Advertisement
Uncategorized

அடுத்தமுறை தோசை இப்படி செய்யுங்க ருசியான அழகர் கோவில் தோசை! சைடிஸ் கூட தேவையில்லை!

Advertisement

அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையான க்ரீப்/தோசை. இந்த தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசை என்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கே மட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை, மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும் தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம் ஒரு நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை கீழே உள்ள படி வாரியான படங்களுடன் பாருங்கள்.

அழகர் கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்படக்கூடிய தோசை, பாரம்பரியமாக இது மதுரை அழகர் கோவிலில் கொடுக்கப்படும் பிரசாதம். இந்த பிரசாதத்தை நம்முடைய வீட்டிலும் செய்து சாப்பிடலாம். இதில் கருப்பு உளுந்து சேர்த்து இருப்பதால் பெண்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு இந்த தோசை ரொம்ப ரொம்ப நல்லது. அடிக்கடி வீட்டில் இந்த தோசையை காலை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். அருமையான அழகர் கோவில் தோசை ரெசிப்பி இதோ உங்களுக்காக.

Advertisement

அழகர் கோவில் தோசை | Azhagar Kovil Dosai

Print Recipe
அழகர் கோவில் தோசை – பச்சை அரிசி மற்றும் உளுந்து பருப்புடன் தயாரிக்கப்படும் ஒரு பிரபலமான சுவையானக்ரீப்/தோசை. இந்த
Advertisement
தோசை விஷ்ணு/அழகருக்கு பிரசாதமாக வழங்கப்படுவதால் அழகர் கோவில் தோசைஎன்று பெயர். அழகர் கோயில். சண்டை போட்டுப் பிரிந்தவர்கள் அழகர்கோவிலுக்கு வந்து, அங்கேமட்டுமே பிரத்யேகமாகக் கிடைக்கும் அழகர் தோசையை வாங்கிச் சாப்பிட்டால், பங்காளிச் சண்டை,மாமன்-மச்சான் சண்டை, கிராமங்களுக்கு இடையிலான சண்டை, நண்பர்களுடனான சண்டை அனைத்தும்தீர்ந்து, அன்பும் உறவும் பலம் பெறுவதாக மதுரை சுற்றுவட்டார கிராம மக்களிடம்
Advertisement
ஒரு நம்பிக்கைஇன்றும் நிலவுகிறது. இந்த அழகர் கோவில் தோசையின் விரிவான செய்முறையை பார்ப்போம்.
Course Breakfast, dinner
Cuisine tamilnadu
Keyword Azhagar Kovil Dosai
Prep Time 10 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 132

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 3 கப் கருப்பு உளுந்து சேர்த்து அரைத்த புளிக்காத தோசை மாவு
  • 1/2 கப் தயிர்
  • 1/2 தேக்கரண்டி சுக்கு பொடி
  • உப்பு தேவைக்கு ஏற்ப
  • 2 பச்சைமிளகாய்
  • சிறு துண்டு இஞ்சி
  • 1 தேக்கரண்டி மிளகு பொடிக்கவும்
  • 1 தேக்கரண்டி சீரகம்

தாளிக்க

  • கடலை பருப்பு சிறுது
  • உளுந்து சிறுது
  • பெருங்காயம் சிறுது
  • கறிவேப்பிலை சிறுது
  • எண்ணெய் சிறுது

Instructions

  • பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தோசை மாவுடன் தயிர், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்
  • பேனில் எண்ணெய் ஊற்றி சீரகம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கடலைபருப்பு, உளுந்து சேர்த்து தாளிக்கவும்.கடைசியாக பொடித்த மிளகு சேர்க்கவும்
  •  தாளித்தவற்றை மாவில் சேர்த்து கலக்கவும் தோசைக்கல் காய்ந்தததும் மாவை ஊற்றி, மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.
  • சூடாக பரிமாறவும்.சுவையான அழகர் தோசை ரெடி.

Notes

இந்த தோசைக்கு தொட்டுக் கொள்ள மிளகாய் பொடி, பூண்டு பொடி சிறந்தது. வெறுமனே சாப்பிட்டால் கூட நன்றாக இருக்கும். அவசரமாய் செய்ய சிறந்தது

Nutrition

Serving: 800g | Calories: 132kcal | Carbohydrates: 72g | Protein: 12g | Fat: 48g
Advertisement
Prem Kumar

Recent Posts

செல்வம் பெருகிக் கொண்டே இருக்க குபேரனை எப்படி வழிபட வேண்டும்

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில்…

5 நிமிடங்கள் ago

எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா…

3 மணி நேரங்கள் ago

அருமையான வாழைக்காய் பருப்பு கடையல் இப்படி செய்தால் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!!

மதிய நேரத்தில் என்ன சமைக்கலாம் என்று யோசித்தே சலித்து போய்விட்டதா. சாம்பார் செய்வதை விட சுலமான முறையில் அதுவும் சுவையான…

3 மணி நேரங்கள் ago

சகல ஐஸ்வர்யத்தையும் கொடுக்கும் சாம்பிராணி தூபம்

பொதுவாக நம் வீட்டில் எப்பொழுது பூஜை செய்து விளக்கு ஏற்றி தெய்வத்தை வழிபட்டாலும் சாம்பிராணி தூபம் போடுவது வழக்கம். அது…

4 மணி நேரங்கள் ago

ஆரோக்கியமான சுவை மிகுந்த ராகி வெஜ் நூடுல்ஸ்! இப்படி செஞ்சி பாருங்க!!!

குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். நாகரிகம் என்ற பெயரில் தற்போது பீட்சா, பர்கர், நூடுல்ஸ், பாஸ்தா உள்ளிட்ட உணவுகளை…

5 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 15 மே 2024!

மேஷம் இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தாயிடம் இருந்து மகிழ்ச்சியை பெறுவீர்கள். இன்று உங்களின் தனிப்பட்ட…

8 மணி நேரங்கள் ago