Advertisement
சைவம்

சுவையான கல்யாண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

Advertisement

குழந்தைகளுக்கு மிகவும் ஒரு பிடித்த உணவு என்று பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக நெய் சோறும் இருக்கும். இந்த நெய் சோறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக நெய் சோறு இருக்கும். ஆனால் என்னவோ தெரிலடயவில்லை நம் வீட்டில் நெய் சோறு செய்தால் அது சரியில்லை இது சரியில்லை என்று குற்றம் சொல்வார்கள்.

சுவையான கல்யாண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?

Print Recipe
ஆனால் கல்யாண வீடுகளில் நெய் சோறு தயார் செய்து இருந்தால் எங்கிருந்து அவ்வளவு பசி எடுக்கும் தெரியவில்லை ஒரு கட்டு கட்டி விடுவார்கள். இன்று நம் கல்யாண வீட்டு நெய் சோறு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Course LUNCH, Main Course
Cuisine Indian, TAMIL
Keyword GHEE RICE, நெய் சாதம்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4
Calories 210

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 5 TBSP நெய்
  • 6 PIECE லவங்கம்
  • 2 PIECE பட்டை
  • 4 PIECE ஏலக்காய்
  • 2 PIECE அண்ணாச்சி பூ
  • 2 LEAF பிரியாணி இலை
  • 1 TBSP கடல் பாசி
  • 1 TBSP முந்திரி பருப்பு
  • 3 பெரிய வெங்காயம்
  • 1 TBSP இஞ்சி,பூண்டு விழுது
  • 5 PIECE பச்சைமிளகாய்  
  • 2 கப் பாசுமதி அரிசி ஊற வைத்து கொள்ளுங்கள்
  • புதினா ( நறுக்கி கொள்ளவும் ) சிறிது
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் ஒரு குக்கரில் 5 டேபிள்ஸ்பூன் அளவிலான
    Advertisement
    நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய் சூடாகும் வரை காத்திருக்கவும், நெய் சூடேறியவுடன்.
  • பின் அதனுடன் லவங்கம், பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, கடல் பாசி, பிரியாணி இலை, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும் ரொம்பவும் அதிகமாக வறுக்காமல் சற்று மிதமான அளவிற்கு வதக்கி கொள்ளவும்.
  • இப்போது மிதமான அளவில் வதக்கியவுடன் நாம் வெட்டி வைத்துள்ள
    Advertisement
    பெரிய வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும்முறை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
  • வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து பச்சைபாடை போகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளுங்கள், பச்சை வாடை போன பின்பு.
  • நம்ம ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நெய் சோறை நன்றாக கிண்டி விடவும். பின் எவ்வளவு அரிசி சேர்த்துக் கொண்டீர்களோ அதற்கு இணையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.
  • அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக கிளறி விடவும் பின்பு குக்கரின் மூடியை மூடிவிட்டு ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.
  • ஒரு விசில் வந்தவுடன் பிரஷரை இறக்கி குக்கரின் மூடியே எடுத்து அதில் உள்ள நெய் சோறை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது கல்யாண வீட்டு சுவையுடன் கூடிய நெய் சோறு இனிதே தயாராகி விட்டது.

Nutrition

Serving: 4PERSON | Calories: 210kcal | Carbohydrates: 46g | Protein: 5g | Fat: 11g | Trans Fat: 0.7g
Advertisement
Advertisement
swetha

Recent Posts

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

8 நிமிடங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

3 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

3 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

6 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

7 மணி நேரங்கள் ago