Advertisement
Uncategorized

நீங்கள் வைக்கும் சாம்பாரின் சுவை இன்னும் அதிகரிக்க இப்படி தஞ்சாவூர் பக்குவத்தில் ஒருமுறை சாம்பார் வைத்து பாருங்கள்!!!

Advertisement

சாம்பார் என்பது வாரத்திற்கு இரண்டு முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாக சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்துக் கொடுப்பார்கள். இந்த சாம்பாரை பாரம்பரிய முறையில் தஞ்சாவூர் பக்குவத்தில் எவ்வாறு செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

எப்பொழுதும் நம் வீட்டில் சமைக்கும் உணவை விட நமது பக்கத்து வீட்டில் சமைக்கும் உணவுகளின் சுவை பலருக்கும் பிடிக்கும். பள்ளியில் குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் பொழுது ஒருவர் மற்றொருவரின் உணவைத்தான் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கை பக்குவம் இருக்கிறது. அது போல ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவைகளில் அங்கு சமைக்கப்படும் உணவுகள் இருக்கும். இவ்வாறு தான் ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் அந்த ஊருக்கு என்று பெயர் போனதாக இருக்கும்.

Advertisement

அப்படி தஞ்சாவூர் சாம்பார் என்பது அனைவர்க்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் செய்வது எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

தஞ்சாவூர் சாம்பார் | Tanjore Sambar Recipe In Tamil

Print Recipe
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான சுவைகளில் அங்கு சமைக்கப்படும் உணவுகள் இருக்கும். இவ்வாறு தான் ஒவ்வொருஊரிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் அந்த ஊருக்கு என்று பெயர் போனதாக இருக்கும். சாம்பார் என்பது வாரத்திற்குஇரண்டு முறையாவது அனைத்து வீடுகளிலும் செய்யப்படும் ஒரு குழம்பு வகை ஆகும். இதனை இட்லி,தோசைக்கு தொட்டுக் கொள்ளவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் என அனைவரும் விருப்பமாகசாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு கூட காரம் சேர்க்காமல் சாம்பாரை தான் உணவில் சேர்த்துக்கொடுப்பார்கள் அப்படி தஞ்சாவூர் சாம்பார் என்பது அனைவர்க்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு தஞ்சாவூர் ஸ்பெஷல்சாம்பார் செய்வது எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword தஞ்சாவூர் சாம்பார்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 38

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • கிராம் துவரம் பருப்பு
  • 25 கிராம் தனியா
  • 25 கிராம் கடலைப் பருப்பு
  • 100 கிராம் வரமிளகாய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 2 பெருங்காயம் சிறிய துண்டு
  • 1 கைப்பிடி கருவேப்பிலை
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • புளி நெல்லிக்காய் அளவு
  • 2 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 100 கிராம் பரங்கிக்காய்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் கடுகு
  • 1/4 ஸ்பூன் வெந்தயம்
  • 4 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் உப்பு
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 4 ஸ்பூன் எண்ணெய்
  • 1 கொத்து கொத்தமல்லி தழை

Instructions

  • முதலில் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒருகடாயை வைத்து வேண்டும். பிறகு ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். பின்னர் 50 கிராம் தனியாவை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பு சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் 50 கிராம் துவரம் பருப்புடன், மிளகு, வெந்தயம்ஒன்றாக சேர்த்து வறுக்க வேண்டும்.
    Advertisement
  • பிறகு இதனுடன் சிறிய துண்டு பெருங்காயம், ஒருகொத்து கறிவேப்பிலை சேர்த்து வறுத்தெடுக்க வேண்டும். பின்னர் நூறு கிராம் துவரம் பருப்பை நன்றாகக் கழுவி குக்கரில் சேர்த்து, இதனுடன் 3 டம்ளர் தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும்வரை வேக வைத்து கடைந்து வைக்க வேண்டும்.
  • இறுதியாக வரமிளகாய் சேர்த்து வறுத்து, இதனையும்அவற்றுடன் சேர்க்க வேண்டும். பிறகு இவற்றை ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவேண்டும். பிறகு மறுபடியும் கடையை அடுப்பின் மீது வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெயை ஊற்றவேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் வெந்தயம் சேர்த்துதாளிக்க வேண்டும்.
  • பின்னர் வெங்காயம், தக்காளி, பரங்கிக்காய் மற்றும் பச்சை மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதனுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
  •  
    பிறகு இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியைஊறவைத்து, கரைத்து, புளிக் கரைசலையும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். பிறகு மஞ்சள்தூள் சேர்த்து கலந்துவிட்டு, இதனுடன் கடைந்து வைத்துள்ள பருப்பையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
  • இப்பொழுது அரைத்து வைத்துள்ள சாம்பார் பொடியை2 ஸ்பூன் அளவு சேர்த்து கலந்துவிட்டு, இறுதியாக கருவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துஒரு கொதி வந்ததும் அடுப்பை அனைத்துவிட வேண்டும்.
     

Nutrition

Serving: 600g | Calories: 38kcal | Carbohydrates: 4.5g | Protein: 18g | Fiber: 1.7g | Vitamin A: 45IU | Vitamin C: 40mg | Calcium: 2mg | Iron: 10mg

இதையும் படியுங்கள் : உடனடியா இட்லி சாம்பார் பத்து நிமிடத்தில்  பக்காவான சுவையில் இப்படி கூட செய்யலாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான ஆலு மேத்தி சப்ஜி ரெசிபி இப்படி செஞ்சி பாருங்க! உருளைக்கிழங்கு வறுவல்,குருமா வைப்பது போலவே ரொம்ப சுலபம்!!

பொதுவா இந்த சப்பாத்தி பூரி போன்ற டிபன் வகைகளுக்கு ஏதாவது காரசாரமான சைடு டிஷ் இருந்தால் சாப்பிட ரொம்பவே நல்லா…

3 மணி நேரங்கள் ago

டீ பிரியர்கள், மசாலா டீ இப்படி செய்து பாருங்க? சுவையும், மணமும் அசத்தலாக இருக்கும்!!

இப்பொழுதைய நாட்களில் சாப்பாடு சாப்பிடாமல் கூட ஆண்கள் இருந்து விடுவார்கள் ஆனால் டீ குடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. ஏன்…

3 மணி நேரங்கள் ago

கடன் பிரச்சனைகள் தீர செவ்வாய்க்கிழமை முருகனை வேண்டி இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

அனைவரும் ஏதோ ஒரு வகையில் கடனோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சாதாரண மனிதர்கள் வரை, ஞானியர்கள் வரை அனைவரும் கடன்…

3 மணி நேரங்கள் ago

ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!

மட்டன் சிக்கன் பிடித்தவர்களுக்கு பெரும்பாலும் ஈரல் பிடிக்காது. ஆனால் ஈரல் பிடித்தவர்களுக்கு ஈரல் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று தோன்றும்…

5 மணி நேரங்கள் ago

இந்த கோடை வெயிலுக்கு இதமாக உங்கள் குழந்தைகளுக்கு குளு குளு நுங்கு கீர் செய்து கொடுங்கள் மிகவும் சுவையாக இருக்கும்!!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

5 மணி நேரங்கள் ago

திருமண விழாக்களில் முகூர்த்த கால் நடுவதற்கான காரணங்கள்

ஒரு வீட்டில் திருமணம் நடக்கப்போகிறது என்றால் அதற்கு ஏராளமான சடங்குகள் சம்பிரதாயங்கள் இருக்கும். அவை அனைத்தும் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனதிற்கு…

7 மணி நேரங்கள் ago