Home ஆன்மிகம் பணம் வரவு அதிகரிக்க வேண்டுமா ? வெற்றிலையை வைத்து இப்படி செய்யுங்கள்!

பணம் வரவு அதிகரிக்க வேண்டுமா ? வெற்றிலையை வைத்து இப்படி செய்யுங்கள்!

ஆன்மிகம்

இந்த உலகத்தில் மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் சந்திக்க நேரிடும் பிரச்சனை என்றால் அது பண பிரச்சனைதான். இந்த உலகில் பிறந்த அனைவரும் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த பண பிரச்சனையை சந்திக்க வேண்டிய நிலைமை வந்திருக்கும். ஆனால் சிலர் தங்கள் வாழ்நாளில் தினம் தினம் இந்த பண பிரச்சனையால் அவதிப்பட்டு தங்கள் வீட்டில் உள்ள சந்தோஷம், மகிழ்ச்சி, அன்பு என அனைத்தையும் இழந்து கடைசியில் சிரிப்பதற்கே கூட மறந்து விடுவார்கள். அந்த அளவிற்கு இந்த பண பிரச்சனை அனைவரையும் வாட்டி வதைத்து விடும். இருந்தாலும் ஆன்மீக முறைப்படி சில பரிகாரங்களை நாம் செய்யும் பொழுது நம் வீட்டில் பணப் பிரச்சனை என்ற வார்த்தைக்கே இடம் இல்லாத அளவிற்கு பணம் நம் வீட்டில் கொட்ட ஆரம்பித்து விடும். அதனால் இந்த பண பிரச்சனையை சரி செய்யும் ஒரு சக்தி வாய்ந்த பரிகாரத்தை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

ஆன்மீகத்தில் நமது வீட்டிற்கு செல்வத்தை கொண்டு வந்து சேர்ப்பதற்காக எவ்வளவோ பரிகாரங்களும், பூஜைகளும், வாஸ்து சாஸ்திரங்களும் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட நாம் இப்போது பார்க்க இருக்கிற பரிகாரத்தை செய்யும் பொழுது அதன் பலன் உங்களுக்கு வேகமாக கிடைக்கும் இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கும் எளிமையான முறையில் இருக்கும். இந்த பரிகாரத்தை செய்து முடித்தவுடன் அதன் சக்தியை நீங்களே உணர ஆரம்பித்து விடுவீர்கள். பணமே இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் உங்களிடம் சிறுக சிறுக பணவரவு அதிகரிக்க தொடங்கி விடும். சரி, வாருங்கள் அது என்ன பரிகாரம் என்று பார்த்துவிட்டு வருவோம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்காக நமக்கு வெற்றிலை, சிறிது அளவு நெய் மற்றும் ஒரு பட்டு துணி மட்டும் தேவைப்படும். முதலில் கரும்புள்ளிகள் இல்லாத நல்ல வெற்றிலையாக பார்த்து ஒரு ஐந்து வெற்றிலைகளை காம்புடன் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி நாம் எடுத்துக் கொண்ட வெற்றிலைகள் அனைத்திலும் சிறிது நெய்யை தடவிக் கொண்டு நாம் வைத்திருக்கும் பட்டு துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள். இப்படி நாம் முடிந்து வைத்திருக்கும் முடிப்பை நமது வீடுகள், தொழில் நடத்தும் இடம், அது நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனமாக கூட இருந்தாலும் அங்கு வைப்பதன் மூலம் நமது வீட்டில் பண வரவு அதிகரிக்கும். இந்த பரிகாரத்தை வாராவாரம் புதன்கிழமை மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் செய்ய வேண்டும்.

இந்த வாரம் வெற்றிலையை இவ்வாறு முடிந்து வைத்துவிட்டு அடுத்த வாரம் புதன்கிழமை வரும் பொழுது மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் நாம் வைத்திருக்கும் முடிச்சை அவிழ்த்து அதற்குள் இருக்கும் வெற்றிலையை மட்டும் எடுத்துவிட்டு புதிய வெற்றிலைகளில் நெய்யை தடவி மீண்டும் முடிந்து எடுத்த இடத்திலேயே வைத்து விடுங்கள். நாம் எடுத்து வைத்திருக்கும் பழைய வெற்றிகளை மனிதனின் கால் படாத இடங்களில் போடுங்கள் இல்லை என்றால் உங்கள் வீட்டில் இருக்கும் ஏதாவது செடியின் அடியில் போட்டு விடுங்கள். இப்படி இந்த பரிகாரத்தை நாம் வாரம் தோறும் புதன்கிழமை தவறாமல் செய்து வந்தால் பணம் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் அனைவரும் அந்தப் பிரச்சினையில் இருந்து மீண்டு வந்து விடுவார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here