- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சோயா உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோர் சோயாவை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியெனில் அதைக் கொண்டு சுவையான சோயா மிளகு கறி செய்யுங்கள். இந்த சோயா மிளகு கறி சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். எல்லோருக்கும் சோயா என்ற மீல் மேக்கர் பிடிக்கும் என்று கூறி விட முடியாது.
ஆனால் சோயா பீனிலிருந்து உருவாகக்கூடிய இந்த மீல்மேக்கர் பிரியாணி போன்றவற்றில் அதிகம் சேர்க்கப்படுவது உண்டு. அது போல இதை வைத்து 65, தொக்கு, குருமா, கிரேவி என்று பல விதங்களில் அசத்தலாக செய்து ரசித்து சாப்பிடலாம். அந்த வகையில் ரொம்ப சுவையான மற்றும் சுலபமாக செய்யக்கூடிய இந்த சோயா மிளகு கறி எப்படி நாம் செய்ய இருக்கிறோம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். அனைத்து நாட்களிலும் அசைவ உணவு எடுத்துக்கொள்ள முடியாது. அந்த நாட்களில் இந்த சோயா ரெசிபி செய்து சாப்பிடுவது, அசைவ உணவு ருசிக்கே டஃப் கொடுக்கும்.
பெரும்பாலும் இந்த சோயா உணவு வகைகள் குழந்தைகள் அதிகம் உண்பதில்லை, ஆனாலும் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதை குழந்தைகளுக்கு பிடித்த உணவாக செய்து கொடுத்தால் நல்லது தானே. மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம். ஏதாவது சூடாக சாப்பிட வேண்டும் அதுவும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் என்றால், இந்த சோயா மிளகு கறி ஒரு முறை உங்க வீட்ல ட்ரை பண்ணி பார்க்கலாம்.
இது சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அருமையாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த ரெசிபியை ஒரு முறை ருசித்தால் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள் எனவே ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். வாருங்கள் சுவையான சோயா மிளகு கறி எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : கிரீன் மீல் மேக்கர் 65 இந்த மாதிரி செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிடும்!!
Ingredients
Method
முதலில் சோயாவை நன்கு சுடு தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் சேர்த்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பட்டை சேர்த்து பின் நறுக்கி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு உப்பு, மஞ்சள் தூள், நாம் அரைத்து வைத்துள்ள பொடி, தயிர் சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து கொதிக்க விடவும்.
இது நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும் ஊற வைத்துள்ள சோயாவை நன்கு தண்ணீர் பிழிந்து சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
கிரேவி நன்கு சோயாவுடன் சேர்த்து தண்ணீர் வற்றி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான சோயா மிளகு கறி தயார்.




