நீர்த்துப்போன விந்துவை கெட்டியாக்கும் சாதாரணமாக கிடைக்கும் மூலிகை!

- Advertisement -

புளி… நம்மளோட தினசரி சமையல்ல புளி இல்லாம இருக்காது. குழம்புல சேர்க்கிறது மாதிரியே ரசத்துலயும் புளி சேர்ப்போம். ஆனா, அந்த புளியை சிலபேர் மட்டுந்தான் மருந்தா பயன்படுத்தியிருப்பாங்க. ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம், வைட்டமின் பி, கால்சியம் சத்துகள்னு நிறைய சத்துகள் புளியில இருக்கு. புளி மட்டுமில்லாம புளியங்காய், புளிய இலை, புளியம்பூ, புளியங்கொட்டை, புளியம்பட்டைன்னு எல்லாத்துக்கும் மருத்துவ குணங்கள் இருக்கு.

-விளம்பரம்-

உள்நாக்கு வீக்கம் டான்சில்

உடம்புல அடிபட்டு ரத்தக்கட்டு, வீக்கம் உண்டானா புளியோட உப்பும், தண்ணியும் சேர்த்து நல்லா கரைச்சி கொதிக்க வச்சி பொறுக்குற சூட்டுல பற்று போட்டு வந்தா குணம் கிடைக்கும். இந்த புளி, உப்பு கலவையோட பிரண்டையும் சேர்த்து பற்று போட்டுட்டு வந்தா கூடுதல் பலன் கிடைக்கும். இதேமாதிரி உள்நாக்குல வீக்கமோ, டான்சில் பிரச்சினையோ உண்டானா பழைய புளியையும் உப்பையும் சேர்த்து அரைச்சி உள்நாக்குல தடவுனா பிரச்சினை சரியாயிரும். தேள் கொட்டுனா அந்த இடத்துல கொஞ்சம் புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்துப் பிசைஞ்சி தடவிவிட்டா விஷம் இறங்கிரும். தேவைப்பட்டா வேற சிகிச்சையும் எடுத்துக்கிடலாம்.

- Advertisement -

உடல் வலி நரம்பு வலி

புளி மாதிரியே புளிய இலைக்கும் சில மருத்துவ குணங்கள் இருக்கு. அதாவது புளிய இலையை தண்ணி விட்டு அவிச்சி உடம்புவலி, நரம்புவலி உள்ள இடங்கள்ல ஒத்தடம் கொடுத்தா பிரச்சினை சரியாயிரும். முடக்குவாதம் உள்ளவங்க புளிய இலையை தண்ணிவிட்டு கொதிக்க வச்சி ஆவி பிடிக்கலாம். கருணைக்கிழங்குல நமைச்சல், அரிப்பு அதிகமா இருக்கும். அந்த தன்மை குறையுறதுக்கு கருணைக்கிழங்கை வேக வைக்கும்போது கொஞ்சம் புளிய இலையை சேர்க்கிறது வழக்கம். கிராமப்புறங்கள்ல இன்னைக்கும் இந்தப்பழக்கம் இருக்கு. இந்தமாதிரி இலைகளும் மருந்தா பயன்படுது.

புளியங்கொழுந்து கீரை

உடல் சூடு அதிகரிச்சாலோ, கண் நோய் வந்தாலோ புளியங்கொழுந்தை துவரம்பருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டா அந்த பிரச்சினை சரியாயிரும். உளுந்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைச்சி துவையல் செஞ்சி சாப்பிடலாம். இதை இட்லி, தோசைக்கு தொட்டுக்கிடலாம். ஆந்திராவுல சிந்தகிகலுன்னு சொல்வாங்க. ஒரு கீரை மாதிரியே இதை பருப்பு சேர்த்துக் கடைஞ்சி சாப்பிடுறாங்க. சீதளம் உள்ளவங்க இதை அடிக்கடி சமைச்சி சாப்பிட்டு வந்தா சீதளத்தை முறிச்சிரும். இதேமாதிரி சொறி, சிரங்கு உள்ளவங்க, புண் உள்ளவங்க அதுக்கு மருந்து சாப்பிடும்போது கூடவே புளியங்கொழுந்தையும் சமைச்சி சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

கீல்வாதம் நீர்ச்சுருக்கு

புளியம்பூவுக்கும் மருத்துவ குணம் இருக்கு. புளியம்பூவோட தண்ணி சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி சர்க்கரை சேர்த்து காலை, மாலை வேளைகள்ல அரை டம்ளர் அளவு குடிச்சிட்டு வந்தா ஜலதோஷம் சரியாயிரும். புளியம்பூவையும், இலையையும் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி வலி, வீக்கம் உள்ள இடத்துல கட்டுனா பிரச்சினை சரியாகும். இதேமாதிரி கீல்வாதம், முடக்குவாதத்தால பாதிக்கப்பட்டவங்களுக்கும் இதேமாதிரி செஞ்சிட்டு வந்தா குணம் கிடைக்கும். புளியம்பூவோட உப்பு, மிளகு சேர்த்து அரைச்சி துவையல் செஞ்சி நெய் சேர்த்து சோறு கூட பிசைஞ்சி சாப்பிட்டா நீர்ச்சுருக்கு சரியாகும். புளியம்பூவை மையா அரைச்சி கண் இமைகள் மேல பற்று போட்டுட்டு வந்தா கண் சிவப்பு, கண் வலி பிரச்சினை சரியாகும். புளியங்கொட்டையை வாயில போட்டு நல்லா மென்று சுவைச்சாலும் நீர்ச்சுருக்கு பிரச்சினை சரியாகும்.

-விளம்பரம்-

நீர்த்துப்போன விந்து கெட்டியாகும்

புளியங்கொட்டையை மண் சட்டியில போட்டு வறுத்து தண்ணி ஊத்தி ராத்திரி முழுசும் வச்சிட்டு காலைல அதோட தோலை நீக்கிட்டு மென்னு சாப்பிடலாம். இதேமாதிரி காலைல செஞ்சி ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிக்கலாம். இந்தமாதிரி செஞ்சிட்டு வந்தா ராத்திரி தூக்கத்துல விந்து வெளியேறுற பிரச்சினை சரியாகும். நீர்த்துப்போன விந்து அதாவது தண்ணியா விந்து போற பிரச்சினை உள்ளவங்களுக்கு அது கட்டியாகி ஆண்மை விருத்தி அடையும். அதுமட்டுமில்ல தளர்ந்துபோன ஆண் உறுப்பு நல்லா ஸ்ட்ராங்க் ஆகும். நீர்க்கடுப்பு, சிறுநீர் கழிக்கும்போது ஏற்படக்கூடிய எரிச்சல், உடல்சூடு பிரச்சினையும் சரியாகும். புளியங்கொட்டை தோலோட மாதுளம்பழத்தோலை சேர்த்துக் காய வச்சி பொடியாக்கி காலைலயும், சாயங்காலமும் கொஞ்சம் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தா வயிறு உப்புசம், சீதபேதி சரியாகும்.

மீண்டும் பழைய நடைமுறை

ஆக, புளிய மரத்துல எல்லா பாகங்களுக்கும் மருத்துவ குணம் இருக்கு. அதை புரிஞ்சிட்டு இனிமே நாம அதை பயன்படுத்தி நம்ம பிரச்சினைகளை சரி பண்ணலாம். நம்ம முன்னோர் பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் எல்லாத்துலயுமே மருத்துவ குணம் இருந்திச்சி. அந்த உண்மையை இப்போ பலபேர் புரிஞ்சிட்டு திரும்பவும் பழைய நடைமுறையை பின்பற்றுனா பலன் பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here