- Prep
- 10 min
- Cook
- 20 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Snack
மாலை வேளைகளில் ஸ்நாக்ஸ்கள் என்று அவ்வப்போது வடை, பஜ்ஜி போன்றவைதான் ஈஸி என்று நினைத்து, அதனையே செய்து சாப்பிடுவோம் இல்லை கடைகளுக்கு சென்று வாஙாகி சாப்பிடுவோம் ஆனால் வடை, பஜ்ஜி போன்றே, மிகவும் எளிதாக சமோசாக்களையும் செய்யலாம்.
இதையும் படியுங்கள் : மொறு மொறுவன வெங்காய சமோசா இப்படி செஞ்சி பாருங்க ?
அதுவும் காளான் சமோசாவை எளிதில் செய்யலாம்.சுவையான அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் காளான் சமோசா இருக்கும் ,அதனால் இன்று இந்த சுவையான காளான் சமேசா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Ingredients
Method
முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு கெட்டியாகவும், மென்மையாகவும் பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், காளான், பச்சை மிளகாய், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து, காளான் வேகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு உருண்டையை எடுத்து, வட்டமாக தேய்த்து, அதனை பாதியாக வெட்டி கொள்ள வேண்டும்.
ஒரு பாதியை கூம்பு போல் செய்து, அதனுள் ஒரு டீஸ்பூன் காளான் கலவையை வைத்து மூடி, சமோசா போல் செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய வைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் செய்து வைத்துள்ள சமோசாவை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான அருமையான காளான் சமோசா தயார்.






