சின்ன வெங்காய கார சட்னி, தக்காளி இல்லா சின்ன வெங்காய சட்னி இப்படி செய்து பாருங்க!
கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கார சட்னி கிடைக்கும். அதே சுவையில் இன்றைக்கு நாம் ஒரு கார சட்னி ரெசிபியை பார்க்க போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் தக்காளியின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. இந்த இட்லி தோசைக்கு பரிமாறப்படும் சட்னியில் எத்தனையோ வகைகள் கேள்வி பட்டிருக்கும். அதில் ரொ
கொஞ்சம் வித்தியாசமான சுவையில் கார சட்னி கிடைக்கும். அதே சுவையில் இன்றைக்கு நாம் ஒரு கார சட்னி ரெசிபியை பார்க்க போகின்றோம். இன்றைய சூழ்நிலையில் தக்காளியின் விலை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. இந்த இட்லி தோசைக்கு பரிமாறப்படும் சட்னியில் எத்தனையோ வகைகள் கேள்வி பட்டிருக்கும். அதில் ரொம்பவே வித்தியாசமாக அதே நேரத்தில் ரொம்ப சுலபமாகவும் ருசியாகவும் செய்யக் கூடிய சட்னி ரெசிபியை பற்றி தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
தக்காளி இல்லாமல் ஒரு சைட் டிஷ் செய்ய வேண்டும் என்று நினைக்கும் போது, இந்த சட்னி ரெசிபியை முயற்சி செய்து பார்க்கலாம். அது மட்டும் இல்லாமல் இது சின்ன வெங்காயத்தில் செய்யப் போகும் சட்னி ரெசிபி என்பதால், இதன் ருசியும் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியமும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கும். ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். சுட சுட இட்லிக்கு இந்த சட்னி இருந்தா எத்தனை இட்லி சாப்பிட்டோம்னு தெரியாது.