Advertisement
ஸ்வீட்ஸ்

சுவையான மாலை நேர சிற்றுண்டி பீட்ரூட் மோதகம் செஞ்சி பாருங்க அட்டகாசமான சுவையில் இருக்கும்! அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்!

Advertisement

விநாயகர் சதுர்த்தி அப்படினா நமக்கெல்லாம் ஞாபகம் வருது மோதகம் தான் அதாவது கொழுக்கட்டை . இந்த கொழுக்கட்டையை நம்ம நிறைய வெரைட்டீஸ் செய்து சாப்பிட்டு இருப்போம். மாவுகள்  உள்ள வைக்கும்  பூரணங்களை வித்தியாச வித்தியாசமா வச்சு சாப்பிட்டு இருப்போம் . மேல இருக்கிற கொழுக்கட்டைக்கு வைக்கிற மாவில் கூட வித்தியாசமா பண்ணி சாப்பிடுவோம்.

என்னைக்காவது ஒரு நாள் ஒரு காய்கறியோடு சேர்த்து நம்ம இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள் தான் பண்ணிருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமா நம்ம இன்னைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படி மோதகம் செய்து சாப்பிட போறோம். பீட்ரூட் மோதகம் எப்படி பண்றங்கறது தான் தெரிஞ்சுக்க இருக்கோம். இந்த மோதகம் ரொம்ப ருசியா இருக்கிறது மட்டும் இல்லாமல் ரொம்ப ஆரோக்கியமான ஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் சின்னவர்கள் முதல் பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு மோதகம்.

Advertisement

பொதுவாகவே கொழுக்கட்டை, மோதகம் எல்லாருக்குமே பிடிக்கும் அதுல நம்ம இந்த மாதிரி பீட்ரூட் எல்லாம் யூஸ் பண்ணி பண்ணும் போது அது ரொம்பவே கலர்ஃபுல்லா ரொம்பவே சுவையாவும் இருக்கும். இந்த பீட்ரூட் மோதகம் பார்க்க மட்டும் இல்ல சாப்பிடவும் ரொம்ப ருசியா இருக்கும். இந்த பீட்ரூட் மோதகம் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

பீட்ரூட் மோதகம் | Beetroot Modhagam Recipe In Tamil

Print Recipe
ஒரு நாள் ஒரு காய்கறியோடு சேர்த்து நம்ம இந்த மோதகத்தை செய்து சாப்பிட்டு இருப்போமா? இல்ல கொழுக்கட்டைகள்தான் பண்ணிருக்கோமா? அந்த மாதிரி வித்தியாசமா நம்ம இன்னைக்கு பீட்ரூட்டை வச்சு எப்படிமோதகம் செய்து சாப்பிட போறோம். பீட்ரூட் மோதகம் எப்படி பண்றங்கறது தான் தெரிஞ்சுக்கஇருக்கோம். இந்த மோதகம் ரொம்ப ருசியா இருக்கிறது மட்டும் இல்லாமல் ரொம்ப ஆரோக்கியமானஒரு மாலை நேர சிற்றுண்டியாவும் இருக்கும். இந்த மோதகம் சின்னவர்கள் முதல் பெரியவங்கவரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு மோதகம்.
Advertisement
Course snacks, sweets
Cuisine Beetroot Mothagam
Keyword Beetroot Modhagam
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 328

Equipment

  • 1 இட்லி பாத்திரம்
  • 1 பெரிய பவுள்

Ingredients

  • 2 கப் பச்சரிசி மாவு
  • 1 பீட்ரூட்
  • 1/4 கிலோ வெல்லம்
  • 12 கப் பாசிப்பருப்பு
  • 1 கப்  தேங்காய் துருவல்
  • 2 ஏலக்காய்

Instructions

  • முதலில் பீட்ரூட்டை தோலை செதுக்கி விட்டு கழுவி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பீட்ரூட் 
    Advertisement
    விழுதை வடிகட்டி கொண்டுசாறை  எடுக்கவும். வடிகட்டிய பீட்ரூட் சாறு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்..
     
  • பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து பாசிப்பருப்பை கழுவி விட்டு குக்கரில் பாசிப்பருப்பை வேக வைக்கவும். பாசிப்பருப்பு வேகும் நேரத்திற்குள் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து வடிகட்டி எடுத்து வைத்துள்ள பீட்ரூட் சாரை சேர்த்து கொதிக்க விடவும்.
  •  பீட்ரூட் சாறு கொதித்து வரும் பொழுது அதில் எடுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சேர்த்து நன்றாக கைவிடாமல் கலந்து விடவும்.  மாவு நன்றாக கெட்டி பதத்திற்கு வந்த பிறகு அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
  • பிறகு அடுப்பில் வேறொரு பாத்திரத்தை வைத்து அதில் வெல்லம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாக கிளறி விடவும். வெல்லம் பாகு பதத்திற்கு வந்த பிறகு அதில் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின்பு அதில் பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்து கிளறி விடவும். குக்கரில் வேக வைத்து இருந்த பாசிப்பருப்பு நன்றாக மசியும் படி வெந்த பிறகு அதை தேங்காய் துருவல் கலந்த பாகில் சேர்த்து நன்றாக கலந்து விடவும். பூரணம் நன்றாக கெட்டியாக வந்த பிறகு அடுப்பை ஆஃப் பண்ணி விடவும்.
  •  பிறகு மோதக அச்சில்  பீட்ரூட் கலந்த மாவை சேர்த்து நன்றாக மோதகம் போல் செய்து கொண்டு அதற்குள் இந்த பாசிப்பருப்பு தேங்காய் பூரணத்தை வைத்து மூடவும்.
     
  • அனைத்து மோதகமும் செய்தபிறகு இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான பீட்ரூட் மோதகம் தயார்.
     

Nutrition

Serving: 100g | Calories: 328kcal | Carbohydrates: 72g | Protein: 7.3g | Fat: 1.3g | Fiber: 11.5g | Iron: 6.3mg
Advertisement
Prem Kumar

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

6 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

16 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago