- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 6
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
இன்று நாம் மாலை நேரங்களில் டீ காபியுடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் பற்றி தான் பார்க்க போகிறோம். ஆம் இன்று தான் வெங்காய பக்கோடா செய்து பார்க்க போகிறோம். நீங்கள் உங்களுக்கு குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் மாலை நேரங்களில் டீ காபி கொடுக்கும் பொழுது இது போன்ற வெங்காய சமோசா செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி
இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் மரவள்ளிக்கிழங்கு மசால் வடை செய்வது எப்படி ?
சாப்பிடுவார்கள். அதே நேரம் உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சுட சுட கொடுத்தால் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு மொறு மொறு வென்று அசத்தலான சுவையில் இந்த வெங்காய சமோசா இருக்கும். ஆகையால் இன்று இந்த சுவையான வெங்காய சமோசா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் சமோசா மாவு செய்ய ஒரு பவுளில் முன்று கப் மைதா மாவு, தேவையான அளவு உப்பு, இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் ஒரு கப் அளவு தண்ணீர், போன்ற பொருட்களை சேர்த்து சாப்பிட்டாக பிசைந்து கொளுங்கள்
பின் ஒரு ஈரமான துணியால் மூடி 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்,
இதனுடன் ஒரு டீஸ்பூன் சீரகம், இரண்டு கப் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் நறுக்கிய ஒரு பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வரும் வரை நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
அதன் பின் இதனுன் கால் டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், கால் டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் கால் டேபிள் ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி கொள்ளவும்.
பின் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பின் பெரிய வட்டமாக தேய்த்து, இரண்டாக வெட்டி, ஒரு பாதியில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சிறிதளவு சேர்த்த சமோசா செய்து தனியாக ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், நாம் செய்த சமோசாக்களை எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக வெந்து பொரித்து வரும் வரை எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் மொறு மொறு சமோசா இனிதே தயாராகிவிட்டது.






