Advertisement
ஸ்வீட்ஸ்

வெறும் 60 ரூபாய் செலவில் சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி ?

Advertisement

இன்று நாம் வெறும் ₹60 ரூபாய் செலவில் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் குறிப்பாக குழந்தைகள் எனக்கு இன்னும் வேண்டும் என்று விரும்பி கேட்டு வாங்கி சாப்பிடும் அளவிற்கு சுவையான தேங்காய் பர்பி தான் செய்து பார்க்க போகிறோம். இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக செய்துவிடலாம் உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த தேங்காய் பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே

இதையும் படியுங்கள் : வாயில் வைத்த உடன் கரையும் நெய் மைசூர் பாக் செய்வது எப்படி ?

Advertisement

இது போன்ற தேங்காய் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய் பர்பி சுலையாக இருக்கும். அதனால் இன்று இந்த தேங்காய் பர்பி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

தேங்காய் பர்பி | Coconut Barfi Recipe in Tamil

Print Recipe
இந்த தேங்காய் பர்பி எளிமையான முறையில் வேகமாக செய்துவிடலாம் உங்கள் குழந்தைகள் கடைகளில் பாக்கெட்டுகளில் விற்கும் இந்த தேங்காய் பர்பியை வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் வீட்டிலேயே இது போன்ற தேங்காய் பர்பி செய்து கொடுத்தால் பாதுகாப்பானதாகவும் இருக்கும் அதே நேரத்தில் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுபவர்கள் அடுத்த முறையும் இதே போல் உங்களை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய் பர்பி சுவையாக இருக்கும்.
Advertisement
Course sweets
Cuisine Indian, TAMIL
Keyword Coconut Barfi, தேங்காய் பர்பி
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 6 people
Calories 40

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய தட்டு

Ingredients

  • 2 கப் சர்கரை
  • தண்ணீர் சர்க்கரை முழ்கும் வரை
  • 3 கப் துருவிய தேங்காய்
  • ¼ tbsp ஏலக்காய் தூள்
  • 2 tbsp நெய்

Instructions

  • முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் அளவிற்கு சர்க்கரையை சேர்த்து பின்
    Advertisement
    சர்க்கரை மூழ்கும் அளவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தீய அதிகமாக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் சர்க்கரை முற்றிலும் கரைந்து சர்க்கரை கரைசல் கொதித்து நுறை நுறையாக வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். அதன் பின் சர்க்கரை கரைசல் கொதித்து வந்ததும் இதனுடன் நாம் துருவி வைத்திருக்கும் மூன்று கப் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
  • பின் தேங்காய் சேர்த்ததும் கடாய் அடி பிடிக்காமல் இருப்பதற்காக நீங்கள் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். அதன் பின்பு தேங்காய் நன்கு வெந்து வரும் சமயத்தில் இதனுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பொடி மற்றும் இரண்டு டீஸ்பூன் அளவிற்கு நெய் சேர்த்து கிளறி விடுங்கள்.
  • அதன் பின்பு பர்பி அல்வா பதத்திற்கு வரும் வரை கிளறிக் கொண்டே இருங்கள் பின் தேங்காய் பர்பி அல்வா பதத்திற்கு கடாயில் ஒட்டாமல் வந்ததும் ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவி அதனுடன் தேங்காய் பர்பியை சேர்த்து சமமாக்கிக் கொள்ளுங்கள்.
  • பின் 30 நிமிடம் கழித்து பர்பி கட்டியாக மாறியதும் அதை உங்களுக்கு தேவையான அளவு துண்டுகளாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சாப்பிட சாப்பிட கொடுத்து, நீங்களும் உங்கள் குடும்பத்துடன் சாப்பிடலாம். அவ்வளவு தான் சுவையான தேங்காய் பர்பி இனிதை தயாராகி விட்டது.

Nutrition

Serving: 500gram | Calories: 40kcal | Carbohydrates: 15g | Protein: 7g | Saturated Fat: 1.1g | Cholesterol: 2mg | Potassium: 86mg | Fiber: 8g | Sugar: 12g
Advertisement
Prem Kumar

Recent Posts

ஜவ்வரிசி கிச்சடி இப்படி செய்து பாருங்க! எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவார்கள்!

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையில் இருக்கும். ஒரு உணவை சமைக்கும் பொழுது அதில் சேர்க்கும் மசாலாப் பொருட்கள், இவற்றை…

2 மணி நேரங்கள் ago

எவ்வளவு செய்தாலும் காலியாகும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கீர் இப்படி ட்ரை பண்ணி பாருங்க கொஞ்சம் கூட மிஞ்சாது!

இதுவரை நீங்கள் சேமியா கீர், கேரட் கீர், பூசணி கீர், ரவை கீர் தான் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் சர்க்கரை…

3 மணி நேரங்கள் ago

ருசியான உருளைக்கிழங்கு கொஸ்து இப்படி செய்து பாருங்க!

சுடச்சுட சாதத்தில் இந்த உருளைக்கிழங்கு கொஸ்து போட்டு பிசைந்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். தேவைப்பட்டால் ஒரு சொட்டு நெய்யை விட்டு…

3 மணி நேரங்கள் ago

சிக்கன் சமோசா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க!

வடை போண்டா பஜ்ஜி சமோசா அப்படின்னு எல்லாமே பெரும்பாலும் கடைகள்ல தான் வாங்கி சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்போ எல்லாம்…

5 மணி நேரங்கள் ago

கோடை காலத்திற்கு ஆரோக்கிய பானமாக, குடிப்பதற்கு சுவையாக சப்போட்டா ஆப்பிள் ஸ்மூதி இப்படி செய்து பாருங்க!!

நாம் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியாது. அதனால்தான் விரைவான மற்றும் சத்தான ஸ்மூத்தி ரெசிபியைக் கொண்டு வருகிறோம், அது…

8 மணி நேரங்கள் ago

அட்சய திரிதியை அன்று தங்கத்தை தவிர அதிர்ஷ்டம் வருவதற்கு வாங்க வேண்டிய மற்ற பொருட்கள்

அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்றாலும் பொருளாதார சூழலால் அனைவராலும் எளிதாக தங்கத்தை வாங்க முடியாது.…

8 மணி நேரங்கள் ago