அதிக கொழுப்பினால் நம் உடலில் என்னென்ன பாதிப்புகள் வரும் தெரியுமா ? உயிரே போக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

இன்றைய நவீன காலத்தில் அதிகமாக நமக்கு ஏற்படும் பிரச்சனைகள் அனைத்துமே உடல் உழைப்பு நம்மிடம் இருந்து வெகுவாக குறைந்து வருவதை முக்கிய காரணமாகின்றது. முன்பெல்லாம் நாம் செய்யும் அனைத்து வேலைகளிலும் உடல் இயக்கம் இருந்து வருந்ததால் நம் உடல் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாம் அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்றால் கூட நடந்து செல்லாமல் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தி வருகிறோம். இப்படி உடல் உழைப்பே இல்லாமல் நாம் வாழ்வதால் உடலில் கொழுப்பு சார்ந்த பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். அது மட்டுமில்லாமல் நம்முடைய உணவு பழக்க வழக்கங்கள், புகை பிடித்தல், மது அருந்துதல் போன்று சில பழக்கவழக்கங்களாலும் நமது உடலில் கெட்ட கொழுப்புகள் அதிகப்படியாக இருக்கின்றன. இன்றைய உடல்நல தொகுப்பில் இந்த அதிகப்படியான கெட்ட கொழுப்புகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

-விளம்பரம்-

உயிரிழப்பு

இந்த உலகில் ஆண்டுதோறும் 2.6 மில்லியன் மக்கள் ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ரோக் போன்ற இதயம் தொடர்பான பிரச்சனைகளால் உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது நம் உடலில் இருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்புகள் தான்.

- Advertisement -

நல்ல கொழுப்பு

நமது உடம்பில் இரண்டு வகையான கொழுப்புகள் இருக்கும் முதலில் கொழுப்பு என்பது நாம் ரத்தத்தில் வேக்ஸ் போல இருக்கும் ஒரு பொருள். நம் உடம்பில் இருக்கும் நல்ல கொழுப்புகள் உடம்பில் ஆரோக்கியமான செல்களை உருவாக்கி நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு வழி வகுக்கும்.

கெட்ட கொழுப்பு

நம் உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்பு நம் உடம்பில் உள்ள ரத்த நாளங்களில் படிப்படியாக படிந்து நம் உடல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்தத்தை போகவிடாமல் தடுக்கும். நாளடைவில் ஒரு சமயத்தில் இது கட்டியாக மாறி ரத்த நாளாக்களை அடைக்கும் போது நமக்கு ஹார்ட் அட்டாக் மற்றும் ஸ்ரோக் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

ஸ்லோ பாய்சன்

மேலும் நம் உடம்பில் அறிகுறிகளை இல்லாமல் ஸ்லோ பாய்சன் மாதிரி நம் உடலில் இருந்து உயிரைக் குடிக்கும் சில பிரச்சனைகளும் வரும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இது போன்ற பிரச்சனைகள் நம்மளை சத்தமே இல்லாமல் கொன்றுவிடும்.

-விளம்பரம்-

அறிகுறிகள்

முதலில் நம் உடலில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான அறிகுறிகள் என்பது சிறிதளவும் தென்படாது. இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் பட்ச்சத்தில் நம் உடம்பில் பெரிய பெரிய பாதிப்புகள் எல்லாம் உண்டாகும்.

கால்களை பாதிக்கும்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நமது பின்னங்கால் பகுதியில் இருக்கும் ரத்த நாளங்கள் படிப்படியாக அடைக்க ஆரம்பித்து. கடைசியில் முழுமையாக அடைக்கப்பட்டு ரத்த ஓட்டம் முற்றிலுமாக குறைந்து விடும் பின்பு நாம் நடக்கும்போது கால்களில் சாதாரணமாக வலி, நடக்கும் போது வலி, மற்றும் தோள்பட்டை வலி போன்றவை எல்லாம் ஏற்படும்.

மருத்துவரை அனுகவும்

என்னதான் அதிகப்படியான கொலஸ்ட்ரால் நம் உடம்பில் இருப்பது அறிகுறிகள் மூலம் நமக்கு தெரியவில்லை என்றாலும். அடிக்கடி மருத்துவரை சந்தித்து ரத்த பரிசோதனை செய்து கொள்வது உங்களுக்கு மிகவும் நல்லது. பின்பு மருத்துவரின் பரிந்துரைப்படி உணவு பழக்கம், எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற பழக்கவழக்கங்களையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here