Home உடல்நலம் உடல் எடையை குறைக்கும் சில இரவு உணவுகள் ?

உடல் எடையை குறைக்கும் சில இரவு உணவுகள் ?

இன்றைய காலகட்டங்களில் அனைவரும் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள். ஆனால் அதில் பல பேர் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு என மேற்கொண்டு வருகிறார்கள். இன்னும் சிலர் தங்கள் உடல் எடையை குறைப்பதற்காக முயற்சித்து வருகிறார்கள் அதற்காக உடற்பயிற்சி, காலை நடை பயிற்சி, மற்றும் உணவு கட்டுப்பாடு என பல முறைகளை கையாண்டு வருகிறார். அப்படி இருக்கும் நபர்கள் இரவு உணவாக சில உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருவதன் மூலம் தங்களின் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : உடல் எடையை வெகுவாக குறைக்கும் பார்லி கஞ்சி சூப் !

ஏனனென்றால் நமது முன்னோர்கள் பல ஆண்டு காலமாக காலை உணவை ராஜ உணவு என்று கூறுவார்கள். அதற்கு காரணம் இரவு முழுவதும் உணவில்லாமல் இருக்கும் நமக்கு காலையில் எவ்வளவு சாப்பிட்டாலும் அது நமக்கு நன்மையை மட்டுமே பயக்கும் என்று கூறுவார்கள். மதிய உணவை பசிக்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும் எனக் கூறுவார்கள். இரவு உணவை குறைவாக சாப்பிட வேண்டும் இல்லை சாப்பிடாமல் இருப்பது நல்லது என கூறுவார்கள். இரவு உணவை நாம் அதிகமாக சாப்பிடும் போது அதன் காரணமாக நமக்கு மாரடைப்பு மற்றும் வயிற்று கோளாறுகள் போன்ற உடல்நல பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது. இன்று உடல் எடையை குறைப்பதற்கு எந்தெந்த உணவுகளை இரவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

பப்பாளி

நாம் இரவு சாப்பாட்டுக்கு பதிலாக பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்ல விஷயம். அதற்காக பப்பாளி சாப்பிடுவது இன்னும் நல்ல விஷயம் ஏனென்றால் பப்பாளிகள் பப்பேன் என்ற இயற்கையான ஒரு நொதிப்பொருள் உள்ளது. இது நம் உடம்பில் இருக்கும் வாயு, மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக அமையும். மேலும் உடல் எடையை குறைப்பதற்கு பப்பாளி உதவுகிறது.

ஜவ்வரிசி

ஜவ்வரிசி இரவு உணவாக எடுத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த உணவாக இருக்கும் ஏன் காலையில் கூட ஜவ்வரிசியை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஜவ்வரிசி மரவள்ளி கிழங்குகளில் உள்ள பகுதியில் இருந்து பெறப்படும் ஒரு ஸ்டார்ச் ஆனா பொருளிள் இருந்து வரும் ஜவ்வரிசி அதிக அளவில் கார்போஹைட்ரட் உள்ளதால் ஜவ்வரிசியை இரவு உணவாக எடுத்துக் கொள்வதற்கு ஒரு சிறந்த உணவு.

-விளம்பரம்-

ஒட்ஸ்

ஓட்ஸ்சை இரவு உணவாக எடுத்துக் கொள்வதால் நம் வயிற்றில் செரிமானம் ஆவது மிகவும் எளிமையாக இருப்பதால் நாம் இரவு உணவாக எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஓட்ஸில் நார்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளதால் நம் உடலில் உள்ள கொழுப்புகளையும் குறைத்து உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவியாகிறது.

பாசி பருப்பு

உடல் எடையை குறைப்பது பாசிப்பருப்பும் நமக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். மெக்னீசியம்,பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால். நமது உடம்பில் இருக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைப்பதற்கு பாசிப்பருப்பு உதவுகிறது.

சுரக்காய்

நாம் சுரைக்காயை மதிய உணவோடு பொறியலாக எடுத்துக் கொள்வோம் அல்லது சுரக்காய் குழம்பு செய்து சாப்பிடுவோம். ஆனால் சுரைக்காயை இரவு உணவாக எடுத்துக்கொண்டு நம் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் சுரக்காயில் நிறைந்துள்ள ஆன்டிஆக்சிடென்ட் நாம் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் உதவும். நாம் சுரைக்காயை சாப்பிடுவதால் நாம் உடலில் எண்ணற்ற ஆரோக்கிய சத்துக்கள் கிடைக்கும்.

-விளம்பரம்-

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here