மறந்தும் கூட சிவனுக்கு இந்த 5 பொருட்களை வைத்து பூஜை செய்ய கூடாது!

இந்து புராணங்கள் நமக்கு போதித்தபடி இருக்கும் கடவுள்களில் முடிவு இல்லாத கடவுள், இருக்கும் கடவுள்களிலேயே மிகவும் சக்தி சாய்ந்த கடவுள் என்றால் அது சிவபெருமான் ஒருவரை. ஆனால் சாதாரணமாக ஒரு வில்வ இலையை வைத்து பூஜை செய்தாலே சிவனின் பூரண அருள் நமக்கு கிடைக்கும். ஆனால் அப்படிப்பட்ட சிவபெர

By ·

இந்து புராணங்கள் நமக்கு போதித்தபடி இருக்கும் கடவுள்களில் முடிவு இல்லாத கடவுள், இருக்கும் கடவுள்களிலேயே மிகவும் சக்தி சாய்ந்த கடவுள் என்றால் அது சிவபெருமான் ஒருவரை. ஆனால் சாதாரணமாக ஒரு வில்வ இலையை வைத்து பூஜை செய்தாலே சிவனின் பூரண அருள் நமக்கு கிடைக்கும். ஆனால் அப்படிப்பட்ட சிவபெருமானுக்கு ஐந்து பொருட்களை வைத்து நாம் பூஜை செய்யக்கூடாது என நாம் சாஸ்திரங்களும் புராண கதைகளும் கூறி இருக்கிறார்கள். அது என்னென்ன பொருட்கள் என்று இந்த ஆன்மீகம குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தாழம் பூ

சிவபுராணத்தின் படி பிரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் இடையில் யார் பெரியவர் என்ற சண்டே வந்த பொழுது. அனைத்திலும் சிறந்த கடவுள் சிவபெருமான் ஜோதிலிங்கமாக உருவெடுத்து. தன் தலையையும் தன் கால் பகுதியையும் யார் முதலில் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர் என கூறினார். அதன்படி பிரம்மதேவர் ஜோதிலிங்கத்தின் தலையை நோக்கியும் விஷ்ணு பகவான் ஜோதிலிங்கத்தின் காலை நோக்கியும் சென்றார். வெகு தூரம் அவர்கள் சென்றும் அந்த ஜோதி லிங்கத்தின் முடிவை அடைய முடியவில்லை என்று விஷ்ணு பகவான் தன் தோல்வியை ஒப்புக்கொண்டார். ஆனால் பிரம்மதேவரோ நான் ஜோதிலிங்கத்தின் தலையை பார்த்து விட்டேன் என்றும் அங்கிருந்து இந்த தாழம்பூவை எடுத்து வந்தேன் என்றும் பொய் கூறிவிட்டார். அதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்ம தேவரின் நான்கு தலைகளில் நான்காவது தலையை வெட்டி. இனி தாழம்பூவை வைத்து எனக்கு பூஜை செய்யக்கூடாது என சாபம் கொடுத்து விட்டாராம் அன்றிலிருந்து சிவனுக்கு தாழம்பூவை வைத்து பூஜை செய்வதில்லை.

துளசி

சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியேறிய அக்னியில் இருந்து குழந்தையாக பிறந்தவர் ஜலந்திரன். காலப்போக்கில் ஜாந்திரனின் ஆணவம் தலை தூக்கியதால் சிவபெருமான் தன் மைந்தனான ஜலந்திரனையே சாம்பலாக்கி தன் உடம்போடே மறுபடியும் இனைத்துக் கொண்டார். இதனால் கோபம் கொண்ட துளசி தன் துளசி மலர்களால் சிவபெருமானை மறைத்து விட்டார். அன்றிலிருந்து சிவபெருமானுக்கு துளசியை வைத்தும் பூஜை செய்யப்படுவதில்லை. கூடுதலாக ஜலந்திரன் நீண்ட ஆயுள் காலத்துடன் இருக்க வேண்டும் என்று துளசி விஷ்ணுவை நோக்கி பூஜை செய்தபோது விஷ்ணு பகவான் ஜலந்திரன் போன்றே உருவம் எடுத்து அந்த பூஜையை கலைத்ததார். அதனால் துளசி விஷ்ணு பகவானுக்கு சாபம் அளித்தால். மேலும் விஷ்ணு பகவான் அவர் செய்த தவறுக்காக இனி எனக்கு செய்யப்படும் பூஜையில் துளசி இல்லாமல் அந்த பூஜை நிறைவேறாது என வரம் கொடுத்தார்.

தேங்காய் நீர்

பொதுவாக நாம் கடவுளுக்கு படைக்கும் தேங்காயை பிரசாதமாக எடுத்துக் கொள்வோம் ஆனால் அந்த தேங்காய் நீரை நாம் பிரசாதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது போல தேங்காய் நீரை வைத்து சிவபெருமானுக்கு பூஜை செய்யக்கூடாது. மேலும் இது போன்று மஞ்சள் குங்குமம் போன்ற பொருட்களை வைத்தும் சிவபெருமானுக்கு பூஜை செய்யக்கூடாது. ஆக மொத்தம் இந்த ஐந்து பொருட்களை வைத்து இனி சிவனுக்கு பூஜை செய்வதை தவிர்த்து விடுங்கள்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை