Advertisement
அசைவம்

முனியான்டி விலாஸ் சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?

Advertisement

நாம் எவ்வளவு தான் ருசியாகவும் மணமாகவும் சமைத்தாலும் வீட்டில் உள்ள ஒரு சில நபர்கள் எப்பொழுதும் ஹோட்டல் சுவையில் வைக்கும் குழம்புகளையோ கிரேவிகளையோ நான் அதிகமாக விரும்புவார்கள். அப்படி பட்டவர்களுக்கு நீங்கள் அதை சுவையில் குழம்பு தயார் செய்வது சற்று கடினமாக தான் இருக்கும். ஆனால் இன்று பிரபலம் வாய்ந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் வைக்கப்படும் சிக்கன் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

இதையும் படியுங்கள் : வீடும் மணக்கும் சாப்பிட்ட கையும் மணக்கும் வகையில் சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

Advertisement

முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் சுவையினை அனைவரும் அறிந்திருப்பீர்கள் மிகவும் அற்புதமான சுவையில் அனைத்து உணவுகளும் தயார் செய்திருப்பார்கள். இன்று அது போன்று முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு அதே எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் இன்று நாம் காணலாம் வாருங்கள்.

முனியான்டி விலாஸ் சிக்கன் குழம்பு | Muniyandi Villas Chicken Kulambu Recipe in Tamil

Print Recipe
இன்று பிரபலம் வாய்ந்த முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் வைக்கப்படும் சிக்கன் குழம்பு பற்றி தான் பார்க்க இருக்கிறோம் முனியாண்டி விலாஸ் ஹோட்டலில் சுவையினை அனைவரும் அறிந்திருப்பீர்கள் மிகவும் அற்புதமான சுவையில் அனைத்து உணவுகளும் தயார் செய்திருப்பார்கள். இன்று அது போன்று முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு அதே எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் இன்று நாம் காணலாம் வாருங்கள்.
Course Kulambu
Cuisine Indian, TAMIL
Keyword chicken kulambu, சிக்கன் குழம்பு
Prep Time 20 minutes
Cook Time 30 minutes
Total Time 50 minutes
Servings 4 People
Calories 239

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 2 பவுள்

Ingredients

வறுத்து அரைக்க

  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 2 ஏலக்காய்
  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp அரிசி
  • 1 tbsp பொட்டு கடலை
  • 1 tbsp கசகசா
  • 1 கொத்து கருவேப்பிலை
  • ½ கப் துருவிய தேங்காய்
  • 2 tbsp மல்லித் தூள்
  • ½ tbsp சீரகத்தூள்
  • ½ tbsp மிளகுத்தூள்
  • 1 tbsp மிளகாய் தூள்

குழம்புக்கு

  • ½ KG சிக்கன்
  • 3 tbsp கடலை எண்ணெய்
  • 2 பச்சை மிளகாய் கீரியது
  • 2 கொத்து கருவேப்பிலை
  • 2 பெரிய வெங்காயம் நறுக்கியது
  • 1 tbsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 தக்காளி நறுக்கியது
  • ½ tbsp மஞ்சள் தூள்
  • 3 tbsp உப்பு
  • கொத்த மல்லி சிறிது
  • 2 கப் தண்ணீர்

Instructions

  • முதலில் கடாயை அடுப்பில் வைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை அரிசி சேர்த்து ஒரு 15 வினாடிகள் நன்றாக வறுத்துக் கொள்ளவும் அதன் பிறகு கசகசா, 1 கொத்து கருவேப்பிலை சேர்த்து வறுக்கவும்.
  • பின் கருவேப்பிலை நன்றாக வறுபட்டதும் துருவிய தேங்காய், மல்லி தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் மிளகாய்த்தூள் போன்ற பொருட்கள் எல்லாம் சேர்த்து தேங்காய் நன்றாக வறுபடும் வரையில் வதக்கிக் கொள்ளுங்கள்.
  • பின்பு
    Advertisement
    அனைத்து பொருட்களும் நன்றாக வறுத்து எடுத்ததும் கடாயை இறக்கி பொருட்களை குளிர வைத்துக் கொள்ளுங்கள். பொருட்கள் நன்கு குளிர்ந்த உடன் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள் எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கீறிய பச்சை மிளகாய் இரண்டு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக பிரட்டி விட்டுக் கொள்ளவும்.
  • பின் பொடியாக நறுக்க பெரிய வெங்காயத்தையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் வெங்காயம் பொன்னிறமாக வரும் அதை வதக்கி கொண்டு. அதன் பின் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  • தக்காளி மெண்மையாக மசிந்து வந்ததும் அதனுடன் மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விடவும். பின் நாம் சுத்தம் செய்துள்ள சிக்கனை இதனுடன் சேர்த்து ஒரு இரண்டு நிமிடங்கள் நன்றாக வதக்கி விட்டுக் கொள்ளுங்கள்.
  • பின்பு நாம் வறுத்து அரைத்த மசாலாவையும் இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விடுங்கள். பின் இரண்டு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டு, இரண்டு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள்.
  • பின்பு கடாயை மூடி வைத்து ஒரு 15 நிமிடங்கள் சிக்கனை வேக வைத்துக் கொள்ளுங்கள், அதன் பின் கடாயை திறந்து சிறிது கொத்தமல்லி இலையை தூவி கடாயை இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் ருசியான முனியாண்டி விலாஸ் சிக்கன் குழம்பு இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4people | Calories: 239kcal | Protein: 27g | Fat: 14g | Cholesterol: 88mg | Sodium: 82mg | Potassium: 223mg
Advertisement
Prem Kumar

Recent Posts

கடாய் சிக்கன் சாப்பிட இனிமேல் கடைக்கு போகணும் என்ற அவசியம் இல்லை வீட்டில் சூப்பரா செஞ்சு சாப்பிடலாம்!

சிக்கன்ல நம்ம என்ன வெரைட்டி செஞ்சு கொடுத்தாலும் ரொம்பவே விரும்பி சாப்பிடுவோம் அந்த வகையில் இன்னைக்கு நம்ம வீட்ல இருக்கிற…

1 மணி நேரம் ago

வாயில் கரைந்தோடும் சுவையில் சூப்பரான ஷாகி துக்டா வீட்டிலேயே இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஷாகி துக்டா அப்டின்னா சில பேருக்கு என்னன்னே தெரியாது.ஆனா ஒரு சிலர் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.பிரட் வச்சு செய்ய கூடிய…

3 மணி நேரங்கள் ago

அருமையான பிரயாணி சாப்பிட ருசியான மலபார் சிக்கன் பிரியாணி இப்படி வீட்டில் ஈஸியாக செய்து பாருங்க!

அசைவ பிரியர்கள் அனைவருக்குமே பிரியாணி என்பது மிகவும் பிடித்த உணவு ஆகும். அதிலும் குறிப்பாக சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா…

8 மணி நேரங்கள் ago

வெயிலுக்கு வெள்ளரி ஜூஸ் இப்படி ஒரு தடவை போட்டு குடிச்சு பாருங்க!

பொதுவாகவே தண்ணீர் பழம் வெள்ளரிக்காய் இதுல எல்லாத்துலயும் நிறைய தண்ணீர் இருக்கும் இத தண்ணீர் பழங்கள் அப்படின்னு சொல்லலாம் இந்த…

11 மணி நேரங்கள் ago

சேமியா பொங்கல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க சேமியா பிடிக்காதவங்க கூட கேட்டு கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க!

சேமியா உப்புமாவா?? என்று அலறி அடித்து ஓடுபவர்களுக்கு சேமியாவில் இது போல ஒருமுறை நீங்கள் பொங்கல் செய்து கொடுத்தால் ரொம்பவே…

12 மணி நேரங்கள் ago

காலை டிபனுக்கு ருசியான டர்கிஷ் ப்ரெட் இப்படி செய்து கொடுங்க! டக்குனு காலை டிபன் ரெடி செஞ்சிடலாம்!!

டர்கிஷ் பிரட் டோஸ்ட் வழக்கமான டிபன் வகைகளில் இருந்து சற்றே வேறுபட்டது. இதனை மிகவும் சுலபமாக 10 முதல் 15…

12 மணி நேரங்கள் ago