பீர்கள் ஆனால் ரவா பிரெட் தோசை செய்துள்ளீர்களா? இல்லையெனில் ஒரு முறை செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

பொதுவாக காலை உணவை நாம் வித்தியாசமாகவும் ருசியாகவும் சாப்பிடுவது அந்த நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலை அளிக்க உதவும். இந்த…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 ஜூலை 2024!

மேஷம் இன்று உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் நீண்ட காலமாக…

7 மணி நேரங்கள் ago

சனிதோஷத்தின் போது சனீஸ்வரரை குளிர்விக்கும் பரிகார முறைகள்!

சனி தேவன், சனி பகவான், சனீஸ்வரன் என பல பெயர்களாலும் அழைக்கப்படும் சனி பகவான், காகத்தை வாகனமாகக் கொண்டவர். சனிக்கிழமை,…

18 மணி நேரங்கள் ago

வித்தியாசமான முள்ளங்கி வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனிமேல் இப்படிதான் அடிக்கடி செய்வீர்கள்!!!

உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு சைடு டிஷ்ஷாக மசாலா செய்து அலுத்துவிட்டதா? ஒரு வித்தியாசமான, அதே சமயம்…

24 மணி நேரங்கள் ago

உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இந்த சப்பாத்தி சீஸ் ரோல் செய்து கொடுங்கள் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட‌ விரும்பி சாப்பிடுவார்கள்!!!

சப்பாத்தி பெரும்பாலானோரால் விரும்பி உண்ணப்படும் காலை மற்றும் இரவு நேர உணவு. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் கோதுமை அதிகம் விளைவதால்…

1 நாள் ago