Advertisement
ஆன்மிகம்

நீங்கள் பிறந்த கிழமையும் உங்கள் குணம் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்!

Advertisement

ஒருவர் பிறந்த நேரத்தின் அடிப்படையில் கிரகங்களின் அமைப்பை பொறுத்து ஒருவர் வாழ்க்கை முடிவாகிறது என்று சாஸ்திரங்களும் ஜோதிடமும் கூறுகிறது. அப்படி இருக்கையில் ஒருவர் பிறந்த நேரம் காலம் வைத்த அவர் எப்படிப்பட்டவர் எப்படி வாழ போகிறார் என்று கணித்து விடுவார்கள். அப்படி ஒருவர் பிறந்த கிழமையை வைத்து எண் கணித அடிப்படையில் அவர் எத்தகைய குணாதிசயம் படைத்ததவர், எப்படிப்பட்ட மனிதர் என்பதையும் சொல்லிவிடலாம் அப்படி நீங்கள் இந்த கிழமையில் பிறந்த உங்களுக்கு எப்படிப்பட்ட குணங்கள் இருக்கிறது என்பதனை இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

ஞாயிற்றுக்கிழமை

இந்த ஞாயிற்றுக்கிழமை தினங்களில் பிறந்தவர்கள் எவ்வளவு பெரிய கடினமான வேலையாக இருந்தாலும் அதை அவர்கள் திறமையை வைத்து எளிதாக முடித்து விடுவார்கள். அப்படி அவர்களால் முடிக்க முடியாத வேலையாக இருந்தால் அதை என்னால் செய்ய முடியும் என்று தேவையில்லாமல் வாய் பேசவும் மாட்டார்கள். மேலும் இவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள் தலைமை பண்பு இவர்களிடம் சாதாரணமாகவே இருக்கும்.

Advertisement

திங்கள்கிழமை

இந்த திங்கள் கிழமையில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சாந்தம் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் அன்பு, உதவும் குணம், இனிமை என அனைத்து குணங்களும் கொட்டி கிடக்கும். அவர்களுடைய எதிரிகளை கூட நண்பர்களாக பார்ப்பவர்கள். தர்ம வழி பாதையில் நடந்து நியாயத்தை கடைபிடிக்க கூடியவர்கள். சொந்தமாக இவர்கள் தொழில் செய்யும்போது அந்த தொழிலில் சிறந்து விளங்க கூடியவர்கள்.

செவ்வாய்க்கிழமை

இந்த செவ்வாய்க்கிழமை நாட்களில் பிறந்தவர்கள் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால் பலரிடம் பலவிதமான யோசனைகளை கேட்கக் கூடியவர் இருந்தாலும் தன்னுடைய முடிவு தான் சரியான முடிவு என்று எண்ணும் குணம் உடையவர்கள். இவர்களிடம் பழகுபவர்களை பொறுத்து இவர் குணங்களும் வெளிப்படும் நல்லவர்களிடம் நல்லவர்களாகவும் கெட்டவர்களிடம் கெட்டவர்களாகவும் நடந்து கொள்வார்கள். இந்த குணத்தின் காரணமாகவே பலருக்கும் இவர்களை பிடிக்காமல் போகும் இருந்தாலும் தர்மங்களை கடைப்பிடித்து நியமான வழியில் நடந்து கொள்பவர்கள்.

புதன்கிழமை

இந்த இந்த புதன்கிழமை தினங்களில் பிறந்தவர்கள் துப்பறியும், ஓவியம், ஜோதிடம், இயந்திரம், வைத்தியம் போன்ற துறைகளில் எல்லாம்

Advertisement
வல்லவர்களாக இருக்கும் பாக்கியம் பெற்றவர்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தை தாராளமாக நம்பி சொல்லலாம் அந்த அளவிற்கு ரகசியத்தை பாதுகாப்பதில் வல்லவர்கள். இவர்கள் மற்றவர்களின் மனதில் இருக்கும் விஷயத்தை புரிந்து கொண்டு செயல்படுவதில் கில்லாடிகள்.

வியாழக்கிழமை

இந்த வியாழன் கிழமை தினங்களில் பிறந்தவர்கள் என்றுமே நீதி நியாயத்திற்கு கட்டுப்பட்டு தர்ம வழியில் நடப்பவர்களாக இருப்பார்கள். ஏன் தன் வாழ்க்கையில் குறுக்கு வழியில்

Advertisement
செல்பவர்களை கூட திருத்தி நல்வழியில் வழி நடத்துபவர்கள். தங்களை சுற்றி இருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்பவர்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையில் சிறந்து விளங்கக்கூடிய திறன் பெற்றவர்கள்.

வெள்ளிக்கிழமை

இந்த வெள்ளிக்கிழமை தினங்களில் பிறந்தவர்கள் சமத்து பிள்ளை என்று பெயர் எடுப்பது நல்லவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன் பேச்சாளையே மற்றவர்களை தங்கள் பக்கம் இழுக்கக் கூடிய திறன் படைத்தவர்கள். இவர்கள் அவர்களின் பேச்சை கேட்காதவர்களை எளிதில் புறக்கணித்து விடுவார்கள் எந்த வேலையையும் கஷ்டப்படாமல் மற்றவர்களின் துணையோடு செய்து முடிப்பதில் கில்லாடியாக இருப்பார்கள். இவர்கள் தனது வாழ்க்கை துணையின் அன்பில் எப்பொழுதுமே மூழ்கி கிடப்பவர்கள்.

சனிக்கிழமை

இந்த சனிக்கிழமை தினங்களில் பிறந்தவர்கள் ஏற்கனவே புத்திசாலித்தனமும், பொறுமைசாலித்தனமும் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களின் பார்வை பார்வைக்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரியக்கூடியவர்கள். அதே நேரம் ஒரு வேலை என்று வந்துவிட்டால் அதை முடித்தே ஆக வேண்டும் என்று மன உறுதியோடு இருப்பவர்கள். இவர்கள் இவர்களை விட வயதில் பெரியவர்களை மரியாதையோடு நடத்துபவர்கள். தன் வேலை உண்டு தான் உண்டு என்று குணம் இவர்களிடம் இருக்கும்.

Advertisement
Prem Kumar

Recent Posts

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

10 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

12 மணி நேரங்கள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

20 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

22 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

1 நாள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

2 நாட்கள் ago