Advertisement
அசைவம்

காரசாரமான ருசியில் ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!

Advertisement

மீன் பிரியர்களுக்கு இந்த காரசாரமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும். அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் சட்டென்று செய்து பொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் | Andhra Style Fish Fry

Print Recipe
மீன் பிரியர்களுக்குஇந்த காரசாரமான ஆந்திரா ஸ்டைல்ஃபிஷ் கண்டிப்பாக ரொம்பவும் பிடித்து போய்விடும்.அதிகம் மெனக்கெடாமல் ரொம்பவும் சுலபமாக பத்து, பதினைந்து நிமிடத்தில் சட்டென்று செய்துபொரித்து சாப்பிட்டு பார்த்தால் நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். வீட்டில் இருக்கும்பொருட்களை வைத்தே உடனடியாக செய்து அசத்தக்கூடிய இந்த வித்தியாசமான ஆந்திரா ஸ்டைல் ஃபிஷ் எப்படி சுலபமாக செய்யலாம்? என்பதை தான்இந்த பதிவின் மூலம் நாம் இனி பார்க்க இருக்கிறோம்.
Course LUNCH, Main Course
Cuisine andhra
Keyword Andhra Style Fish Fry
Advertisement
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 89

Equipment

  • 1 தோசை கல்

Ingredients

  • மீன்
  • மிளகாய் தூள்
  • எலுமிச்சை சாறு
  • சோம்பு
  • இஞ்சி பூண்டு விழுது
  • மிளகு
  • உப்பு
  • எண்ணெய்
  • சோளமாவு

Instructions

  • மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின் நறுக்கி
    Advertisement
    வைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
  •  ஒரு கடாயில் நறுக்கிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு,சோளமாவு போட்டு நன்றாக பிசையவும். சோளமாவு மீனுடன் ஒட்டி இருக்கும் மசாலாவை உதிராமல் இருக்க உதவும்.
  • ஒரு மணி நேரம் மசாலா நன்கு ஊறும் வரை வைக்கவும். பின் தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில்பிசறி வைத்த மீனை ஒவ்வொன்றாய் போடவும். சிறு தீயில் வைக்கவும். மீன் கருகாமல் இருக்க ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்.
  •  
    மீனில் ஒட்டியுள்ள மசாலா நன்றாக சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், மீனை மெதுவாக உடையாமல் புரட்டிப் போடவும்.இரு பக்கமும் வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும். சுவையானஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!!!

Nutrition

Serving: 400g | Calories: 89kcal | Carbohydrates: 13g | Protein: 32g | Saturated Fat: 0.7g | Potassium: 372mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

10 மணி நேரங்கள் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

10 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

12 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

15 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

15 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

16 மணி நேரங்கள் ago