Advertisement
ஸ்வீட்ஸ்

தித்திக்கும் சுவையில் பாசிப்பருப்பு பிரதமன் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

Advertisement

பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் பாசிப்பருப்பை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். மலையாளிகள் கீர் போல இரண்டு வகையான இனிப்புகளை உருவாக்குகிறார்கள். அவைகள் பாயாசம் மற்றும் பிரதமன். பாயாசம் கீருடன் நிறைய பொருந்திப் போகும்.

இதன் அடிப்படை பால் மற்றும் சர்க்கரை. அதேசமயம் பிரதமனின் அடிப்படை தேங்காய் பால் மற்றும் வெல்லம். ஆக இது ஒரு நல்ல இனிப்பு. பிரதமனுக்கு பாசிப்பருப்பு தான் முக்கியம். இன்னொன்று தேங்காய்ப்பால். இதை கையால் பிழிந்து எடுப்பது தான் சிறந்தது என்று பெரும்பாலான சமையல் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இது சற்றே கடினமானது. ஆனால் ஃபைனல் அவுட் புட்டில் நமக்குக் கிடைக்கும் சுவை, அந்த கடினத்தை மறக்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமன் கோவில்களில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Advertisement

குறிப்பாக பாசிப்பருப்பு பிரதமன் ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அதே போல இந்த பாசிப்பருப்பு பிரதமன் நல்ல ஒரு சுவையைக் கொடுக்கும். இதை விசேஷ நாட்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். அல்லது உங்களுடைய முக்கியமான தினங்களில் செய்து கொடுத்து பாராட்டுகளை வாங்கலாம்.

பாசிப்பருப்பு பிரதமன் | Moong Dal Pradhaman Recipe In Tamil

Print Recipe
பிரதமன் என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் ஒரு கப் பாசிப்பருப்பை வைத்து சுவையான பிரதமன் எப்படி தயாரிக்க இருக்கிறோம்? என்பதை தான் பார்க்க இருக்கிறோம். மலையாளிகள் கீர் போல இரண்டு வகையான இனிப்புகளை உருவாக்குகிறார்கள். அவைகள் பாயாசம் மற்றும் பிரதமன். பாயாசம் கீருடன் நிறைய பொருந்திப் போகும். இதன் அடிப்படை பால் மற்றும் சர்க்கரை. அதேசமயம் பிரதமனின் அடிப்படை தேங்காய் பால் மற்றும்
Advertisement
வெல்லம். ஆக இது ஒரு நல்ல இனிப்பு. இதை விசேஷ நாட்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். அல்லது உங்களுடைய முக்கியமான தினங்களில் செய்து கொடுத்து பாராட்டுகளை வாங்கலாம்.
Course sweets
Cuisine Indian, Kerala
Keyword Moong Dal Pradhaman
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 212

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

Ingredients

  • 1/4 கப் பாசிப்பருப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
    Advertisement
  • 1/4 கப் பால்
  • 3/4 கப் நாட்டு சர்க்கரை
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துண்டுகள்
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • 2 டேபிள் ஸ்பூன் முந்திரி

Instructions

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் பாசிப்பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் இதனை தண்ணீர் விட்டு அலசி குக்கரில் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் பால் சேர்த்து அதனுடன் அரிசி மாவு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் வேகவைத்த பாசிப்பருப்பில் கரைத்து வைத்த அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் வேக வைக்கவும். பின் அத்துடன் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும். இது கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் முந்திரி, தேங்காய் துண்டுகள் சேர்த்து நன்கு வறுத்து பிரதமனில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு பிரதமன் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 212kcal | Carbohydrates: 3.8g | Protein: 14.2g | Fat: 4.5g | Saturated Fat: 1.8g | Sodium: 33mg | Potassium: 147mg | Fiber: 5.4g | Sugar: 4g | Vitamin A: 16IU | Vitamin C: 40.1mg | Calcium: 80mg | Iron: 8.6mg

இதனையும் படியுங்கள் : பாசிப்பருப்பு  பணியாரம் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! அடிக்கடி செய்து தர சொல்லுவாங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

சுவையான அத்திப்பழம் கீர் இனி சுலபமாக வீட்டிலயே செய்யலாம்! அவசியம் வீட்டில் ஒரு தரம் செய்து பாருங்க!

எந்த ஒரு விருந்தோம்பலகாக இருந்தாலும் அங்கு இனிப்பு பொருள்களுக்கென்று தனியிடம் உண்டு. அதுபோன்ற சமயங்களில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்வு செய்வது…

2 மணி நேரங்கள் ago

மாலை நேரம் டீ & காபியுடன் ஸ்நாக்ஸாக சாப்பிட ஈஸி பிரெட் ரோல் ரெசிபி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

ரொம்பவே சுலபமா நம்ம வீட்ல இருக்கிற பிரெடை வைத்து ரொம்ப ரொம்ப ஈஸியா நம்ம செய்ய போறது தான் இந்த…

2 மணி நேரங்கள் ago

வீட்டில் இருக்கும் சகல பண பிரச்சனையை சரி செய்ய இந்த ஒரு பொருள் உங்கள் கையில் இருந்தால் போதும்!

சிலரது வீட்டிற்குள் எப்போதும் சண்டையும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருக்கும். மனித வாழ்க்கை என்றாலே பிரச்சனை இல்லாமல் இருக்க முடியாது, வாழ்க்கையில்…

2 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு இதமா மாம்பழ குச்சி ஐஸ் இப்படி வீட்டிலே செய்து பாருங்க! மாம்பழ சீசன் வந்துவிட்டது!

இந்த கொளுத்தும் வெயில் காலத்தில் மாம்பழ குச்சி ஐஸ் செய்தால், அதன் வரவேற்பு தனி தனி தான்.. வாங்க அப்படி…

2 மணி நேரங்கள் ago

அபார திறமையினால் வாழ்க்கையில் உச்சம் தொடும் இந்த சில ராசிகளில் பிறந்த பெண்கள்!!

பொதுவாக அனைவரும் வெற்றிபெறத்தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இது அனைவருக்கும் இலகுவாக நடந்துவிடுவது கிடையாது. பன்னிரெண்டு ராசிகளில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு…

5 மணி நேரங்கள் ago

10 நிமிடத்தில் சுவையான மற்றும் ஆரோக்கியமான துளசி பிரைட் ரைஸை வீட்டிலேயே செய்து பாருங்கள் ருசி மிகவும் அபாரமாக இருக்கும்!!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ்…

6 மணி நேரங்கள் ago