எலுமிச்சை பழத்தோலை இனி குப்பையில் போடாதீர்கள் ஏன் தெரியுமா ?

- Advertisement -

பொதுவாக சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த பழங்கள் என்று எடுத்து கொண்டால் அதில் அதிகபட்ச நன்மைகள் இருக்கும். ஆம், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் எலுமிச்சை. ஆரஞ்சு பழங்களில் சிட்ரஸ் அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதில் எலுமிச்சை பழத்தை நாம் பல வகைகளில் நாம் வாழ்வில் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம். எலுமிச்சை பழத்தை நாம் சமையலுக்கும் பயன்படுத்துகிறோம், உடல் நலத்திற்கும் பயன்படுகிறது, ஏன் நமது வீட்டில் உள்ள பொருட்களை சுத்த படுத்துவதற்கு கூட பயன்படுத்துகிறோம். இப்படி பல வகைகளில் நமக்கு உதவியாக இருக்கும் எலுமிச்சை பழத்தின் வேலை முடிந்தவுடன் அதன் தோலை நாம் குப்பையில் வீசி எறிந்து இருப்போம். ஆனால் இன்று நான் கூறும் இந்த செய்திகளை கேட்டுக் கொண்டு இனி எலுமிச்சை பழம தோலை குப்பையில் வீச போறிங்களா இல்லையா என்பதனை தீர்மானித்துக் கொள்ளுங்கள். நாம் இன்றைய தொகுப்பில் எலுமிச்சை பழம் தோல் நமக்கு எப்படியல்லாம் பயன்படும் என்பதை பற்றி பார்க்க இருக்கிறோம்.

-விளம்பரம்-
  1. உங்கள் சமையலறையில் கறைபிடித்து இருக்கும் பொருட்களின் அழுக்குகளை நீக்குவதற்கு எலுமிச்சையின் தோல் உதவியாக இருக்கும். எலுமிச்சை பழத்தோலை பேக்கிங் சோடாவில் தடவி அதை வைத்து நம் சமையல் அறையில் கறைபடிந்த பொருட்களை சுத்தம் செய்து கொள்ளலாம்.
  2. வாரம் ஒரு முறை எலுமிச்சை பழத்தோலில் கல் உப்பை சேர்த்து நமது பற்களில் தேய்த்து வந்தால் நமது பற்களின் அழுக்குகளை முற்றிலும் நீக்கி மஞ்சள் கறை இருந்தால் அதையும் போக்கிவிடும்.
  3. நம் உடலில் உள்ள கை, கால் பகுதியில் எலுமிச்சை பழம் தோலை தேய்ப்பதனால் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய பூச்சிகள் நம்மளை ஒருபோதும் நெருங்காது.
  4. எலுமிச்சை தோலை காயவைத்து அரைத்து எண்ணெயுடன் கலந்து சமயலுக்கு உபயோகிக்கலாம். இது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை உண்டாக்கும்.
  5. எலுமிச்சை பழத்தோலை தேனில் ஊற வைத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து அது காய்ந்தவுடன் நீரால் கழுவி எடுத்தால் உங்கள் முகத்திற்கு பொலிவு தரும்.
  6. உங்க வீட்டில் சமையலறையில் குப்பை போடும் இடத்தில் மோசமான வாசனை வரும் அந்த இடத்தில் எலுமிச்சம் பழம் தோலை போட்டு வைத்தால் அந்த மோசமான வாசனை சுத்தமாக வராது.
  7. எலுமிச்சை பழத்தின் தோலை தேங்காய் துருவது போல் துருவி அதனை நான் தயாரிக்கும் காய்கறி பானங்கள் மற்றும் ஜூஸ்கள் போன்றவற்றில் சேர்த்து பருகி வந்தால் உடல் நலம் மேம்படும்.
  8. எலுமிச்சை பழத்தின் உள்ளே எவ்வளவு நன்மைகள் உள்ளதோ அதை காட்டிலும் எலுமிச்சை பல தோலில் பல நன்மைகள் உள்ளன. எலுமிச்சை பல தோலை நாம் சாப்பிட்டு வந்தால் நம்ம உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here