Advertisement
ஆன்மிகம்

தை அமாவாசையின் சிறப்புகளும் வீட்டில் பணம் சேர தை அமாவாசை என்று செய்ய வேண்டிய சில விஷயங்களும்..!

Advertisement

மாதம் மாதம் அமாவாசை வந்தாலும் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை இந்த மூன்று அமாவாசைகளும் மிகவும் சிறப்பானது. அமாவாசை அன்று நம் வீட்டில் இறந்த முன்னோர்களுக்கு படையல் வைத்து அவர்களை வணங்கினால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும். இந்த வருடம் தை அமாவாசை ஆனது வெள்ளிக்கிழமை என்று வருவதால் இந்த தை அமாவாசை இன்னும் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. பிப்ரவரி 9 வெள்ளிக்கிழமை வரக்கூடிய இந்த தை அமாவாசையில் நாம் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பானதாகும்.

தை அமாவாசையின் சிறப்புகள்

இந்த தை அமாவாசை அன்று நம் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு சென்று சிவனை வழிபட்டால் மிகவும் நல்லது. சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஆற்றிய இரண்டு முக்கியமான திருவிளையாடல்கள் நிகழ்ந்த தினம் தான் இந்த தை அமாவாசை. எனவே இந்த தை அமாவாசை அன்று சிவன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுதல் மிக மிக சிறப்பு. திருக்கடையூரில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அவரை வழிபடுதல் நமக்கு ஏற்றும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும். உதாரணமாக எமபயம் நோய் சம்பந்தமான பிரச்சினைகள் கடன் பிரச்சினைகள் மற்ற சங்கடங்கள் என அனைத்தும் நீங்கும். இந்த தை மாதமானது போற்றுதலுக்குரிய மாதம் என கருதப்படும்.

Advertisement

ராசி சுழற்சியில் பத்தாவது மாதமான இந்த தை மாதம் நிறைமாதம் என்றும் அழைக்கப்படும். விவசாயத்திற்கு மட்டுமில்லாமல் மற்ற அனைத்திற்கும் மிகவும் உகந்த மாதம் தான் இந்த தை மாதம். நாம் தொட்ட காரியங்கள் அனைத்தும் கைகூட இந்த தை அமாவாசை என்று முன்னோர்களுக்கு படைகள் இட்டு வழிபடலாம். தை அமாவாசை அன்று தான் முன்னோர்கள் அனைவரும் மேலோகத்திற்கு அனுப்பப்படுவார்கள் எனவே முன்னோர்களுடைய ஆசியைப் பெற உகந்த நாள் இந்த தை அமாவாசை. முழுவதுமாக சரணாகதி அடைந்த பக்தன் மார்க்கண்டேயனை எமனிடமிருந்து காக்க எமனை வதம் செய்து கால சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் அவதரித்த நாள் தான் இந்த தை அமாவாசை.

திருக்கடையூரில் எமனை வதம் செய்த மாதிரி கால சம்ஹார மூர்த்தியாக சிவபெருமான் காட்சியளிப்பார். இந்த தை அமாவாசை அன்று அபிராமி அந்தாதி பாடல் பாடுவது மிகவும் சிறப்பானது சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரையில் அனைவரும் இந்த அபிராமி

Advertisement
அந்தாதி பாடலை பாடி முன்னோர்களை வழிபடலாம். சிவபெருமான் காட்சியளிக்கக்கூடிய அந்த திருக்கடையூரில் தான் அபிராமி அந்தாதி பாடல் அரங்கேற்றப்பட்டது. அபிராமி அந்தாதி பாடலில் இருக்கக்கூடிய 100 பாடல்களில் ஒரு பாடலில் முடிய குடிக்க அதை வார்த்தையில் இருந்து மற்ற பாடலின் தொடக்கம் ஆரம்பிக்கும் இதுதான் அபிராமி அந்தாதி என அழைக்கப்படுகிறது. இந்த அபிராமி அந்தாதி பாடல்கள் அனைத்தும் ஒரே இரவில் அரங்கேற்றப்பட்டது. எனவே இத்தகைய சிறப்புமிக்க அபிராமி அந்தாதியை தை
Advertisement
அமாவாசை என்று பாடுவது மிகவும் சிறப்பானது. முழுவதுமாக அனைத்து பாடல்களையும் பாட முடியவில்லை என்றாலும் ஏதாவது ஒரு பாடலையாவது பாடுவது சிறந்தது.

தை அமாவாசை அன்று செய்ய வேண்டியவைகள்

தை அமாவாசை இந்த வருடம் தை வெள்ளிக்கிழமையில் வருவதால் நாம் பூஜை அறையில் இந்த ஒரு பொருளை வைத்தால் நம் வீட்டில் செல்வமழை பொழியும். அது என்ன பொருள் என்றால் பச்சை கற்பூரம் தான். இந்த பச்சை கற்பூரத்தை நாம் பூஜை அறையில் மட்டுமில்லாமல் இன்னும் சில இடங்களிலும் வைக்க வேண்டும். முதலில் பூஜை அறையில் உள்ள நாணயங்கள் பொட்டு வைக்கும் பாத்திரத்தில் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். அடுத்து நம் வீட்டில் தங்க நகைகள் பணம் வைத்துள்ள இடத்தில் பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். மேலும் நாம் உபயோகப்படுத்தும் பர்ஸ்களிலும் இந்த பச்சை கற்பூரத்தை வைக்க வேண்டும். அப்படி வைத்தால் நம் வீட்டில் செல்வமழை பொழியும். தை அமாவாசை என்று திருக்கடையூர் சென்று வழிபடுபவர்கள் அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குவது மிகவும் சிறப்பானதாகும். நாம் இந்த முறையில் காலை நேரத்தில் முன்னோர்களுக்கு வழிபட்டு படையில் இடுவது மாலை நேரத்தில் இந்த பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து பயப்படுவது போன்ற விஷயங்களை செய்தால் நம்முடைய சாப தோஷங்கள் நீங்கி முன்னோர்களது ஆசியை பெறலாம்.

இதனையும் படியுங்கள் : வீட்டிற்கு வருபவர்களை இந்த இடத்தில் மட்டும் அமர விடக்கூடாது! கனவன் மனைவிக்குள் சண்டை வருமாம்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

6 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

2 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

13 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

19 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

22 மணி நேரங்கள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

22 மணி நேரங்கள் ago