- Advertisement -
மஞ்சூரியன் , இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்து செய்வதால், இட்லி மஞ்சூரியன் இந்தியன் வெர்ஷன் என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம். ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும். இட்லியில் மஞ்சூரியன் செய்வதா? என்று யோசிக்காதீர்கள்! மிக மிக சுலபமாக செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
-விளம்பரம்-
ஸ்பைசி இட்லி மஞ்சூரியன் | Spicy Idly Manchurian Recipe In Tamil
மஞ்சூரியன், இது உண்மையான சீன உணவாக இருந்தாலும், சைனீஸ் உணவின் நம் பாராபரிய இட்லியை சேர்த்துசெய்வதால், இட்லி மஞ்சூரியன் இந்தியன் வெர்ஷன்என்று சொல்லலாம். பொதுவா இட்லி மீந்து போனால் நாம் அதை உதிர்த்து உப்புமா செய்து விடுவோம்.ஆனால் இட்லி உப்புமாவை விட இட்லி மஞ்சூரியன் செய்து பாருங்கள் அவ்வளவு அருமையாக இருக்கும்.இட்லியில் மஞ்சூரியன் செய்வதா? என்று யோசிக்காதீர்கள்! மிக மிக சுலபமாக செய்து விடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Yield: 4
Calories: 253kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 5 இட்லிகள்
- 2 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
- 2 தேக்கரண்டி கார்ன்ஃப்ளார்
- 2 தேக்கரண்டி மிளகாய்தூள்
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலாதூள்
- 1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 1 வெங்காயம்
- 1 டீஸ்பூன் சோயா சாஸ்
- 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
செய்முறை
- முதலில் இட்லிகளை நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்பு அதனோடு இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார்,மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரும் சேர்த்துநன்கு பிசறிக்கொள்ளுங்கள்
- பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் எண்ணையில்போட்டுப் பொரித்தெடுங்கள்.
- இதற்கிடையில்,கடாயை சூடாக்க குறைந்த தீயில் அடுப்பில் வைக்கவும். பின்னர் 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து 1 டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.
- பிறகு1 டீஸ்பூன் சோயா சாஸ், 1 கப் தக்காளி சாஸ் மற்றும் மீதமுள்ள சோள மாவு கரைசல் சேர்த்து நன்கு கலக்கவும்.
- கரைசலைஊற்றிய பின், 1 டீஸ்பூன் வெள்ளை வினிகர் சேர்த்து, பின்னர் வறுத்த மஞ்சூரியன் சேர்த்து கலக்கவும். 5 நிமிடங்கள் சமைக்கவும். உங்கள் இட்லி மஞ்சூரியன் தயாராக உள்ளது, இதை சூடாக பரிமாறலாம்.
Nutrition
Serving: 1bowl | Calories: 253kcal | Carbohydrates: 58.1g | Protein: 9.8g | Fiber: 36.2g
- Advertisement -