Advertisement
காலை உணவு

வல்லாரை கீரையை வைத்து கமகமனூ ருசியான IQ தோசை ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

Advertisement

இன்னிக்கு அருமையான ஐ க்யூ தோசை பண்ண போறோம். அது என்ன IQ தோசை அப்படின்னு கேட்டீங்கன்னா. அது ஒன்னும் இல்லங்க நம்மளோட ஞாபக சக்தி அதிகரிக்க கூடிய முக்கியமான ஒரு பொருளை வைத்து பண்ண போறோம். அப்படி அது என்ன பொருள் அப்படின்னு யோசிச்சீங்கன்னா அது ஒரு கீரை அது என்ன கீரை அதுதான் வல்லாரை கீரை.

இந்த வல்லாரைக் கீரையை வைத்து ஒரு தோசை சூப்பரா செய்து குழந்தைகளுக்கு கொடுக்க போறோம். அந்த தோசை எல்லாருமே சாப்பிடலாம் ஞாபக சக்தி பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருமே இந்த IQ தோசையை சூப்பரா செய்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம இந்த வல்லாரைக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு இந்த மாதிரி வச்சு கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு ரொம்பவே அடம்பிடிப்பாங்க.

Advertisement

அப்படி அடம்பிடிக்கிறவங்களுக்காக தான் நம்ம இந்த தோசை மாவில் வல்லாரைக்கீரை சேர்த்து செஞ்சு கொடுக்கப் போறோம். குழந்தைகளை இங்க பாருங்க பச்சை கலர் தோசை அப்படின்னு சொல்லி ஏமாத்த போறோம். இப்படி கலர் கலரா தோசை சுட்டுக்கொடுத்து குழந்தைகளை சாப்பிட வைத்து அவங்களை ஆரோக்கியமாக ஆக்க போறோம். அது மட்டும் இல்லை ஞாபக சக்தியும் புத்தி கூர்மையும் அதிகமாக்க போறோம்.

அதுக்கு தான் இந்த வல்லாரை கீரையை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தோசை செய்து கொடுத்தோம்னா அவங்க கலரை பார்த்துட்டு தோசைல என்ன சேர்த்து செய்து  இருக்கோம்னு கேட்க மாட்டாங்க அப்படியே சாப்பிடுவாங்க. நம்ம என்ன பண்ண போறோம் இப்போ இந்த வல்லாரை கீரையை வச்சு அருமையான தோசை குழந்தைகளுக்கு IQ அளவை அதிகம் பண்றதுக்காக செய்து கொடுக்கப் போறோம். சரி வாங்க என்ன IQ தோசை எப்படி செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்

வல்லாரை IQ தோசை | Vallarai IQ Dosa Recipe In Tamil

Print Recipe
வல்லாரைக் கீரையை வைத்து ஒரு தோசை சூப்பரா செய்து குழந்தைகளுக்கு கொடுக்க போறோம். அந்த
Advertisement
தோசை எல்லாருமே சாப்பிடலாம் ஞாபக சக்தி பிரச்சனை இருக்கிறவங்க எல்லாருமே இந்த IQ தோசையை சூப்பரா செய்து சாப்பிடலாம். அது மட்டும் இல்லாம இந்த வல்லாரைக் கீரையை கூட்டு, பொரியல், குழம்பு இந்த மாதிரி வச்சு கொடுக்கும்போது குழந்தைகள் சாப்பிடுவதற்கு ரொம்பவே அடம்பிடிப்பாங்க. இந்த வல்லாரை கீரையை வச்சு அருமையான தோசை குழந்தைகளுக்கு IQ அளவை அதிகம் பண்றதுக்காக செய்து கொடுக்கப் போறோம்.
Course Breakfast, dinner
Cuisine tamil nadu
Keyword Vallarai Keerai Dosa
Advertisement
Prep Time 5 minutes
Cook Time 5 minutes
Servings 4
Calories 105

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 1 கப் தோசை மாவு
  • 1 கைப்பிடி வல்லாரை கீரை
  • 1 கைப்பிடி கொத்தமல்லி
  • 2 பச்சைமிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பல் பூண்டு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் வல்லாரைக் கீரையை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். வல்லாரைக் கீரையை பொரியலுக்கு, குழம்பிற்கு செய்யும்பொழுது வெறும் இலைகளை மட்டும் பயன்படுத்துவோம். ஆனால் தோசையின் பொழுது அடியில் உள்ள தண்டை சிறிதளவு மட்டும் நறுக்கிவிட்டு அப்படியே அலசி கழுவி பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பிறகு கொத்தமல்லி இலைகளையும் சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம் , பூண்டு,  இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதே மிக்ஸி ஜாரில் வல்லாரைக் கீரை , கொத்தமல்லி சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு எடுத்து வைத்துள்ள தோசை மாவில் அரைத்து வைத்துள்ள வல்லாரைக் கீரை விழுதை சேர்த்து நன்றாக கலந்து விடவும் .தேவை என்றால் உப்பு சேர்த்து கலக்கவும்.
  • பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து கலந்து வைத்துள்ள வல்லாரை தோசை மாவு எடுத்து தோசைகளாக வார்த்தெடுத்தால் ருசியான  IQ தோசைதயார்.
  •  இந்த தோசை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த தோசையை காரச் சட்னி தேங்காய் சட்னி சேர்த்து  பரிமாறலாம்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Fat: 0.33g | Calcium: 3.1mg | Iron: 0.26mg
Advertisement
Prem Kumar

Recent Posts

பலாக்காய் கிடைத்தால் ஒரு முறை ருசியான இந்த பலாக்காய் பட்டாணி வறுவல் செய்து பாருங்கள் ருசியில் இதை அடித்துக்கவே முடியாது!!

பலாப்பழம் முக்கனிகளுள் ஒன்று. பலாப்பழ வாசனையை மூடி மறைக்க முடியாது. பலாச்சுளையின் சுவையை வெறுப்போரும் இருக்க முடியாது. மிக அதிக…

49 நிமிடங்கள் ago

நவபஞ்சம யோகத்தில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!!

வேத ஜோதிடப்படி பல வகையான ராஜ யோகங்கள் உள்ளன. அதில் ‘நவ பஞ்சம யோகம்’ ஒன்றாகும். ரிஷப ராசிக்குள் குரு…

51 நிமிடங்கள் ago

ஒரு முறை சுவையான இந்த சிக்கன் சாம்பார் வைத்து அதனுடன் சிக்கன் வறுவல் வைத்து சாப்பிட்டு பாருங்கள் வழக்கத்தை விட அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

2 மணி நேரங்கள் ago

இதுவரை மோர், ரசம் என தனித்தனியாக சாப்பிட்ருப்பிங்க ஆனால் மோர் ரசம் சாப்பிட்டது உண்டா? இல்லை என்றால் ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!

ரசம் சாப்பிட்டு இருப்பீங்க, மோர் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இது இரண்டையும் சேர்த்து மோர் ரசம் செய்வது எப்படி என்று…

3 மணி நேரங்கள் ago

வளர்பிறை சதுர்த்தி வழிபாடு செய்து விநாயகர் பெருமான் அருளை முழுமையாக பெறுங்கள்!

பொதுவாக இருக்கின்ற 16 விதிகளில் நான்காவது ரீதியாக வரக்கூடியது சதுர்த்தி திதி. பொதுவாக ஒவ்வொரு தெய்வத்திற்கும் நட்சத்திரம் திதி கிழமை…

5 மணி நேரங்கள் ago

இந்த வெயிலுக்கு இளநீர் சர்பத் செஞ்சு குடித்து பாருங்க!!!

அடிக்கிற வெயிலுக்கு நமக்கு சோறு கூட தேவையில்லை ஏதாவது சாப்பிட்டுகிட்டே இருக்கணும் போல தான் தோணும் அந்த வகையில இயற்கையாகவே…

6 மணி நேரங்கள் ago