Advertisement
அசைவம்

ஈரல் மிளகு வறுவல், வீட்டில் இப்படி சமைத்து பாருங்கள், இதன் சுவைக்கு ஒரு பிடி சாதமும் மிஞ்சாது!

Advertisement

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு நன்மையை அளிக்கிறது.

இறைச்சியை விட அதன் உறுப்புக்களை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.அதிலும் ஆட்டின் ஈரலை சமைத்து சாப்பிடும்பொழுது நமது உடலில் உள்ள பிரச்சனைகளையும் சரி செய்கின்றது.அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் மிளகு வறுவல், இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

Advertisement

அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும். இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஈரல் மிளகு வறுவல் எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஈரல் மிளகு வறுவல் | Mutton Liver Pepper Fry

Print Recipe
அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் மிளகு வறுவல், இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள்
Advertisement
ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.இவ்வாறு உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய ஈரல் மிளகு வறுவல்எப்படி சுவையாக சமைப்பது என்பதனை பற்றி தான் இந்தப் பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப்போகின்றோம்.
Course Side Dish
Cuisine tamilnadu
Keyword Mutton Liver Pepper Fry
Prep Time 5 minutes
Advertisement
Cook Time 10 minutes
Servings 4
Calories 654

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ ஆட்டீரல்
  • 3 வெங்காயம்
  • 1/4 அங்குலத் துண்டு இஞ்சி
  • 2 பற்கள் பூண்டு
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லித் தூள்
  • 1 1/2 தேக்கரண்டி மிளகுத் தூள்
  • 1 தேக்கரண்டி சீரகம்
  • உப்பு தேவைக்கேற்ப

தாளிக்க

  • எண்ணெய் சிறிது
  • கடுகு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது

Instructions

  • ஆட்டீரலுடன் மல்லித் தூள், சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  •                                                                                                                                        இஞ்சி ,பூண்டுடன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளிக்கவும்.
  • அத்துடன் நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  • அத்துடன் மீதமுள்ள மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு ஊற வைத்துள்ள ஈரல் துண்டுகளைச் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, வேக வைத்து இறக்கவும்.
  • சுவையான ஈரல் மிளகு வறுவல் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 654kcal | Carbohydrates: 67g | Protein: 23g | Cholesterol: 12mg | Sodium: 324mg | Potassium: 543mg | Sugar: 2.3g | Calcium: 12mg
Advertisement
Prem Kumar

Recent Posts

உங்களுக்கு அத்தோ மிகவும் பிடிக்குமா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு முறை இந்த அத்தோ செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!!

அத்தோ ஆசியா முழுவதும் பிரபலமாக இருக்கும் உணவு. அத்தோவில் ஏராளமான வகை உண்டு. இதை வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பொருட்கள்…

4 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ஃப்ரை செஞ்சு போர் அடிச்சுருச்சுன்னா இந்த தந்தூரி மீன் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

மீன் வாங்குனா மீன் வச்சு குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு இதெல்லாம் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இன்னைக்கு நம்ம…

4 மணி நேரங்கள் ago

வீட்டிலயே நீங்களும் எளிமையாக கேக் செய்யலாம்! தித்திக்கும் சுவையில் கேழ்வரகு கேக் இப்படி செஞ்சி பாருங்க!

கேக் என்றாலே சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ருசித்து உண்பார்கள். கேக்கினை பிறந்தநாள், திருமணம், திருமணம் நாள்,…

4 மணி நேரங்கள் ago

ருசியான காளான் போண்டா ஒரு முறை இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு ருசியாக இருக்கும்!

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும்…

6 மணி நேரங்கள் ago

திருஷ்டி கழிக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்

இந்த உலகில் யாராவது ஒருத்தர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தால் அவர்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவது வழக்கம். அனைவரும் அப்படி…

7 மணி நேரங்கள் ago

உடம்பில் ரத்தம் ஊறுவதை அதிகரிக்க இந்த ஒரு ஜூஸ் குடித்தாலே போதும்!

இனிப்புச் சுவை கொண்ட இயற்கையான உணவு வகையில் பழவகைகள்  இருக்கிறது. மனிதர்களின் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்துக்கள்…

7 மணி நேரங்கள் ago