Advertisement
சைவம்

வீடே மணக்க மணக்க கேரட் பட்டாணி சாதம் இப்படி செய்து பாருங்க! அருமையான டிபன் பாக்ஸ் ரெசிபி!

Advertisement

வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த கேரட் பட்டாணி சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இது குழந்தைகளுக்கான சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். கேரட் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுவதோடு இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் செய்யும். எளிதில் செரிமானம் ஆக கூடும். நார்ச்சத்து நிறைந்தது.

குழந்தையின் செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கலை தடுக்கிறது. இதில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் கண் பார்வைக்கு மிகவும் நல்லது. குழந்தையின் சருமத்தை ஆரோக்கியமாக வைக்க செய்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு வெரைட்டி ரைஸ் என்றால் அதில் இந்த கேரட் பட்டாணி சாதத்திற்கு முதலிடம் உண்டு. கேரட் சாதம் தானே, எல்லோருக்கும் செய்ய தெரியுமே. ஆனால், வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை இந்த கேரட் பட்டாணி சாதத்தை ட்ரை பண்ணி பாருங்க. சுவையிலும் மணத்திலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும். இந்த கேரட் பருப்பு சாதத்தை உருளைக்கிழங்கு வருவல், வெண்டைக்காய் பொரியல், மற்றும் அப்பளத்துடன் பரிமாறலாம்.

Advertisement

கேரட் பட்டாணி சாதம் | Carrot Pattani Sadam Recipe In Tamil

Print Recipe
வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா இனி காலையில் இந்த கேரட் பட்டாணி சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுத்து விடுங்கள். உடலுக்கு நல்ல சத்துக்கள் அளிக்கும்.! இது குழந்தைகளுக்கான சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய உணவு. குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். கேரட் சாதம் தானே, எல்லோருக்கும் செய்ய
Advertisement
தெரியுமே. ஆனால், வழக்கம் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இப்படி ஒரு முறை இந்த கேரட் பட்டாணி சாதத்தை ட்ரை பண்ணி பாருங்க. சுவையிலும் மணத்திலும் நிச்சயம் வித்தியாசம் இருக்கும். இதனை பிரஷர் குக்கரில் செய்யலாம். இது விரைவாக செய்யக் கூடிய உணவு. ஆகையால் அலுவலகம் செல்வோருக்கும், குழந்தைகளின் மதிய உணவிற்கும் ஏற்றதாகும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Carrot Pattani Sadam
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Advertisement
Servings 4 People
Calories 52

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்

Ingredients

  • 1 கப் அரிசி
  • 1/2 கப் மஞ்சள் பட்டாணி
  • 100 கி கேரட்
  • 2 பெரிய வெங்காயம்
  • 5 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • புதினா, கொத்தமல்லி சிறிதளவு

Instructions

  • முதலில் அரிசியை நன்கு கழுவி விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து கொள்ளவும். பட்டாணியை இரவு முழுவதும் ஊற வைத்து கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இதன் பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்‌.
  • தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், பிரியாணி தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பின் ஊறவைத்த பட்டாணி, நறுக்கிய கேரட் சேர்த்து வதக்கவும்.
  • பின் ஊறவைத்த அரிசியை தண்ணீர் வடிந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி குக்கரை மூடி 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான கேரட் பட்டாணி சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 52kcal | Carbohydrates: 6g | Protein: 8g | Fat: 2g | Sodium: 69mg | Potassium: 320mg | Fiber: 2.5g | Vitamin A: 72IU | Vitamin C: 6.22mg | Calcium: 69mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : சுவையான கேரட் பாதாம் போளி வீட்டிலயே சுலபமாக செய்து எப்படி தெரியனுமா? தெரியாதவுங்க தெரிஞ்சிகொங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

குளு குளுனு 90’Kids தேங்காய் பால் குச்சி ஐஸ் அடுப்பு பக்கமே போகாம சுலபமாக இப்படி செய்து பாருங்க!

ஐஸ் ஐஸ் ஐஸ் பால் ஜஸ் , சேமியா ஐஸ் 90ஸ் கிட்ஸோட பிடித்தமான சத்தம் அப்படினு சொல்லலாம். இப்பல்லாம்…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 21 மே 2024!

மேஷம் புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பணம் பற்றாக்குறையால் இன்று வீட்டில் வேற்றுமை காணப்படும். வேலையில் நல்ல…

10 மணி நேரங்கள் ago

மணமணக்கும் ருசியான கேரட் புலாவ் ஈஸியாக பதினைந்தே நிமிடத்தில் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!

புலாவ் உலகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கும் ஒரு உணவு வகை. பொதுவாக வெரைட்டி ரைஸ் என்றாலே குழந்தைகள் அதிகம் விரும்பி…

1 நாள் ago

காலை வேளையில் உடல் சூட்டை குறைக்கும் இந்த வெந்தய களியை ஒரு முறை செய்து கொடுங்கள் பின் அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்!!!

அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பல உணவு பொருள்கள், நமக்கு மருந்தாகவும் பயன்படக்கூடியவை. அதில் வெந்தயத்திற்கு மிக முக்கிய இடம் உண்டு.…

1 நாள் ago

விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்

விரதம் என்ற சொல்லுக்கு பலவகையான அர்த்தங்கள் உள்ளது என்று சொல்லலாம். நோன்பு உபவாசம் உணவை தவிர்த்தல் என்று பல சொற்களால்…

2 நாட்கள் ago

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

2 நாட்கள் ago