Advertisement
ஸ்நாக்ஸ்

நாவில் எச்சி ஊறும் சுயைான காளான் சமோசா இப்படி செஞ்சி பாருக்க!

Advertisement

மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம் இல்லை கடைகளுக்கு சென்று வாஙாகி சாப்பிடுவோம் ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம்.

இதையும் படியுங்கள் : மொறு மொறுவன வெங்காய சமோசா இப்படி செஞ்சி பாருங்க ?

Advertisement

அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம்.சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் காளான் சமோசா இருக்கும் ,அதனால் இன்று இந்த சுவையான காளான் சமேசா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

காளான் சமோசா | Mushroom Samosa Recipe in Tamil

Print Recipe
மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம் இல்லை கடைகளுக்கு சென்று வாஙாகி சாப்பிடுவோம் ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம். அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம்.சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் காளான் சமோசா இருக்கும்.
Course Snack
Cuisine Indian, TAMIL
Keyword samosa, சமோசா
Prep Time 10 minutes
Cook Time 20 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 83

Equipment

  • 1 காடாய்
  • 1 பெரிய பவுள்
  • 2 பவுள்

Ingredients

  • 1 1/2 கப் மைதா மாவு
  • 4 Tbsp எண்ணெய்
  • உப்பு தேவையான அளவு
  • 1 பெரிய வெங்காயம் நறுககியது
  • 300 கிராம் பட்டன் காளான்
  • 1 Tsp இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 Tsp கரம் மசாலா
  • 1/2 Tsp சீரகப் பொடி
  • 1/2 Tbsp கொத்தமல்லி நறுக்கியது
  • 2 Tbsp எலுமிச்சை சாறு
  • எண்ணெய் பொரிப்பதற்கு தேயைான அளவு

Instructions

  • முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.
  • பிறகு இஞ்சி
    Advertisement
    பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
  • பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி கொள்ள வேண்டும்.
  • ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.
  • இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ள வேண்டும்.
  • பின்னர் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான அருமையான காளான் சமோசா தயார்.

Nutrition

Serving: 550G | Calories: 83kcal | Carbohydrates: 61g | Fat: 2g | Saturated Fat: 0.1g | Sodium: 3.1mg | Potassium: 71mg | Fiber: 1g | Sugar: 0.1g | Calcium: 0.5mg | Iron: 0.2mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 06 மே 2024!

மேஷம் கடன் வாங்குவது, கடன் கொடுப்பதை தவிர்க்கவும். கடன் கேட்பவர்களுக்கு கடன் வழங்குவதற்கு முன் அவர்களின் நம்பகத்தன்மையை அறிந்திடுங்கள். உங்களின்…

11 நிமிடங்கள் ago

ருசியான குதிரைவாலி தக்காளி தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

உடல் எடையை குறைக்க வேண்டும். அரிசியை உணவோடு சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று நினைப்பவர்கள், ஆரோக்கியம் மிக முக்கியம் என்று நினைப்பவர்கள்,…

13 நிமிடங்கள் ago

நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க உங்களிடம் இந்த 3 பொருட்கள் இருந்தால் மட்டும் போதும்!

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் தன தானியங்கள் நிறைந்திருக்க வேண்டும் என்று கூறுவார்கள். தனம் என்றால் பணம் என்றும் தானியங்கள் என்றால்…

13 மணி நேரங்கள் ago

சப்பாத்திக்கு கிரேவி செய்ய உருளைக்கிழங்கு இல்லைனா இந்த மாதிரி பாம்பே சட்னி செஞ்சு பாருங்க

நம்ம வீட்ல எந்த காய்கறிகளும் இல்லாத சமயத்துல கடலை மாவு மட்டும் இருந்தாலே போதும் சூப்பரா சப்பாத்தி பூரி இட்லி…

14 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியில் குண்டூர் ஸ்டைல் கார இட்லி ஒரு தரம் இப்படி செய்து சாப்பிட்டு பாருங்க!

பொடி இட்லி சாப்பிடணும் அப்படின்னு நீங்க ஆசைப்பட்டீங்கன்னா இந்த மாதிரி குண்டூர் ஸ்டைலில் சூப்பரான ஒரு காரப்பொடி ரெடி பண்ணி…

14 மணி நேரங்கள் ago

மாலை நேர ஸ்நாக்ஸாக சாப்பிட ருசியான மொறு மொறு வாழைக்காய் கட்லெட் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக…

15 மணி நேரங்கள் ago