Advertisement
சைவம்

மென்மையான மற்றும் மிருதுவான சப்பாத்தி எப்படி செய்வது ?

Advertisement

சப்பாத்தி என்று எடுத்துக் கொண்டால் நமக்கு முதலில் சிந்தனைக்கு வருவது உடல் இடையே குறைப்பதற்கு சப்பாத்தி சிறந்த உணவாக இருக்கும் என்ற அனைவரும் கூறுவார்கள். மேலும் சப்பாத்தியை சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். வட இந்தியாவில் உள்ள மக்கள் சாப்பிடும் முக்கிய உணவுப் பொருளாக இருப்பது இந்த சப்பாத்தி தான்.

இதையும் படியுங்கள் : புதுவிதமான சுவையுடன் வாழைப் பூ சப்பாத்தி செய்வது எப்படி ?

Advertisement

என்னென்றால் அவர்கள் விளை நிலங்களில் கோதுமை தான் அதிகமாக விளையும். இவர்கள் இந்த சப்பாத்தியை பல்வேறு வகையில் தயார் செயாது அதற்கு பல விதமான சட்னிகளை செய்து சாப்பிடுவார்கள். மேலும் அவர்கள் தயார் செய்யும் சப்பாத்திகள் மெதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். இப்படி மென்மையான சப்பாத்தி எப்படி செய்வது என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்க தான் செய்யும். ஏனென்றால் நாம் சுடும் சப்பாத்திகளோ பெரும்பாலும் கடினமாக வந்துவிடும் ஆகையால் இன்று மென்மையான சப்பாத்தி எப்படி செய்வது என்ற சமையல் குறிப்பை இந்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

அப்படியே மறக்காம எங்க YouTube சேனலையும் Subscribe பண்ணிருங்க.

சப்பாத்தி செய்யும் டிப்ஸ்

நாம் 1 கப் கோதுமை மாவு எடுக்கும் பட்சத்தில் அதோட 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவையும், 1/2

Advertisement
டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் தேவையான அளவு உப்பு சேர்த்து. இதனுடன் சூடான நீரையும் ஊற்றி சேர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சப்பாத்தி மெதுவாக இருக்கும். மேலும் சப்பாத்தி சாப்டாக இருப்பதற்கு அரை டம்ளர் பால் சேர்த்து
Advertisement
பிசைந்தால் நாம் தயார் செய்யும் சப்பாத்தி சாப்டாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

நாம் இப்படி அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலந்து பிசைந்த சப்பாத்தி மாவை குறைந்தது அரை மணி நேரத்திற்கு மேல் ஊற வைக்க வேண்டும். பின்பு தேவைப்பட்ட வடிவத்தில் உருண்டை பிடித்து சப்பாத்தி பேப்பர் போல தேய்த்துக் கொள்ள வேண்டும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சப்பாத்தியை போட்டு சிறிதளவு எண்ணெய் சேர்த்து இரண்டு பக்கமும் பிரட்டி எடுத்துக் கொண்டால் சப்பாத்தி மென்மையாக இருக்கும்.

பின்பு சப்பாத்தி தோசை கல்லில் போட்டு எடுத்து விட்டு தோசை கல்லை இறக்கி விட்டு நேரடியாக சப்பாத்தியின் இருபக்கம் அடுப்பில் காட்டி எடுத்தால் சப்பாத்தி பலூன் போல் இன்று உப்பி சாப்ட்டாக வரும். இந்த முறைகளை வைத்து நீங்கள் சப்பாத்தி செய்தால் ஒன்றுக்கு இரண்டு சப்பாதியாக சாப்பிடுவீர்கள்.

Advertisement
Prem Kumar

Recent Posts

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

9 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

10 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

12 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

16 மணி நேரங்கள் ago

பெங்காலி மஸ்டர்டு சிக்கன் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! இதன் சுவை அசத்தலாக இருக்கும்!!

இன்று உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? சற்று வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? உங்களுக்கு பெங்காலி ரெசிபிக்கள்…

17 மணி நேரங்கள் ago

இந்த ருசியான எலுமிச்சை பருப்பு ரசத்தை மட்டும் ஒருமுறை சுவைத்து விட்டால் போதும்! பிறகு சாம்பார், குழம்பு, எதுவுமே தேவை படாது!!!

பாரம்பரிய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ரசம். நம் உணவில் தவற விடக்கூடாத ஒரு பொருள் ரசம். விருந்து நிகழ்ச்சிகள்…

17 மணி நேரங்கள் ago