மனிதர்களாகிய நமக்கு எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது இன்னும் வேண்டும் என்ற குணத்தை வர வைக்கும் ஒரே பொருள் என்றால் அது பணம் தான். இந்த உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களும் இந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது, எப்படி சேர்ப்பது என பணத்தை நோக்கி தான் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். அனைவருக்குமே வாழ்க்கையில் பண தேவை இருக்கதான் செய்யும் தான் ஏன் பெரிய கோடீஸ்வரனாக இருந்தால் அவனுக்கு கோடிக்கணக்கான பணம் தேவைப்படுகிறது.
இதையும் படியுங்கள் : பணம் வரவு அதிகரிக்க வேண்டுமா ? வெற்றிலையை வைத்து இப்படி செய்யுங்கள்!
ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது. ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒருவனுக்கு ஆயிர கணக்கில் பணம் தேவைப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அப்படி நமது வீட்டில் பணத்தை அதிகரிக்க வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களை செய்தாலே போதும் அப்படி என்னென்ன விஷயங்களை செய்தால் நமது வீட்டில் பணப்புழக்கமும் பண வரவும் அதிகரிக்கும் என்பதை பற்றி தான் நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

ஈசானி மூலை
உங்கள் வீட்டில் பண வைக்கும் பீரோ அல்லது பணம் வைக்கும் மேசைகள், பெட்டிகள் என எதுவுமே வீட்டின் ஈசானி மூலையில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஈசானி என்பது தண்ணீரை குறிக்கும் இப்படி ஈசானி மூலையில் பணத்தை வைத்தால் நீங்கள் சேர்த்து வைக்கும் பணமும் தண்ணீர் போல் கரைந்து ஓடிவிடும்.
அக்னி மூலை
மேலும் வீட்டின் அக்னி மூலையிலும் பீரோ அல்லது நீங்கள் பணம் வைத்து எடுக்கும் பட்டிகள் அந்த இடத்தில் இருக்கக் கூடாது ஏனென்றால் அக்னீ என்பது தீ. தீயில் போட்ட பொருள் சாம்பலாக தான் போகும் இருந்த இடமே தெரியாது. அது போல நீங்கள் வைத்திருக்கும் பணம் இருந்த இடம் தெரியாமல் செலவாய்க் கொண்டே இருக்கும் அதனால் அக்னி மூலையில் பீரோவையோ அல்லது அந்த இடத்தில் பணம் வைத்து எடுப்பதையோ தவிர்த்து விடுங்கள்
கன்னி மூலை
விநாயகப் பெருமான் கோவில்களில் கன்னி மூலையில் தான் அமர்ந்திருப்பார். அதாவது தென்மேற்கு திசையில் தான் காட்சி தருவார் ஆகையால் உங்கள் வீட்டில் உள்ள பீரோவை கன்னி மூலையில் வைத்து அதாவது தென்மேற்கு திசையில் வைத்து பணம் எடுத்து வந்தாள் பணம் மடம் மட மட வன வீட்டில் சேரும்

மகா லட்சுமி
பீரோவை தென்மேற்கு திசையில் வைத்து விட்டால் மட்டும் போதுமானதாக இருக்காது அப்படி நாம் தென்மேற்கு திசையில் வைத்த பீரோ ஒன்று வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கி இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். பின்பு நாம் பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் விநாயகருக்கு பிடித்த மஞ்சள் துண்டை விரித்து பீரோவுக்குள்ளும் மகாலட்சுமி படத்தை ஒட்டி வைப்பதன் மூலம் நமது வீட்டில் சுப காரியங்கள், மங்களகரமான காரியங்கள் நடப்பதற்கு தேவையான அளவு தங்கமும் சேர்ந்து கொண்டே இருக்கும்.
வடமேற்கு திசை அலமாரி
இப்படி நாம் தென்மேற்கு திசையில் வைத்திருக்கும் பீரோவில் இருந்து அடிக்கடி தின செலவுக்கு பணம் எடுப்பதை தவிர்த்து விட்டு. அதற்கு பதிலாக வட மேற்கு திசையில் ஒரு அலமாரியை வைத்து அதில் தினசரி செலவுகளுக்கு பணம் வைத்து எடுத்து வந்தால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும் நல்ல பலனையை கொடுக்கும். பணமும் அதிகளவில் சேரும்.