Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் அதிரசம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான அதிரசம் செய்து சுவையாக உண்ணலாம். அதிரசம் செய்வது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும்.

இதையும் படியுங்கள் : சுவையான டீக்கடை இனிப்பு போன்டா இப்படி செஞ்சி பாருங்க ?

Advertisement

ஆனால் நாம் செய்யும் முறையில், இந்த சுவையான அதிரசம் மிக எளிமையாக செய்துவிட முடியும்.அதனால் இன்று இந்த சுவையான அதிரசம் செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.

சுவையான அதிரசம் | Athirasam Recipe in Tamil

Print Recipe
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான அதிரசம் செய்து சுவையாக உண்ணலாம். அதிரசம் செய்வது சிலருக்கு மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் நாம் செய்யும் முறையில், இந்த சுவையான அதிரசம் மிக எளிமையாக செய்துவிட முடியும்.
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Athirasam, அதிரசம்
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 4 People
Calories 202

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 பவுள்

Ingredients

  • 1/2 KG பச்சரிசி
  • 1/2 KG வெல்லம்
  • 1/2 Tsp ஏலக்காய் தூள்
  • 1 Pinch உப்பு
  • 1 Pinch சுக்கு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் பச்சரிசியை 3 முறை நன்றாக தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். பின்னர் தண்ணீர் ஊற்றி, மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு அந்த அரிசியில் இருந்து தண்ணீரை மொத்தமாக வடிகட்ட வேண்டும்.
  • அரிசியை வெள்ளை துணியில் போட்டு
    உலர வைக்க வேண்டும். பின்னர் அரிசியை மாவு மிஷன் கடையில் குடுக்க வேண்டும். இல்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கர கர வென்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ரொம்பவும் நைஸ் ஆக அரைக்க கூடாது
    Advertisement
  • அரைத்த அரிசியை சல்லடையில் போட்டு சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவை அப்படியே ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் வெல்லத்தை உடைத்து போட்டு கொள்ள வேண்டும். இந்த வெல்லத்தோடு கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாகக் கரைத்து கொதிக்க விட வேண்டும்.
  • வெல்லம் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பில் 5
    Advertisement
    நிமிடங்கள் வரை வெல்லத்தை பாகு காய்ச்சினால் மட்டும் போதும். வெல்லதை வடிகட்டியில் வடிகட்ட வேண்டும்.
  • வேறு பாத்திரத்தில் இருக்கும் அரிசி மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, மர கரண்டியை போட்டு நன்றாக கலக்க வேண்டும்.
  • கரைப்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் கட்டி பிடிக்காமல் கலந்து விட வேண்டும். இந்த மாவில் சோடா உப்பு ஏலக்காய் தூள் சுக்கு தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • அதன் பின்பு மீண்டும் நன்றாக மாவை கலக்கி விடுங்கள். உடனடியாக அதிரச மாவை சூட்டோடு மூடி போட்டு மூடக்கூடாது.
  • நன்றாக ஆறிய பின்பு மூடி வைத்துக் கொள்ளலாம். வெல்லத்தை ஊற்றி கலக்கும்போது, மாவு தண்ணீர் பதத்தில் தான் இருக்கும். இந்த மாவை அப்படியே 8 மணி நேரம் வரை ஆற விட வேண்டும்.
  • மாவு கெட்டியாக மாறிய உடன் அந்த மாவை சப்பாத்தி மாவு பிசைவது போல் பிசைய வேண்டும். சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • வாழை இலை இருந்தால் அதில் கொஞ்சம் எண்ணெய் தடவி, அதில் உருண்டைகளை வைத்து தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு, எண்ணெயில் விட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • வாழை இலை இல்லை என்றால் மற்ற ஏதாவது ஒரு கவரை சதுர வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒவ்வொரு அதிரச உருண்டைகளாக எடுத்து தட்டி, சுட்டு எடுத்தால் அதிரசம் ரெடி.

Nutrition

Serving: 960G | Calories: 202kcal | Carbohydrates: 71g | Protein: 2g | Fat: 4g | Saturated Fat: 0.1g | Cholesterol: 2mg | Sodium: 4.1mg | Potassium: 21mg | Fiber: 1.5g | Sugar: 5.7g | Iron: 0.6mg
Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

6 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

8 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

10 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

14 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

14 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

15 மணி நேரங்கள் ago