- Advertisement -
குழந்தைகளுக்கு மிகவும் ஒரு பிடித்த உணவு என்று பட்டியல் போட்டால் அதில் கண்டிப்பாக நெய் சோறும் இருக்கும். இந்த நெய் சோறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக நெய் சோறு இருக்கும். ஆனால் என்னவோ தெரிலடயவில்லை நம் வீட்டில் நெய் சோறு செய்தால் அது சரியில்லை இது சரியில்லை என்று குற்றம் சொல்வார்கள்.
சுவையான கல்யாண வீட்டு நெய் சாதம் செய்வது எப்படி ?
ஆனால் கல்யாண வீடுகளில் நெய் சோறு தயார் செய்து இருந்தால் எங்கிருந்து அவ்வளவு பசி எடுக்கும் தெரியவில்லை ஒரு கட்டு கட்டி விடுவார்கள். இன்று நம் கல்யாண வீட்டு நெய் சோறு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Yield: 4
Calories: 210kcal
Equipment
- 1 குக்கர்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 5 TBSP நெய்
- 6 PIECE லவங்கம்
- 2 PIECE பட்டை
- 4 PIECE ஏலக்காய்
- 2 PIECE அண்ணாச்சி பூ
- 2 LEAF பிரியாணி இலை
- 1 TBSP கடல் பாசி
- 1 TBSP முந்திரி பருப்பு
- 3 பெரிய வெங்காயம்
- 1 TBSP இஞ்சி,பூண்டு விழுது
- 5 PIECE பச்சைமிளகாய்
- 2 கப் பாசுமதி அரிசி ஊற வைத்து கொள்ளுங்கள்
- புதினா ( நறுக்கி கொள்ளவும் ) சிறிது
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு குக்கரில் 5 டேபிள்ஸ்பூன் அளவிலான நெய் ஊற்றிக் கொள்ளவும் நெய் சூடாகும் வரை காத்திருக்கவும், நெய் சூடேறியவுடன்.
- பின் அதனுடன் லவங்கம், பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, கடல் பாசி, பிரியாணி இலை, முந்திரி பருப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும் ரொம்பவும் அதிகமாக வறுக்காமல் சற்று மிதமான அளவிற்கு வதக்கி கொள்ளவும்.
- இப்போது மிதமான அளவில் வதக்கியவுடன் நாம் வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயத்தையும் அதனுடன் சேர்த்து வதக்கவும், வெங்காயம் பொன்னிறமாக வரும்முறை வதக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
- வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் பச்சை மிளகாயையும் சேர்த்து பச்சைபாடை போகும் அளவிற்கு வதக்கிக் கொள்ளுங்கள், பச்சை வாடை போன பின்பு.
- நம்ம ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நெய் சோறை நன்றாக கிண்டி விடவும். பின் எவ்வளவு அரிசி சேர்த்துக் கொண்டீர்களோ அதற்கு இணையான அளவு தண்ணீரையும் சேர்த்து கொள்ளவும்.
- அதனுடன் நாம் நறுக்கி வைத்துள்ள புதினா இலைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்பு நன்றாக கிளறி விடவும் பின்பு குக்கரின் மூடியை மூடிவிட்டு ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- ஒரு விசில் வந்தவுடன் பிரஷரை இறக்கி குக்கரின் மூடியே எடுத்து அதில் உள்ள நெய் சோறை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது கல்யாண வீட்டு சுவையுடன் கூடிய நெய் சோறு இனிதே தயாராகி விட்டது.
Nutrition
Serving: 4PERSON | Calories: 210kcal | Carbohydrates: 46g | Protein: 5g | Fat: 11g | Trans Fat: 0.7g
- Advertisement -