Advertisement
அசைவம்

கமகமக்கும் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா செய்வது எப்படி ?

Advertisement

நீங்கள் உங்கள் வீடுகளில் இதுவரையும் சிக்கன் மட்டன் போன்ற அசைவ உணவுகளை வைத்து சுக்கா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் அதே போல் இன்று கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்றவாறு மீன் சுக்கா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் சுக்கா செய்யப் போகிறோம். நீங்கள் இந்த வஞ்சரம் மீனில் சுக்கா செய்வதால் முள் இருக்குமோ என்ற பயம் வேண்டாம் வஞ்சரம் மீனில் முள் இருக்காது.

இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான விரால் மீன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

ஆகையால் முள் இருக்குமோ என்ற பயம் இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி உங்களை இதே போல் செய்ய சொல்லும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த வஞ்சரம் மீன் சுக்கா இருக்கும். அதனால் இன்று இந்த வஞ்சரம் மீன் சுக்கா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகளை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வஞ்சரம் மீன் சுக்கா | Vanjaram Meen Sukka Recipe in Tamil

Print Recipe
இன்று கடல் உணவு பிரியர்களுக்கு ஏற்றவாறு மீன் சுக்கா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அதிலும் பலரும் விரும்பி சாப்பிடும் வஞ்சரம் மீனை வைத்து தான் சுக்கா செய்யப் போகிறோம். நீங்கள் இந்த வஞ்சரம் மீனில் சுக்கா செய்வதால் முள் இருக்குமோ என்ற பயம் வேண்டாம் வஞ்சரம் மீனில் முள் இருக்காது. ஆகையால் முள் இருக்குமோ என்ற பயம் இல்லாமல் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி உங்களை இதே போல் செய்ய சொல்லும் அளவிற்கு அட்டகாசமான சுவையில் இந்த வஞ்சரம் மீன் சுக்கா இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Vanjaram Meen, வஞ்சரம் மீன்
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 346

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

மீன் பொரிக்க

  • 3 மேசை கரண்டி சோள மாவு
  • 2 மேசை கரண்டி அரிசி மாவு
  • ½ tbsp உப்பு
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 1 tbsp மிளகு தாள்
  • தண்ணீர் சிறிது
  • ½ KG வஞ்சரம் மீன்
  • 100 ML எண்ணெய்

சுக்கா செய்ய

  • 4 tbsp எண்ணெய்
  • 1 பட்டை
  • 4 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tbsp சோம்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி நறுக்கியது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 1 tbdp மிளகாய் தூள்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp மல்லி தூள்
  • 1 tbsp சீரகத் தூள்
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • ½ டம்பளர் தண்ணீர்
  • கொத்த மல்லி சிறிது

Instructions

  • முதலில் ஒரு பெரிய பவுளில் மூன்று மேசை கரண்டி அளவு சோள மாவு, இரண்டு மேசை கரண்டி அளவு அரிசி மாவு, அரை டீஸ்பூன் உப்பு, அரை பழம் எலுமிச்சைச்சாறு, ஒரு டீஸ்பூன் மிளகு தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் கரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் நாம் துண்டு துண்டாக வெட்டி வைத்திருக்கும் வஞ்சிரம் மீனை இந்த பேஸ்ட் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து ஒரு 20 நிமிடங்கள் பவுளை மூடி வைத்து ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
    Advertisement
  • அதன் பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் 100 ML அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதனுடன் நம்ம ஊற வைத்த மீனை சேர்த்து அனைத்து பக்கமும் வேகும் மாறு திருப்பி விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • பின் மீன் காபி நிறமாக மாறியதும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொண்டு பின் கடாயில் நான்கு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு காய்ந்தது ஒரு பட்டை, 4 கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு டீஸ்பூன் சோம்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து ஐந்து வினாடிகள் வதக்கி கொள்ளவும்.
  • பின் கடாயில் பொடியாக நறுக்கிய ஒரு பெரிய வெங்காயம் மற்றும் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கிய ஒரு பெரிய தக்காளியை சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவும்.
  • பின் இதனுடன் ஒரு டீஸ்பூன் மல்லி தூள், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா பொருட்களை வதக்கி கொள்ளவும்.
  • பின் சிறிது அளவு தண்ணீர் ஊற்றி கிரேவி பதம் வந்து கிரேவி கொதிக்கும் பொழுது நாம் பொரித்து வைத்திருக்கும் வஞ்சரம் மீனை இதனுடன் சேர்த்து நான்கு பிரட்டி விட்டு ஒரு ஐந்து நிமிடம் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் கிரேவி வற்றி வஞ்சரம் மீன் மசாலாவுடன் நன்கு சேர்ந்ததும், சிறிதளவு கொத்தமல்லியை தூவி விடுங்கள், அவ்வளவு தான் சுவையான வஞ்சரம் மீன் சுக்கா இ்னிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 346kcal | Protein: 32g | Fat: 7g | Saturated Fat: 1.7g | Cholesterol: 3mg | Sodium: 32mg | Potassium: 477mg | Fiber: 1g
Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

2 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

3 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

4 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

5 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

7 மணி நேரங்கள் ago

2 பீட்ரூட் இருந்தால் போதும் சூப்பரான மில்க் ஷேக் இப்படி வீட்டிலே சுலபமாக செய்து பாருங்க!

பெண்களை பொறுத்த வரையில் நாள் முழுவதும் வீட்டு வேலை செய்து நிச்சயமாக அலுத்து போய் விடுவார்கள். அதற்காக  வேலைகளை செய்யாமலும்…

8 மணி நேரங்கள் ago