Advertisement
அசைவம்

நாவில் எச்சி ஊறும் காரசாரமான மசாலா மீன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஏற்றது மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பை உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் அதிகமாக இதில் உள்ளது.

இதையும் படியுங்கள் : வீடே கமகமக்கும் மீன் வறுவல் செய்வது எப்படி ?

Advertisement

இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது. அதனால் ஒரு காரசாரமான மசாலா மீன் வறுவல் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறை விளக்கம் என அனைத்தையும் கீழே கொடுத்துளோம் .அதனை படித்து பார்த்து நீங்களும் இதை ஒரு முறை சமைத்து ருசித்து பாருங்கள்.

காரசாரமான மசாலா மீன் வறுவல் | Spicy Masala Fish Fry Recipe in Tamil

Print Recipe
மீன் என்றாலே வாசனை மிக்க குழம்பும், சாப்பிட சாப்பிட திகட்டாத வறுவலும் தான் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வரும். அதுமட்டுமல்லாமல் உடலுக்கு மிகவும் ஏற்றது. மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பை உள்ளதால் இது உடல்
Advertisement
எடையை அதிகரிக்கிறது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஃபேட்டி ஆசிட்டுகளான ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் இதில் அதிகமாக உள்ளது இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், டயட்டில் இருப்போருக்கு உகந்த ஒன்றாகவும் விளங்குகிறது.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Fish, மீன்
Prep Time 30 minutes
Cook Time
Advertisement
5 minutes
Total Time 35 minutes
Servings 4 people
Calories 126

Equipment

  • 1 பவுள்
  • மிக்ஸி
  • கடாய்

Ingredients

  • 250 கிராம் மீன்
  • தேங்காய் எண்ணை பொரிப்பதற்கு

அரைப்பதற்கு:

  • 3 சின்ன வெங்காயம்
  • 2 இன்ச் இஞ்சி
  • 6 பல் பூண்டு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • பின் மீன் துண்டுகளை தண்ணீரில் நன்றாக கழுவி, அதனை ஒரு பவுளில் போட்டு, அத்துடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து பிரட்டி 30 நிமிடம் நன்றாக ஊற வைக்கவேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், மீன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா மீன் வறுவல் ரெடி.

Nutrition

Serving: 250gram | Calories: 126kcal | Carbohydrates: 1.3g | Protein: 56g | Fat: 7g | Saturated Fat: 2.4g | Cholesterol: 32mg | Sodium: 34mg | Potassium: 450mg
Advertisement
swetha

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

8 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

9 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

11 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

15 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

15 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

16 மணி நேரங்கள் ago